ஜூன் 2009


sutharam
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் லக்ஷ்மி தம்பதியினரின் அன்புப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து ஆகியோரின் மருமகனும், மகேஸ்வரியின் அன்புக்கணவரும், அமிர்தலிங்கம்(சிங்கு-இலங்கை), அவர்களின் மூத்த சகோதரரும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், உலகநாதன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னார், காந்தமணி(இந்தியா), தங்கலக்ஷ்மி(இலங்கை), சுப்பிரமணியம்(சுவிஸ்), துரைரத்தினம்(லண்டன்), யோகபாலு(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும், கமலவேணி(லண்டன்), கலாநிதி(இந்தியா), தங்கராணி(டென்மார்க்), புவனலோயினி(இலங்கை), பவானந்தன்(லண்டன்), திவாகரன்(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), கலைவாணி(இந்தியா), கெங்காதரன்(நோர்வே), சுபாசினி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநாயகம்(லண்டன்), கோபாலபிள்ளை(இந்தியா), மாட்டீன்(டென்மார்க்), ராமநாதன்(இலங்கை), தாரணி(லண்டன்), தாரினி(லண்டன்), பிரதீப்குமார்(இந்தியா) ஆகியோரின் மாமனாரும், பிரகலாவேணி, தர்சினி, பிரதீப், சுபாஸ்குமார், நிரோஸ்குமார், தர்ஷிகா, நரோஸ்குமார், எமிலிவாணி, மெளனுஸ், நளினி, தர்ஷன், அஸ்வின், அக்ஷயா, வினோசியா, கிசோர் ஆகியோரின் அன்புப்பேரனும், அமிர்தாம்பிகா, விந்தியா, மகிர்தன் ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
மேலதிக தொடர்புகளுக்கு
 
கமலவேணி சிவநாயகம் – லண்டன் 0044 2085715671
பவானந்தன் – லண்டன் 0044 7590763583
திவாகரன் – லண்டன் 0044 7846334723
கலாநி்தி கோபாலுப்பிள்ளை – இந்தியா 0091 4312351284

நாம் வாங்கிய வீட்டுப்பாவனைப் பொருக்கள் அதாவது TV, Fridge, Camera, Cell Phone, Computer… இது போன்ற வேறு எந்த பொருக்களாயினும் அதனுடன் தரப்படும் User Guideஐ நாம் தேடும் போது கையில் அம்பிடாது.

எங்காவது வைத்திருப்போம், அல்லது துலைத்திருப்போம். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவற்றின் எல்லா User Guideக்களையும் இலவசமாக கீழே உல்ள படத்தின கிளிக்பண்ணி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்!

um

South Pacific என்னும் BBC தயாரித்துக்கொண்டிருக்கும் ஒரு தொடருக்காக அசத்தலான ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சி Caroline Islands என்னும் ஒரு தீவின் Pohnpei என்னும் இடத்தில் படமாக்கப்பட்டது.

‘Rudi Dieselஎன்னும் ஒளிப்பதிவாளரால் இதுவரை யாரும் எடுக்காத வண்ணம் £66,000 ($100,000)பெறுமதிவாய்ந்த high-speed camera வால் எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இது Tuna என்னும் மீன்வகையை வலையின்றி புதிய உத்தியுடன் பிடிக்கப்படும் முறையை இந்த விடியோவில் பார்க்கல்லாம்.

அகதிகள் என்ற பெயராலே அதிக லாபம் அடைந்த புலம்பெயர் வாழ் தமிழர்களே..

நேற்று Torontoவில் அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சொல்லவே வெட்கப்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் ! ஏன் தமிழா மறந்துவிட்டாயா?  நேற்று நடந்ததை மறப்பவன் மனிதனே இல்லை என்னும் தத்துவத்தை!

வெறும் காலுடன் நடந்த உனக்கு விதம்விதமாய் சப்பாத்துக்கள்…  கோவணம் கட்டிய உனக்கு கொட் சூட்டுகள்… கூரை விட்டினுள் கூனிக்கிடந்த உனக்கு கோட்டைபோல் வீடுகள்… பொடிநடையாக நடந்த உனக்கு பொக்கிஷமாக வாகனங்கள்…!

இப்படி சில சொற்ப காலத்தில்  உலகில் அதி வேகமாக பரினாமம் அடைந்த உயிரினம் நீதான் என்பதை அறிவாயா?

இதற்கு உனக்கு கிடைத்த ஒரே ஒரு துருப்புச்சீட்டு அகதி என்பது தான். 

100க்கு 99 வீதமானோர் முதல் முதலில் அகதி என்னும் போர்வைக்குள் வந்தது உனக்கு எப்படி மறந்து போனது?

