26th May 2009 வரை தடுத்து வைக்கப்பட்ட முகாமில் UNனால் எண்ணப்பட்ட தமிழ் மக்கள். எனினும் உள்ளூர் UNHCR & ICRC அமைப்புக்கள் தமிழ் உறவுகளை இனங்கானவும், தொடர்புகளை ஏற்படுத்தவும் மறுத்துள்ளது.
மே 2009
மே 31, 2009
தடுத்து வைக்கப்பட்ட முகாமில் UNனால் எண்ணப்பட்ட தமிழ் மக்கள்
Posted by barthee under பொதுவானவைபின்னூட்டமொன்றை இடுங்கள்
மே 31, 2009
இலங்கைத்தமிழர் பற்றிய Al-Jazeera தொலைக்காட்சி உரையாடல்
Posted by barthee under பொதுவானவைபின்னூட்டமொன்றை இடுங்கள்
மே 28, 2009
தமிழ் தேசியக்கொடி பயங்கரவாத கொடி அல்ல, லண்டன் Scotland Yard Anti terrorism unit அறிவிப்பு
Posted by barthee under பொதுவானவை[2] Comments
Scotland Yardன் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிவினர் (SO15) முன்னர் தமிழ் தேசியக் கொடிக்கு எதிரான் போக்கை கொண்டிருந்ததுடன், கொடி பிடித்தவர்களை கைதும் செய்துள்ளனர்.
தற்போது (May 26,2009 அன்று) தமிழ் தேசியக்கொடி பயங்கரவாத கொடி அல்ல என்று முடிவு செய்துள்ளனர்.
புலிகளின் கொடிக்கும், தமிழ் தேசியக் கொடிக்கும் என்ன வித்தியாசம்?
இதுபற்றிய வீடியோவை கீழே காணலாம்.
மே 26, 2009
விடுதலைப்புலிகளின் தலமை என்று கூறிக்கொள்பவர்களிடம் இருந்து திரும்பத் திரும்ப பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறிக்கொள்ளும் நிலமையில் – எம் தலைவன் இன்னமும் இறக்கவில்லை என்று உறுதியுடன் கூறிக்கொள்ளும் மக்கள் மத்தியிலும் உலகத் தமிழரின் போராட்டம் இழுபடப்போகின்றதோ என்று தோன்றத்தொடங்கி உள்ளது.
குளிரிலும், நூற்றுக் கணக்காண மைல்கள் சென்றும் போராடிய மக்கள் எல்லோரும் புலிகள் ஆயுதங்களை மெளனித்தது போன்று போராட்டங்களையும் மெளனித்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது.
இலங்கைத் தமிழர்களின் அடுத்த கட்டம் என்ன?
இங்கு மிகப்பெரிய விடயம் ஒன்று மிகக் கவனமாக கையாளப் படவேண்டும்.
ஏற்கனவே சில தமிழர்கள் வேறு கருத்துக்களுடனும், வேறு அணிகளாகவும் உள்ளனர் அவர்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்.
புலியாக இருந்தாலும் சரி, எலியாக இருந்தாலும் சரி, வடக்காக இருந்தாலும் சரி, கிழக்காக இருந்தாலும் சரி இனி அனைவரும் ஒன்று சேரவேண்டிய நேரம் இது. அதற்காக உங்கள் அடையாளங்களை விட்டுக் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அவரவர் தற்போதுள்ள நிலைகளில் இருந்துகொண்டே தங்கள் பங்களிப்பைச் ஒன்று திரள செய்யல்லாம். இங்கு எந்த அரசியல் சாயமும் பூச வேண்டாம். தமிழ் மக்கள் என்ற ஒன்றைத் தவிர.
இது காலத்தின் கட்டாயம்!
எமது பயணத்தின் மாற்றம், திசை எமக்கு முன்னால் வந்து விட்டது.
ஒன்றுபடுங்கள், இனியும் பேதங்கள் வேண்டாம், ஒன்றாக பயணிப்போம், பேசுவோம், ஒன்றாக ஒரு உறுதியான முடிவை எடுப்போம், ‘ஒரு சிலர் சேய்யும் வேலை தான் இந்த போராட்டம்’ என்று இலங்கை அரசு சொல்வதையும் பொய்யென உணர்த்த வேண்டும். அனைத்து தமிழரும் ஒன்றாக உலகிற்கு எம் உரிமைகளைச் சொல்ல வேண்டும்.
