வெள்ளி, மே 1st, 2009


ஆகா… இதுவல்லவா புரட்சி!

தமிழருக்காக சில சிங்கள கல்விமான்கள் ஆதரவுக் குரலை உயர்த்தி இருக்கின்றனர். இந்த கல்விமான்கள் இலங்கைத் தமிழருக்காக தாமாகவே ஒரு புகார் கூறும் பகுதியினை ஆரம்பித்து, அதில் அவர்கள் இலங்கைத் தமிழனின் நிலமைகளை விவரித்து, அனைவரும் கைஒப்பமும் இட்டு அதனை மக்களுக்காக கைஒப்பமிடவும் onlineல் வைத்துள்ளனர்.

இதில் இன்னுமொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பல சிங்கள இனத்தவரும் தமிழருக்காக கைஒப்பம் இட்டுள்ளனர், இன்னமும் இட்டுக்கொண்டு இருக்கின்றனர்!

சிங்கள மக்களிடம் இப்படி ஒரு நல்ல மாற்றத்தை/ஒத்தாசையை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழருக்காக அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள அந்த புகார்கூறும் பகுதியில் நாமும் கைஒப்பமிட்டு அந்த செயலை மகத்தாக வெற்றியடையச் செய்வோம்.

இந்த புகார்கூறும் தளத்தை ஆரம்பித்துவைத்த சிங்கள கல்விமான்கள்:

Dr.விக்கிரமபாகு கருனாரத்தினா,

Dr. நிர்மல் ரஞ்ஜித் தேவஸ்ரீ,

Dr.டெரன்ஸ் புரசிங்கே,

கலாநிதி.சுச்சரித கம்லத்,

கலாநிதி.ஜெயந்த செனவரத்தின,

கலாநிதி.குமார் டேவிட்,

சந்திரபால குமாரகே(Attorney-at-law),

Rev. Fr.யோஹன் தேவானந்தா,

பற்ரிக் பனாண்டோ.

எங்கே இனி நீங்கள் உங்கள் வேலையை இருந்த இடத்திலிருந்தே காட்டுங்கள். பிறருக்கும் இதனை எடுத்துக்கூறுங்கள்… கீழே கிளிக்பண்ணுங்கள்

http://www.petitiononline.com/action2/petition.html


பல லச்சக்கணக்காண மக்கள் வீதிகளில் இறங்கி கூக்குரலிட்டுப் போராட, இங்கு இருவர் இலங்கைத் தமிழருக்காக Michael Coren Show வில் பங்குபற்றி எதிர் வாதங்களை முறியடித்து,   தம்   வாதங்களை முன் வைக்கின்றனர்.

மிகவும் அற்புதமான பேச்சாற்றல், சாதுரியம்  கொண்ட திரு.டேவிட் பூபாலசிங்கம் மற்றும் மஞ்சுளா செல்வராஜா ஆகியோர் தமிழருக்காக வாதம் வைக்கின்றனர்.

எதிர் வாதத்தில் Mr. Lenin Benedict என்பவரும் Ms.Ira De Silva என்பவரும் தமது வாதத்தை முன்வைக்கின்றனர்.

இதில் .Mr. Lenin Benedict என்பவர் ஒரு தமிழர் ஆவார். இலங்கையில் இத்தனை அகோரக் கொலைகளை கண்டபின்னரும் இன்னமும் எதிராகவே கருத்துக்களை கொண்டுள்ள இந்த தமிழரை நினைக்கத்தான் வியப்பாக இருக்கின்றது!

இப்படி ஒரு Show  நடந்துள்ளது என்பதை தெரிவித்த நேயர் Ms.நந்தினி அவர்களுக்கும், அந்த Show வின் linkஐ அனுப்பிவைத்த Ms.தர்ஷினி அவர்களுக்கும் நன்றிகள்!

இங்கு கிளிக்பண்ணி அந்த Showவை பாருங்கள்

மேலே உள்ள link சிரமமாயின் கீழே Youtubeல் பாருங்கள்