புதன், ஜூன் 3rd, 2009


karunanidhi-bday.jpg

லங்கைத் தமிழருக்காக பல அரசியல் தலைவர்கள், மக்கள் செல்வாக்குள்ள நடிகர்கள் தமது பிறந்தநாளை கொண்டாட மாட்டோம் என அறிவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில், ஆயிரக்கணக்கில் இலங்கைத்தமிழர் மடிந்த இவ்வேளையிலும் கருனாநிதி கேக் வெட்டி தனது பிறந்ததினத்தை கொண்டாடினார்.

எப்படி ஐயா மனது வந்தது கேக் வெட்டிக் கொண்டாட?

போரை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள் என்று தமிழ் உலகமே கண்ணீர் விட்டபோதும், காணாதது போல் பேசாமல் இருந்து விட்டீரே ஐயா..!

இன்று தமிழ் உயிர்கள் ஆயிரக்கணக்கில் மாய்ந்துவிட்டனர்… லட்சக்கணக்கில் உறுப்புகளை இழந்துவிட்டனர்…, லட்சக்கணக்கில் உணவின்றி, நீர் இன்றி, மருந்தின்றி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு உலகத்தமிழன் வீட்டிலும் ஆகக்குறைந்தது ஒரு சாவு வீடு.

எனக்குத் தெரிந்த ஒரு அம்மணி இரண்டு வாரங்களாக உணவருந்தாமல் இருக்கின்றார். உங்களைப் போலும், உங்களைப் போல்  பேருக்காக  உண்ணா விரதம் இருந்த சிலரைப்போலும் உண்ணாவிரதம் இருந்தது போல் இல்லாமல், உண்ணாவிரதம் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாமல்  உலகுக்கு தம்பட்டம் அடிக்காமல், உயிரை வதைத்து உணவருந்தாமல் இருக்கின்றார். இப்படி எமக்குத் தெரியாமல் எத்தனையோ…?

தமது உறவுகள் என்னவானார்கள் என்றே தெரியாமல் பதை பதைத்துக் கொண்டு எத்தனை ஜீவன்களோ…?

எப்படி ஐயா மனது வந்தது கேக் வெட்டிக் கொண்டாட?

தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரையான Ateronon இதய நோய்க்கு முக்கிய காரணியான இருக்கும் கெட்ட கொலஸ்ரோலின் அளவை குருதியில் கட்டுப்படுத்தி அந்நோய் மற்றும் மூளையுடன் சம்பந்தப்பட்டு ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.

தக்காளியின் தோலில் அதன் செந்நிறத்துக்கு காரணமாக இருக்கும் lycopene என்ற வேதியற் பொருள் கெட்ட LDL என்ற கொலஸ்ரோலை உடற்கலங்களுக்கு அதிக அளவில் காவும் கூறை கட்டுப்படுத்தி அதன் மூலம் உடலில் கொலஸ்ரோல் பெருகாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத்திரை தற்போது கொலஸ்ரோலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் statin ஐ விட அதிக அளவு வினைத்திறன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் உள்ளெடுக்கப்பட்டக் கூடியதாக இருக்கும் இந்த மாத்திரை இன்னும் பல சுற்று சோதனைகளின் பின்னே தான் பாவனைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறும் ஆய்வாளர்கள் இம்மாத்திரை தக்காளியில் இருந்து பெறப்பட்ட கூறில் இருந்து அல்லது இயற்கையில் இருந்து பெறப்பட்ட ஆனால் மறுசீரமைப்பட்ட வேதியற் கூறைக் கொண்டும் தயாரிக்கப்படலாம் என்பதால் இந்தச் சோதனைகள் அவசியம் எங்கின்றனர்.

உலகில் மனிதரிடத்தில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்களும் உள்ளடங்குகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ღ♥ ♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

thanks:குருவிகள்