ஒவ்வொரு முறையும் சமையல் குறிப்பு பார்த்து சமைக்கும் போதும் என்னிடம் அது இல்லையே, இது இல்லையே என்று வருத்தப்படும் உங்களுக்காக ஒரு சூப்பர் ஐடியாதான் இந்த Supercook பக்கம்.

இனிமேல் உங்களிடம் உள்ள பொருட்களை பட்டியல் இட்டால் போதும். இப்பக்கம் உங்களிடம் உள்ள பொருட்களுக்கு தக்கமாதிரி விதம் விதமாக சமையல் குறிப்பை கொண்டுவந்து தரும்.

உதாரணத்திற்கு உங்களிடம்: முட்டை, மா, உருளைக்கிழங்கு, Butter மட்டும் தான் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். இதை வைத்து என்னத்தை செய்வது என்றுதான் எண்ணத்தோன்றும். ஆனால் இப்பக்கம் உங்களுக்கு உடனடியாக 114 சமையல் குறிப்புகளை பட்டியல் இடும். அத்துடன் இந்த நான்கு சாமான்களுடன் வேறு ஏதாவது ஒரு பொருளை சேர்த்தால் கூடவே 2000 சமையல் குறிப்புகளையும் பட்டியல் இடும்.

பிறகென்ன… கீழே உள்ள படத்தை கிளிக் பண்ணி, சாக்குப் போக்கு சொல்லாமல் அசத்துங்கள்.

supercook