மே 2009


ஈழத்தமிழர்கள் கலங்கிநிற்கும் இவ்வேளை சில மீடியாக்கள் தமது இஸ்டத்துக்கு செய்திகளையும், படங்களையும், வீடியோக்களையும் வெளிவிட்டுக்கொண்டு இருக்கின்றன.

அதேபோல் அண்மையில் வெளிவந்த ஒரு படத்தை உண்மைக்குப் புறம்பாக graphics முறையில் சில தந்திர வேலைகள் செய்து ஒரு பத்திரிகை வெளிவிட்டது. இந்தப்படம் முன்னர் ஒருமுறை பிரபாகரனும் பாரதிராஜாவும் அமர்ந்து இருந்து பேசுவது போல் வெளிவந்தது. உண்மையில் இந்தப்படம் கூட உண்மையா என்று இப்போது சந்தேகத்தை கொடுக்கின்றது.

இன்று (May 22, 2009) Kitchener City Hall முன்பாக மெழுகுவர்த்திப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை இவ்விடத்தில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Time: 7:30pm to 10:00pm,

Location: In Front of Kitchener City Hall( 200 King Street West, Kitchener)

IMPORTANT REQUESTS:

 1) Please bring your own CANDLES (Battery operated or Wind covered ones from dollar stores).

2) Please try your best to come in BLACK CLOTHES.

3) Please bring your own PLACARDS that Reflects the current Situation.

ஒருவிதத்தில்  கமல்ஹாசனுக்குத் தெரிந்த  மேக்கப் போடும் நுட்பத்திற்கு இன்னமும் இலங்கை வளர்ச்சி அடையவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

தமிழ் படத்தைப்பார்க்கும் ஒரு சராசரி அறிவுள்ள பாமர மகனே ‘இது டூப், இது நிஜம்’ என  அந்த காட்சி மறையும் முன்னமே சொல்லிவிடுவான்.

அந்த வகையில் இந்த வீடியோவை பாருங்கள், ஏற்கனவே பல விடயங்கள் அலசப்பட்டுள்ளன.

(வீடியோ link அனுப்பிய குணா அவர்களுக்கு நன்றிகள்!)

 பலதரப்பட்ட செய்திகள் வதந்திகள் வந்தவண்ணம் உள்ள இவ்வேளையில்,  இனி என்ன நடக்கப்போகின்றது…?

அரசாங்கம் சொல்வது போல் ‘புலிகளை அளித்து விட்டாகிவிட்டது தாம் வெற்றி பெற்று விட்டோம்’ என்னும்  கருத்தில் அவர்களுக்கே  ஆப்பு  வைக்கும்  செய்தியும் இருக்கின்றது என்பதை அரசாங்கம் உணர்ந்ததாக  தெரியவில்லை. காரணம் அடுத்த கட்டம் அவர்கள் தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வை வைக்கப் போகின்றனர் என்பது மிகப்பெரிய கேள்வி.

புலிகளைச் சாட்டி காலத்தை ஓட்டியவர்களுக்கு தற்போது அந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

புலிகள் பலமுடன் உள்ள போதே ஒரு துரும்பு உரிமையையும் கொடுக்கவிடாமல் தடுத்த சிங்கள இனவாதிகள் மத்தியில் இனி எப்படி தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வை வைக்கப்போகின்றனர்?

பேச்சுவார்த்தையின் போதே ஆக்கபூர்வமான எதையும் செய்யாத அரசு இனி என்ன செய்யப்போகின்றது என்பது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா, இங்கிலாங்கிலாந்து உட்பட யூரோப்பியன் யூனியன் முதற்கொண்டு உலக நாடுகள் அனைத்தும் காத்திரமான பார்வையை இலங்கை மீது கொண்டுள்ள இவ்வேளையில், இனி சாக்குப்போக்கு சொல்லவோ, சப்பைக்காரணங்கள் காட்டவோ  முடியாது.

