வியாழன், ஜூன் 11th, 2009


மென்மையான மனது உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்

கடந்த மே 15 ஆம் தேதி நடந்த கோர சம்பவம் இது.

உயிர் ஒன்று பிரியும் கணத்தை நூற்றுக்கணக்காணோர் நேரிடையாகப் பார்த்த தருணம் அது.

டெல்லியில் இருந்து அலிபுர்தவார் ரயில் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது மகாநந்தா விரைவு ரயில். எட்டாவா ரயில் நிலையத்தில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய மனநிலை தவறிய வாலிபர் ஒருவர் சடசடவென ரயிலின் கூரை மீது ஏறிவிட்டார்.

ரயில் நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அவரை கீழே வரச் சொல்லி கூக்குரல் இட்டனர். ஒரு சிலர் கூரைமீது கைக் கொடுத்து, பிடித்துக் கொண்டு இறங்கச் சொல்லி கெஞ்சினர். எதையும் அந்த வாலிபர் சட்டை செய்யவில்லை.

சடாரென எழுந்து ரயில் கூரையின்மீது நடந்த அவர், ஏதோ துணி காயப்போடும் கொடியைத் தொடுவது போல மின்சார கம்பியை ஒருமுறை தொட்டார்.  விட்டுவிடுமா என்ன மின்சாரம்? அவனுக்குள் பாய்ந்து அரவணைத்த அடுத்த நொடி உயிரை எடுத்துவிட்டு உடலை கிழே போட்டுவிட்டது. ரயில் கூரைமீது அந்த வாலிபர் எரிந்து கரிகட்டையானது பிறகு நடந்த கதை.

நிமிடத்திற்குள் நடந்துவிட்ட இந்த கோர சம்பவத்தை யாரோ ஒருவர் விடியோ எடுத்திருக்கிறார். இப்போது தான் அதை அவர் வெளியி்ட்டிருக்கிறார். ஒரு நிமிடம் கூட ஓடாத இந்த விடியோ நமக்கு உயிரின் மதிப்பை அறிய வைப்பதுடன், காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்பதையும் ஒருங்கே உணரச் செய்கிறது.

அந்த அதிர்ச்சி விடியோ இதோ:
Vodpod videos no longer available.
more about “Vídeo – Train Incident in India”, posted with vodpod

 

thivanai1

தோற்றம் 26.07.1906          மறைவு 10.06.2009

வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த வைத்திலிங்கம் தெய்வானைநாயகியம்மா அவர்கள் 10.06.2009 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லச்சாமி வைத்திலிங்கம் அவர்களின் அன்புமனைவியும், சோமசேகரம்(RETIRED CUSTOMS AUDITOR), வேலும்மயிலும்(RETIRED ASST.GOV.AGENT POINT PEDRO, TRINCOMALEE)), திருவடிவேல்(DENTAL SURGEON COLOMBO), சந்திரசேகரம், மகாலட்சுமி, ராஜலக்சுமி,ஞானகலாம்பிகை ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார், ராமநாதன், ஜெயபத்மராஜா, தேவகியம்மா, கமலாதேவி, கதிரமணி ஆகியோரின் மாமியாரும், சங்கர், மனோகர், மலர், முரளி, கலைவாணி, குமுதினி, சகிலா, நிர்மலன், கார்த்திகா, குறிஞ்சி, லக்ஸ்மணன், மதிவதனா, ராஜாராம், லலிதா, ஜெயலக்ஷ்மி, ஞானலக்ஷ்மி, கிருஷாந்தி ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 11.06.2009 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபேறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

DR. திருவடிவேல் – இலங்கை 0094112586319