கருணாவை சாமர்த்தியமாக தம்வசம் இழுத்த அரசாங்கத்தைப்போல் அதே சாமர்த்தியமாக அதே கருணாவை எம்பக்கம் இழுக்கவேண்டும், கூடவே டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் முதற்கொண்டு அனைவரும் எம்பக்கம் வைத்துக்கொண்டு பேச்சை நடத்த வேண்டும். இப்படி ஒரு அணியில் அனைவரும் வரும் பட்சத்தில் யாராலும் எதுவுமே சொல்லமுடியாத ஒரு நிலை உருவாகும்
எமக்காக எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன…? எத்தனை பேர்கள் முடமாக்கப்பட்டனர்…?? எத்தனை சொத்துக்கள் அழிக்கப்பட்டன…??? சொந்தங்கள் பந்தங்கள் உறவுகள் எல்லாம் திக்கொன்றாகவும், திசைக்கு ஒரு பக்கமாகவும் சிதறியது.
அம்மா அப்பா ஒருதிக்கு, அண்ணன் தம்பி ஒருதிக்கு, அக்கா தங்கை ஒருதிக்கு, மகளும் மகனும் ஒருதிக்கு…. இப்படி குடும்பமே சிதறிபோன இனத்திற்கு என்ன நீதி?
இந்த வேளைதான் சரியான காய்நகர்த்தல்கள் செய்யப்பட வேண்டும். தமிழ் அமைப்புக்களே, மீடியாக்களே, தலைவர்களே நீங்கள் அனைவரும் இணைந்து, தொடர்ந்து எம் உரிமைக் கோரிக்கைகளை சரியான முறையில் வளிநடத்துங்கள். திக்கத்து செய்வதறியாது நிர்க்கதியாகி நிற்கும் தமிழருக்கு சரியான ஒரு வழியை காட்டுங்கள்.
ஒரு தமிழ் யூனியன் உருவாகட்டும்!
மே 23, 2009
தங்கத்திரவியம் சச்சிதானந்தம் அவர்கள் காலமானார்
Posted by barthee under இரங்கல்/மரணம்பின்னூட்டமொன்றை இடுங்கள்
மே 23, 2009
தமிழா உனக்கு தமிழ் ஈழம் வேண்டுமா? வாக்கெடுப்பு…
Posted by barthee under பொதுவானவைபின்னூட்டமொன்றை இடுங்கள்
தமிழ் உறவுகளே,
“தமிழ் ஈழம் என்னும் ஒரு நாடு வேண்டுமா” என்று ஒரு வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இங்கு இடப்படும் வாக்குகள் உலகில் செல்வாக்கான, பிரபலமான தலைவர்களுக்கும், இன்ன பிற அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
கீழே உள்ள linkஐ கிளிக் பண்ணி, உங்கள் வாக்குகளை இடவும். தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லவும்.
(இந்த தகவலை பரிமாறிக்கொண்ட ‘அமுதா லோகேஸ்’க்கு நன்றி)
மே 23, 2009
வல்வை ஆலடியைச்சேர்ந்த சந்திரமணி லக்ஷ்மணப்பெருமாள்( சுதா ) அவர்கள் புதுமாத்தளத்தில் அகாலமரணம் அடைந்தார்.
Posted by barthee under இரங்கல்/மரணம்பின்னூட்டமொன்றை இடுங்கள்
வல்வை ஆலடியைச்சேர்ந்த சந்திரமணி லக்ஷ்மணப் பெருமாள்(சுதா) அவர்கள் புதுமாத்தளத்தில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற Tug Master தெய்வசிகாமணி, காலம்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மகளும், லக்ஷ்மணப்பெருமாளின் மனைவியும், சண்முகராஜ் (ரஜன்), காலம் சென்ற லோகேஸ்வரராஜ் (சபேசன்), சுதர்ஷினி (மேனகா), மோகனராஜ் (முகுந்தன்), தினேஸ் ஆகியோரின் தாயாரும்
நிர்மலாதேவி (நிம்மி), சதாசிவம் (அய்யாச்சி) ஆகியோரின் மாமியாரும்
அரவிந், ஆலன், பிரசாந், பிரதாபன், ராஜேஷ்வரி ஆகியோரின் பேத்தியும்
ரவீந்திரசிகாமணி(ஆலடி ரவி), செல்வமணி(செல்வம்), அன்புமணி(ஜெயந்தி), புவனசிகாமணி (பாபு) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்
தொடர்புகளுக்கு:
ரஜன் (மகன்)கனடா- 1 905 915 2062
மேனகி (மகள்)இந்தியா- 91 431 248 0664
திருமதி ரவி கனடா- 1 416 630 6621
ஜெயந்தி (சகோதரி) கனடா – 1 416 284 6938