ஜூன் 2009


 

thivanai1

தோற்றம் 26.07.1906          மறைவு 10.06.2009

வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த வைத்திலிங்கம் தெய்வானைநாயகியம்மா அவர்கள் 10.06.2009 அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லச்சாமி வைத்திலிங்கம் அவர்களின் அன்புமனைவியும், சோமசேகரம்(RETIRED CUSTOMS AUDITOR), வேலும்மயிலும்(RETIRED ASST.GOV.AGENT POINT PEDRO, TRINCOMALEE)), திருவடிவேல்(DENTAL SURGEON COLOMBO), சந்திரசேகரம், மகாலட்சுமி, ராஜலக்சுமி,ஞானகலாம்பிகை ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார், ராமநாதன், ஜெயபத்மராஜா, தேவகியம்மா, கமலாதேவி, கதிரமணி ஆகியோரின் மாமியாரும், சங்கர், மனோகர், மலர், முரளி, கலைவாணி, குமுதினி, சகிலா, நிர்மலன், கார்த்திகா, குறிஞ்சி, லக்ஸ்மணன், மதிவதனா, ராஜாராம், லலிதா, ஜெயலக்ஷ்மி, ஞானலக்ஷ்மி, கிருஷாந்தி ஆகியோரின் அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 11.06.2009 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபேறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

DR. திருவடிவேல் – இலங்கை 0094112586319

தற்போது 65வயதைத் தாண்டிய, 1958ஆண்டு SSLC (10ம் வகுப்பு) படித்த அந்தநாளைய வாலிபர்கள்,   அண்மையில்  நடிகை  திரிஷாவிற்கு   பிறந்தநாள்  வாழ்த்து  தெடிவித்துள்ளனர். அதுவும் பெரிதாக போஸ்ட்டர் அடித்து – அதில் தங்களது படங்களையும் போட்டும் மகிழ்ந்துள்ளனர்.

இங்குதான் ஒரு கேள்வி நிற்கின்றது!

பொதுவாக இந்த வயதுள்ளவர்களை பெரியவர்கள், அனுபவசாலிகள் என்று ஒரு கெளரவமாக சமுதாயத்தில் மதிக்கப்படுவர். இவர்கள்  இப்படி  திரிஷாவுக்காக ஜொல்லு விட்டால்,  இவர்களை சமுதாயம் என்னவென கருதும்?

சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!

thirisha

நேயர் புகழேந்தி அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க “அர்த்தமுள்ள இந்து மதம்” முழுவதும் YouTubeல் பதிவேற்றப்பட்டவை இங்கு தரப்படுகின்றது.

“போரில் எமது உலகம்” என்னும் தலைப்பில் Canadian Red Cross(ICRC)ஆல் ஒரு இலவச புகைப்படக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் போரும், ஆயுதங்களும் எவ்வாறு மனித வாழ்வை சீர்குலைக்கும் என்னும் தலைப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விருதுகளைப் பெற்ற ஐந்து பிரபல புகைப்பட நிருபர்களால் பிடிக்கப்பட்ட புகைப் படங்களை Toronto வில் இன்று 10a.m–3p.m வரை நடைபெறும் கண்காட்சியில் வைத்துள்ளனர்.

அனுமதி இலவசம்!

வசதியுள்ளவர்கள் தவறாமல் சென்று பார்த்துவரவும். இந்த இடம் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அடுத்த சந்தியில் அமைந்துள்ளது.

TTCல் செய்வதாக இருந்தால் Osgoode stationல் இறங்கி  சின்ன ஒரு நடையில்  University + Richmond Streetக்கு செல்லலாம்.