அதன்பின் நீ உன் மனைவியை, பிள்ளைகளை, மாமாவை, மாமியை ஏன் அப்புவையும் ஆச்சியையும் கூட நீ கூப்பிட்டு கானாததை எல்லாம் காட்டினாய்.

இன்று, நீ வந்த பாதையை மறந்து, அகதிகள் தினத்தில் நீ எங்கு சென்றாய்? உன் ஒற்றுமைகள் எங்கு போட்டு புதைத்தாய்?  உன்னை Torontoவில் வாமும் Strong Community என்று ஆங்கில ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன் திரும்பத் திரும்ப சொன்னார்களே… நீ ஏன் இப்போ திரும்பிப் பார்க்காமலே இருக்கின்றாய்?

யூதர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்து மூச்சுக்கு முண்ணூறுதரம் முறுக்கிப் பிடித்ததால் தான் இல்லாத ஒரு நாட்டை இளுத்து வந்து உருவாக்கினார்கள்!

உனது ஒற்றுமையைக் கண்டு கதிகலங்கிய உலகத்தின் முன் உனது நிலையை தக்கவைத்துக்கொள். தமிழா உனக்குள் தமிழ் என்னும் போது, எந்த வேற்றுமையையும் களைந்து நீ முன்னுக்கு நின்றால் தான் உன்னை அயலவன் கூட மதிப்பான். அன்றேல் அவனது ஈனப்பார்வை உனக்கு நிச்சயம்.

நேற்று அகதிகள் தினத்திற்கு வந்த ஒரு நேயர் ஜெயந்தி  என்பவர் மனம் கலங்கி, ஆவேசத்தில்  உனக்காக ஒரு பாடலை உருமாற்றி அனுப்பிவைத்துள்ளார்.

எழுகவே படைகள் எழுகவே

விடியவே இரவு விடியவே

கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

அடுப்பும் உண்டு பூனைக்கு

அதுவும் இல்லை தமிழனுக்கு

உலக மக்களே ஒன்று கூடுங்கள்

வேளை வந்தது கேள்வி கேளுங்கள்

அகதித்தமிழன் என்ற விதியை மாற்றுங்கள்

வேதாந்தம் இனி இங்கு வேண்டாம்

ராஜாங்கம் இனி எமக்கு வேண்டும்

உனக்கும் எனக்கும் வேலிகள் போட

உலகினில் எவனும் வேண்டாம்

சார்ந்து வாழும் வாழ்க்கை போல்

சாபங்கள் எங்கும் இல்லை

அடிமை விலங்கை உடைப்போம்

புதிய உலகம் படைப்போம்

வேட்டையாட சாட்டை வாங்கு

தாழ்வு நீங்க தலைமை தாங்கு

சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து

சிங்கள இருட்டை கொழுத்து…!

(உங்கள் வரிகளுக்கு நன்றி நேயர் ஜெயந்தி அவர்களே!)

இதுவும் கானாது என்றால் கீழே உள்ள பதிவுகளையும் ஒருதரம் பார்த்துவாருங்கள்.

முன்னர் இட்ட இதுசம்பந்தமான பதிவுகள்;

புலிகளாகக்கூட வேண்டாம்-எருமையாகக்கூட இல்லையே

உலகத்தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம்!

பெரும்பாலான ஆண்கள் உலகில் செய்த ஒரு  சாதனைக்கான தினம் இன்று!

 என்ன… எல்லாரும் செய்ததால் அதன் பெருமை எதிர்பாலாருக்கு தெரிவதில்லை!!

எப்படி இருந்தாலும், அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

fa

 

parvathi2வல்வையைச் சேர்ந்த திருமதி.பொ.பார்வதிதேவி அவர்கள் ஜூன் 20, 2009 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு த.பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தலைவர் ஐ.நடராசா-வேதநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், திரு தங்கவேலாயுதம் – தர்மரெத்தினம் ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற தருமராசா மற்றும் ராஜநாயகி (விமலா), நீதிராசா, வனஜா, ஜீவராசா, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலம்சென்ற நாராயணசாமி, குகதாஸ் மற்றும் விமலாதேவி(வன்னியாச்சி), பாலகிருஷ்ணன் (பாலிமாமா), சண்முகநாதன்(குட்டிமாஸ்ட்டர்), இராமகிருஷ்ணன் (ராமு) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல்: சகோதரி யோ.விமலாதேவி(வன்னியாச்சி)

                   1 905 201 1754

உலகில் மிக அதிஸ்டசாலியான மக்கள் யார்?

செல்வந்தர்களா…?, அழகானவர்களா…? கல்விமான்களா…?

கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்…

அடுத்த பக்கம் »