ஆகா… இதுவல்லவா புரட்சி!

தமிழருக்காக சில சிங்கள கல்விமான்கள் ஆதரவுக் குரலை உயர்த்தி இருக்கின்றனர். இந்த கல்விமான்கள் இலங்கைத் தமிழருக்காக தாமாகவே ஒரு புகார் கூறும் பகுதியினை ஆரம்பித்து, அதில் அவர்கள் இலங்கைத் தமிழனின் நிலமைகளை விவரித்து, அனைவரும் கைஒப்பமும் இட்டு அதனை மக்களுக்காக கைஒப்பமிடவும் onlineல் வைத்துள்ளனர்.

இதில் இன்னுமொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பல சிங்கள இனத்தவரும் தமிழருக்காக கைஒப்பம் இட்டுள்ளனர், இன்னமும் இட்டுக்கொண்டு இருக்கின்றனர்!

சிங்கள மக்களிடம் இப்படி ஒரு நல்ல மாற்றத்தை/ஒத்தாசையை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழருக்காக அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள அந்த புகார்கூறும் பகுதியில் நாமும் கைஒப்பமிட்டு அந்த செயலை மகத்தாக வெற்றியடையச் செய்வோம்.

இந்த புகார்கூறும் தளத்தை ஆரம்பித்துவைத்த சிங்கள கல்விமான்கள்:

Dr.விக்கிரமபாகு கருனாரத்தினா,

Dr. நிர்மல் ரஞ்ஜித் தேவஸ்ரீ,

Dr.டெரன்ஸ் புரசிங்கே,

கலாநிதி.சுச்சரித கம்லத்,

கலாநிதி.ஜெயந்த செனவரத்தின,

கலாநிதி.குமார் டேவிட்,

சந்திரபால குமாரகே(Attorney-at-law),

Rev. Fr.யோஹன் தேவானந்தா,

பற்ரிக் பனாண்டோ.

எங்கே இனி நீங்கள் உங்கள் வேலையை இருந்த இடத்திலிருந்தே காட்டுங்கள். பிறருக்கும் இதனை எடுத்துக்கூறுங்கள்… கீழே கிளிக்பண்ணுங்கள்

http://www.petitiononline.com/action2/petition.html

Advertisements