நேற்று நடைபெற்ற CGKW தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலுக்கு Conservative MPயான மரியாதைக்குரிய Stephen Woodworth அவர்கள் தமது நெருக்கடியான நேரப்பழுவிலும் எம்மோடு இணைந்து கொண்டு எம்மக்களின் வேண்டுகோளையும், தனது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.  நாம் எதிர்பார்த்தது போல் எம் தமிழ் உறவுகள் அனனவரும் வந்து ஒரு மிகப்பெரிய ஆதரவினைத் தந்து, அந்த ஒன்றுகூடலை ஒரு ஆக்க பூர்வமான நிகழ்வாக அமைத்துக்கொடுத்தனர். எனவே அனைத்து CGKW தமிழர்களுக்கும் ஒருமுறை நன்றிகள்!

அங்கு என்றும் இல்லாதவாறு வெள்ளை இனத்தவர் சமூகம் அளித்து எமக்கு ஆதரவைத் தந்ததை இங்கு மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அங்கு எம் தமிழ் மக்களின் வரலாற்றை பெரிய திரையில் படமாக ஒளிபரப்பியும், பலரது சிறப்பான நாவன்மையினாலும், அங்குவந்திருந்த மக்களின் ஒற்றுமையினாலும் இந்த Conservative MPயான Stephen Woodworth ஐ எம்பால் ஈர்த்துவிட்டோம் என்று தான் கூறவேண்டும்!  இதன் பலனாக இன்றிலிருந்து கனடியப் பாராளுமன்றத்தில் எமக்கு ஒத்தாசையாக இந்த MP இனி விளங்குவார். இந்த மகத்தான செயல்/பெருமை Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo வாள் தமிழ் மக்களையே சாரும்!

மிகவும் சிறிய எண்ணிக்கையில் தமிழ் மக்களைக்கொண்ட இந்த பிரதேசத்தில் இவர்கள் செய்த காரியம் மலையை நகர்த்திய எறும்புகளுக்கு ஒப்பிடுவதைத்தவிர வேறு என்னவென்று சொல்லமுடியும்!

தமிழ் மக்கள் அனைவரும் இனி இதுபோன்ற மலையை நகர்த்தும் வேலைகளை மேற்கொண்டோமேயானால் எம் விடியலுக்கு செல்லும் பாதை திறக்கப்படும்!

மதிப்பிற்குரிய Conservative MP Stephen Woodworth க்கு நன்றி செலுத்த:

Kitchener Office:Suite 12, 300 Victoria Street North,
Kitchener ON N2H 6R9
Telephone 519-741-2001
Fax. 519-579-2404
Email woodworth.s@parl.gc.ca
Kitchener, Ontario

 

Ottawa Office:

Room 334, Confederation Building
House of Commons
Ottawa ON K1A 0A6
Telephone 613-995-8913
Fax. 613-996-7329
Email woodworth.s@parl.gc.ca