செய்மதிகளால் எடுக்கப்பட்ட குண்டுகள் போட்டு அழித்த தமிழ் பாதுகாப்பு வலய படங்களுக்குக்கூட  புலிகளை சாட்டிய வேடிக்கைகளை இனி நடத்த முடியாது.

இலங்கைத்தமிழருக்கு ஒரு நல்ல நிலையை ஏற்படுத்தவே இந்தப்போர் என இந்தியாவே தன் வாயால் சொன்னது. இனி தமிழருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை கொடுக்க இந்தியா முயற்சி செய்யுமா? அப்படி முயற்சி செய்யும் பட்சத்தில் அதற்கு இலங்கை அரசு எம்மாதிரியான செயலை முன்னெடுக்கும்?

ஒருவேளை கிழக்கில் நடத்திய அரசியல் திட்டம் போல் வடக்கிலும் ஒரு பொம்மை தமிழ் அரசியல் வாதிகளை உருவாக்கி அவர்களை முதலமைச்சராக்கிவிட்டு ‘இதோ தமிழருக்கு  எல்லாம்  வழங்கிவிட்டோம்’ என்று கூறப்போகின்றார்களா?

அல்லது  ஐ.நா, அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் அனைத்தும்   ஒன்று  சேர்ந்து தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வை ஏற்படுத்துவார்களா?

 

 

ஐநா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இலங்கையை கனரக ஆயுதங்களை பவிப்பதை நிறுத்தவேண்டும் என் கேட்கும் இவ் வேளையில், அமெரிக்காவில் உள்ள, தன் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாத  இந்த இலங்கையின் தூதுவர் ‘ஜாலியா விக்கிரமசூரியா’ சொல்கின்றார், ‘புலிகள்  தான்  கனரக   ஆயுதங்களை பாவிப்பதாகவும்,  அவர்களே இந்த கொலைகளை செய்வதாகவும்’ என்று.

திரு ஜாலியா, நீர் என்ன கேலியா பண்ணுகின்றீர் உலக நாடுகளை?

வீடியோ link உதவி தர்ஷினி

கடந்த வெள்ளிக்கிழமை (May 8, 2009) Toronto Sun செய்தித்தாளில் வெளிவந்த செய்தியும், படமும் தான் கீழே நீங்கள் பார்ப்பது. வாத்துக்களை வாகனத்தில் அடிபடக்கூடாது என்று கரிசனை கொண்ட கனடிய பொலிஸாரின் ஜீவராசிகளை நேசிக்கும் நிலையை பாராட்டத்தான் வேண்டும்.

இவை ஒருபுறம் இருக்க, இலங்கையில் மடியும் தமிழ் உறவுகளுக்காக இங்கு இருக்கும் தமிழர்களின் வேண்டுகோள்கள் எவ்வளவிற்கு செவிசாய்க்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

வாத்துக்கு வாய்த்த கரிசனை வக்கத்த தமிழனுக்கு ஏன் வாய்க்கமாட்டேன்கின்றது?

யாராவது சொல்லுங்களேன்…

y

 
kanakasapapathipillai-nakulampal

 வல்வையை பிறப்பிடமாகவும் விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதிப்பிள்ளை நகுலாம்பாள் அவர்கள் 12.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா ஞானேஸ்வரியின் அன்புமகளும், காலஞ்சென்ற திருசிற்றம்பலம் புனிதவதியின் அன்புமருமகளும், கனகசபாபதிப்பிள்ளை(கவிஞன்) அவர்களின் அன்புமனைவியும், திருக்குமரன்(பவன்.லண்டன்), சண்முகபவான்(பாலு.லண்டன்), பாலகுமாரன்(கட்டார்), நர்மதா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாலேஸ்வரியின் மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:

பவன் – லண்டன் 0044 2086408750, 0044 7949486726

பாலு – லண்டன் 0044 7888988935

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »