தாடி பற்றி எரிய, பீடிக்கு நெருப்புக்கேட்டானாம்..!!!

இந்தமாதிரி ஒரு பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகின்றது….

காரணம், Torontoவில் உள்ள ஒரு இந்து கோயிலின் அறிவித்தல் பலகையில் கீழ்க்கண்ட வசனம் காணப்பட்டது:

தற்போது தலைவர் பிரபாகரனுக்கு காலம் சரியில்லை, அவரது விருச்சிகராசி – கேட்டை நட்சத்திரப்படி அவருக்கு கூடாது! எனவே மக்களே அவர் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்

அய்யா பூசாரிமாரே! எம்.ஜி.ஆர் சுகயீனமாகி அமெரிக்காவில் உள்ள புருக்னிக் மருத்துவ மனையில் இருந்த போது, இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் அங்குள்ள பூசாரிமாரே யாகம் எல்லாம் செய்து, ஆறுகால பூஜைகள் எல்லம் செய்து அந்த மகனை காப்பாற்றினர். (கடவுள்மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர்)

அது மட்டும் இல்லாமல், முஸ்லீம்களும், கிறிஸ்த்தவர்களும் கூட பிராத்தனைகளை அவரவர் வழிபாட்டு இடங்களில் மேற்கொண்டிருந்தனர். தாமாகவே யாகங்களையும், வழிபாடுக்ளையும் ஏற்பாடு செய்துவிட்டு, மக்களே வாருங்கள்… எம் தலைவனுக்காக வந்து வழிபடுங்கள்… என்றுதான் கூறினார்கள்! அந்த வேளை யாருமே அர்ச்சினை செய்து தமது கல்லாவை நிறப்ப முற்பட்டதில்லை.

அப்படி இருக்க, இங்கு மக்களை அர்ச்சினை செய்யச் சொல்கின்றீர்களே…! ஏன் நீங்கள் இலவசமாக ஒரு பெரிய அர்ச்சினை செய்யலாமே? அல்லது ஒரு யாகம் தன்னும் செய்யலாமே?

இன்றைய காலகட்டத்தில் வீட்டையும் பார்த்து, நாட்டையும் பார்த்துக்கொண்டு ஒன்றுக்கு இரண்டு வேலைகளை செய்யும் எம் தமிழ் உறவுகளிடம் இருந்து நீங்கள் இதற்கும் காசு கறக்க நினைக்கின்றீர்களே…

நீங்கள் பீடி குடிக்காவிடிலும், ‘தாடி பற்றி எரிய, பீடிக்கு நெருப்புக்கேட்டானாம்’ என்னும் இந்த பழமொழியின் ஆளம் நிச்சயம் உங்களுக்கு புரியும் என நம்புகின்றேன்.

முன்னர் ஒருமுறை Torontoவில் நடந்த யாகம் படம் கீழே,

இவ் யாகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கோயில் நிர்வாகத்தினர், இதன் மூலம் சேர்க்கப்படும் நிதியானது வன்னிப் பெருநிலப்பரப்பிலே தொடர்ச்சியான சிறீலங்கா அரசின் இனவழிப்புக் கொடுஞ்செயலால் அவதியுறும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்