அகதிகள் என்ற பெயராலே அதிக லாபம் அடைந்த புலம்பெயர் வாழ் தமிழர்களே..

நேற்று Torontoவில் அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சொல்லவே வெட்கப்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் ! ஏன் தமிழா மறந்துவிட்டாயா?  நேற்று நடந்ததை மறப்பவன் மனிதனே இல்லை என்னும் தத்துவத்தை!

வெறும் காலுடன் நடந்த உனக்கு விதம்விதமாய் சப்பாத்துக்கள்…  கோவணம் கட்டிய உனக்கு கொட் சூட்டுகள்… கூரை விட்டினுள் கூனிக்கிடந்த உனக்கு கோட்டைபோல் வீடுகள்… பொடிநடையாக நடந்த உனக்கு பொக்கிஷமாக வாகனங்கள்…!

இப்படி சில சொற்ப காலத்தில்  உலகில் அதி வேகமாக பரினாமம் அடைந்த உயிரினம் நீதான் என்பதை அறிவாயா?

இதற்கு உனக்கு கிடைத்த ஒரே ஒரு துருப்புச்சீட்டு அகதி என்பது தான். 

100க்கு 99 வீதமானோர் முதல் முதலில் அகதி என்னும் போர்வைக்குள் வந்தது உனக்கு எப்படி மறந்து போனது?

அதன்பின் நீ உன் மனைவியை, பிள்ளைகளை, மாமாவை, மாமியை ஏன் அப்புவையும் ஆச்சியையும் கூட நீ கூப்பிட்டு கானாததை எல்லாம் காட்டினாய்.

இன்று, நீ வந்த பாதையை மறந்து, அகதிகள் தினத்தில் நீ எங்கு சென்றாய்? உன் ஒற்றுமைகள் எங்கு போட்டு புதைத்தாய்?  உன்னை Torontoவில் வாமும் Strong Community என்று ஆங்கில ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன் திரும்பத் திரும்ப சொன்னார்களே… நீ ஏன் இப்போ திரும்பிப் பார்க்காமலே இருக்கின்றாய்?

யூதர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்து மூச்சுக்கு முண்ணூறுதரம் முறுக்கிப் பிடித்ததால் தான் இல்லாத ஒரு நாட்டை இளுத்து வந்து உருவாக்கினார்கள்!

உனது ஒற்றுமையைக் கண்டு கதிகலங்கிய உலகத்தின் முன் உனது நிலையை தக்கவைத்துக்கொள். தமிழா உனக்குள் தமிழ் என்னும் போது, எந்த வேற்றுமையையும் களைந்து நீ முன்னுக்கு நின்றால் தான் உன்னை அயலவன் கூட மதிப்பான். அன்றேல் அவனது ஈனப்பார்வை உனக்கு நிச்சயம்.

நேற்று அகதிகள் தினத்திற்கு வந்த ஒரு நேயர் ஜெயந்தி  என்பவர் மனம் கலங்கி, ஆவேசத்தில்  உனக்காக ஒரு பாடலை உருமாற்றி அனுப்பிவைத்துள்ளார்.

எழுகவே படைகள் எழுகவே

விடியவே இரவு விடியவே

கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

அடுப்பும் உண்டு பூனைக்கு

அதுவும் இல்லை தமிழனுக்கு

உலக மக்களே ஒன்று கூடுங்கள்

வேளை வந்தது கேள்வி கேளுங்கள்

அகதித்தமிழன் என்ற விதியை மாற்றுங்கள்

வேதாந்தம் இனி இங்கு வேண்டாம்

ராஜாங்கம் இனி எமக்கு வேண்டும்

உனக்கும் எனக்கும் வேலிகள் போட

உலகினில் எவனும் வேண்டாம்

சார்ந்து வாழும் வாழ்க்கை போல்

சாபங்கள் எங்கும் இல்லை

அடிமை விலங்கை உடைப்போம்

புதிய உலகம் படைப்போம்

வேட்டையாட சாட்டை வாங்கு

தாழ்வு நீங்க தலைமை தாங்கு

சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து

சிங்கள இருட்டை கொழுத்து…!

(உங்கள் வரிகளுக்கு நன்றி நேயர் ஜெயந்தி அவர்களே!)

இதுவும் கானாது என்றால் கீழே உள்ள பதிவுகளையும் ஒருதரம் பார்த்துவாருங்கள்.

முன்னர் இட்ட இதுசம்பந்தமான பதிவுகள்;

புலிகளாகக்கூட வேண்டாம்-எருமையாகக்கூட இல்லையே

உலகத்தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம்!