செவ்வாய், ஏப்ரல் 21st, 2009


2009_Aug_10_103718__111

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 21.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை பாலமணி தம்பதிகளின் அன்புமகனும், தங்காதேவியின் அன்புக்கணவரும், உதயகுமார்(இந்தியா), கலாராணி(சுவிஸ்), உதயராணி(லண்டன்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் யோகேஸ்வரராஜா கலாராணி சுவிஸ்

உதயகுமார் – இந்தியா 0091 4312782342
கலாராணி – சுவிஸ் 0041 617022714
உதயராணி – லண்டன் 0044 2086460086

முன்னர் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை ஏற்று கைஒப்பமிட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி!

பல நேயர்கள் புகார் என்னும் தலைப்பிற்கு அப்பாற்பட்டு தமது உணர்ச்சிகளை, ஆதங்கங்களை எல்லம் எழுதியுள்ளனர்.

ஆனால் அவை எல்லாம், நோக்கம் புரியாமல் இடப்பட்ட கைஒப்பமாகவே ஓபாரா அம்மையாரால் விளங்கிக்கொள்ளப்படும். எனவே அந்த பக்கம் ஏற்பாட்டாளர்களால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு- கருத்துக்கள் எழுதும் பகுதி நீக்கப்பட்டு புதிதாக இந்த புகார் பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் உணர்ச்சி வசப்பட்டு சொதப்பிவிட்டார்கள்…உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அதற்கு இது அல்ல இடம் அன்பு உள்ளங்களே…

கண்டதையும் எழுதி கருவைக் குலைக்காமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இதோ அந்த புதிய கைஒப்பம் இடும் பகுதி

இது ஓபாரா அம்மையாருக்கு எழுதப்பட்ட கடிதம்

இது இதுவரை கைஒப்பம் இட்டவர்களின் விபரம்(கிளிக் பண்ணியவுடன் தோன்றும் பக்கத்தில் காணப்படும் எண்ணிக்கையை கிளிக் பண்ணுவதுவதன் மூலம் விபரமாக பார்க்கலாம்)

எதிராக சிங்களவர் இட்ட கைஒப்பங்களை இங்கு கிளிக் பண்ணிப்பாருங்கள்(கிளிக் பண்ணியவுடன் தோன்றும் பக்கத்தில் காணப்படும் எண்ணிக்கையை கிளிக் பண்ணுவதுவதன் மூலம் விபரமாக பார்க்கல்லாம்)

 

 

நேற்று இட்ட பகுதி கீழே….

www.PetitionOnline.com என்னும் ஒரு புகார் கூற்றும் வலைத்தளத்தில் ஓப்ரா அம்மையாரை சந்திக்கச்செல்லும் தமிழ் மாணவர்களை சந்திக்கக்கூடாது என்று சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் புகார் இடுகின்றனர். ஆனால் இந்த தமிழ் மாணவர்களுக்காக செற்ப வேண்டுகோளே தமிழர்களால் விடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை எழுதும் வரை தமிழர்கள் இட்ட கைஒப்பங்கள் வெறும் 258. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்களவர்கள் இட்ட கைஒப்பம் 17643. இது கிட்டத்தட்ட 68 மடங்கு அதிகம்!

நடைப்பயணம் மேற்கொள்ளும் இந்த தமிழ் மாணவர்கள், இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும். அங்கு கொல்லப்படும் அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள, இம் மாணவர்களையே  பயங்கர வாதிகள் என்று பலர் தமது கைஒப்பங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர் சிங்களவர்.

இது இருந்த இடத்தில் இருந்து செய்யப்படும் வேலை. நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?

இன்று ஓட்டாவானில் நடைபெறப்போகும் உரிமைப்போரில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றோர் சமுகம் தருவார்கள் என எண்ணப்படுகின்றது.

காலை வெப்பநிலை 4°C ஆக இருந்தாலும் Feels Like -1 °C என்னும் நிலையில் இருந்து மதியம் 11°C வரை உயரும் நிலையிலும் மெல்லியதாக மழை தூறலும் காணப்படப்போகின்றது.

மறக்காமல் அனைவரும் Rain Coat ஐ எடுத்துச் செல்லுங்கள் . மழைக்கு குடையைவிட Rain Coat தான் சாலச்சிறந்தது. காரணம் கூட்டத்திலுள் குடைபிடிப்பதை விட Rain Coat தான் செளகரிகமானது.

இன்னும் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளவேண்டும். இன்று வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படப் போகின்றது. பல வேற்று இன மீடியாக்கள் பலதரப்பட்ட மக்களை பேட்டிகாண முயலுவார்கள். அவர்களிடம் ஆணித்தரமாக எம் உணர்வினையும், உரிமையினையும், உண்மையினையும் எடுத்துக்கூறுவதற்கு தயாராக செல்லுங்கள். மீடியாக்கள் உங்களை  பேட்டி காண்பார்கள் என்றே நினைத்து, அதற்கு ஏற்றாற்போல் நாலுவரியை மனப்பாடம் செய்தாவது செல்லுங்கள். தயவுசெய்து மீடியாக்களிடம் சொதப்பிவிடாதீர்கள்.