Address:
Hilton Toronto, Governor General Room
145 Richmond Street West
University & Richmond Street

For more information contact:
Phone: 416-480-0195 
Ext: 2253

மேலே உள்ள தொலைபேசிக்கு தொடர்புகொண்டு, ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் நேரடியாக எந்தவித பதிவும் இன்றி செல்லலாம்.

karunanidhi-bday.jpg

லங்கைத் தமிழருக்காக பல அரசியல் தலைவர்கள், மக்கள் செல்வாக்குள்ள நடிகர்கள் தமது பிறந்தநாளை கொண்டாட மாட்டோம் என அறிவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில், ஆயிரக்கணக்கில் இலங்கைத்தமிழர் மடிந்த இவ்வேளையிலும் கருனாநிதி கேக் வெட்டி தனது பிறந்ததினத்தை கொண்டாடினார்.

எப்படி ஐயா மனது வந்தது கேக் வெட்டிக் கொண்டாட?

போரை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள் என்று தமிழ் உலகமே கண்ணீர் விட்டபோதும், காணாதது போல் பேசாமல் இருந்து விட்டீரே ஐயா..!

இன்று தமிழ் உயிர்கள் ஆயிரக்கணக்கில் மாய்ந்துவிட்டனர்… லட்சக்கணக்கில் உறுப்புகளை இழந்துவிட்டனர்…, லட்சக்கணக்கில் உணவின்றி, நீர் இன்றி, மருந்தின்றி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு உலகத்தமிழன் வீட்டிலும் ஆகக்குறைந்தது ஒரு சாவு வீடு.

எனக்குத் தெரிந்த ஒரு அம்மணி இரண்டு வாரங்களாக உணவருந்தாமல் இருக்கின்றார். உங்களைப் போலும், உங்களைப் போல்  பேருக்காக  உண்ணா விரதம் இருந்த சிலரைப்போலும் உண்ணாவிரதம் இருந்தது போல் இல்லாமல், உண்ணாவிரதம் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாமல்  உலகுக்கு தம்பட்டம் அடிக்காமல், உயிரை வதைத்து உணவருந்தாமல் இருக்கின்றார். இப்படி எமக்குத் தெரியாமல் எத்தனையோ…?

தமது உறவுகள் என்னவானார்கள் என்றே தெரியாமல் பதை பதைத்துக் கொண்டு எத்தனை ஜீவன்களோ…?

எப்படி ஐயா மனது வந்தது கேக் வெட்டிக் கொண்டாட?

தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரையான Ateronon இதய நோய்க்கு முக்கிய காரணியான இருக்கும் கெட்ட கொலஸ்ரோலின் அளவை குருதியில் கட்டுப்படுத்தி அந்நோய் மற்றும் மூளையுடன் சம்பந்தப்பட்டு ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.

தக்காளியின் தோலில் அதன் செந்நிறத்துக்கு காரணமாக இருக்கும் lycopene என்ற வேதியற் பொருள் கெட்ட LDL என்ற கொலஸ்ரோலை உடற்கலங்களுக்கு அதிக அளவில் காவும் கூறை கட்டுப்படுத்தி அதன் மூலம் உடலில் கொலஸ்ரோல் பெருகாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத்திரை தற்போது கொலஸ்ரோலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் statin ஐ விட அதிக அளவு வினைத்திறன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் உள்ளெடுக்கப்பட்டக் கூடியதாக இருக்கும் இந்த மாத்திரை இன்னும் பல சுற்று சோதனைகளின் பின்னே தான் பாவனைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறும் ஆய்வாளர்கள் இம்மாத்திரை தக்காளியில் இருந்து பெறப்பட்ட கூறில் இருந்து அல்லது இயற்கையில் இருந்து பெறப்பட்ட ஆனால் மறுசீரமைப்பட்ட வேதியற் கூறைக் கொண்டும் தயாரிக்கப்படலாம் என்பதால் இந்தச் சோதனைகள் அவசியம் எங்கின்றனர்.

உலகில் மனிதரிடத்தில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்களும் உள்ளடங்குகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ღ♥ ♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥♥ღ♥Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

thanks:குருவிகள்

« முன்னைய பக்கம்