கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி அன்று Conservative MPயான மரியாதைக்குரிய Stephen Woodworthஐ அழைத்து கலந்துரையாடி அந்த கலந்துரையாடலில் வெற்றியும் பெற்ற இந்த CGKW தமிழ் மக்கள், இன்று அதனை நிரூபித்தும் காட்டியுள்ளனர்.

கனடிய வரலாற்றிலே முதல்முதல் ஒரு ஆளும் கட்சி Conservative MPயை பாராளுமன்றத்தில் எமக்காக குரல் கொடுக்க வைத்த பெருமையை செய்துள்ளனர் Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo(CGKW Tamils) வாழ் தமிழர்கள்!

ஆமாம், மரியாதைக்குரிய Stephen Woodworth அவர்கள் இன்று கனடிய பாராளுமன்றத்தில் தமிழருக்காக – கனடிய வரலாற்றில் முதல்முதலாய் குரல் கொடுத்த வீடியோ காட்சியை கீழே பாருங்கள்.

பிறகென்ன, மற்றய பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லோரும் இனி என்ன செய்யப்போகின்றீர்கள்?

‘ஆளும் கட்சியினர் எம்மை கண்டுகொள்ளவே மாட்டார்களாம்…” என்ற குற்றச்சாட்டு இருந்த வேளையில்,  உண்ணாவிரதம் இருக்காமல், வீதியை மறிக்காமல், ஆர்ப்பாட்டம் செய்யாமல் சரித்திரத்தை  மாற்றி காட்டிய இந்த தமிழர்களின் சாதனையை நீங்களும் எப்போ செய்யப்போகின்றீர்கள் ?

நீங்கள் மனதுவைத்தால் நீருக்குள்ளால் நெருப்பையும் எடுத்துச்செல்லலாம்!

ஏற்கனவே இதுவிடயமாக பதியப்பட்டவை கீழே:

 மலையை நகர்த்தும் எறும்புகள்!