ஞாயிறு, ஜூலை 12th, 2009


Toronto வாழ் மக்களுக்கு ஒரு இனிய செய்தி, கூடவே Cambridge, Guelph, Brantford, Bramption… போன்ற சுற்று வட்டாரத்தில் இருக்கும் நகரங்களில் இருக்கும் மக்களுக்கும் தான்! (மற்றவர்களுக்கும் விரைவில் கிட்டும்)

நீங்கள் இனிமேல் உங்கள் சாலை நிலவரங்களை (Traffic) வீட்டில் இருந்த  படியே பார்க்கலாம். LapTop, IPhone உள்ளவர்கள்  நெருக்கல்  மிகுந்த  பாதைகளில்  சினத்துடன்  பயனிப்பதை  தவிர்த்து,           வாகனங்களில் பயனித்துக்கொண்டே முன்னால் Traffic எவ்வாறு உள்ளது என்று பார்த்து உங்கள் பாதைகளை மாற்றி அமைக்கும் செளகரிகம் இப்போது நடைமுறையில் இருக்கின்றது. அத்துடன் Road Close, Construction போன்ற இன்ன பிற தகவல்களும் சேர்த்து இந்த சேவை இயங்குகின்றது.

முன்னர் அமெரிக்க நகரங்களில் உள்ளவர்களுக்கு மாத்திரம் கிட்டிய இந்த இனிய சேவை இப்போது Toronto பெரும்பாக மக்களுக்கும் அதை அண்டியுள்ள சில நகரங்களுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ளது.  அப்புறம் என்ன இனி உங்கள் பயனம் இனிய பயணம் தான்.

சரி LapTop, IPhone போன்ற Internet வசதி இல்லாதவர்கள் என்னசெய்வது?

இருக்கவே இருக்கின்றார்கள் உங்கள் மீது கரிசனை உள்ள உங்கள் மனைவி/கணவன், நண்பன்/நண்பி… இவர்கள் நீங்கள் பயணிக்கும் போது சாலை நிலவரங்களை கண்காணித்து அப்பப்ப உங்கள் செல்போனுக்கு தகவல் தருவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா 🙂

இனிமேல் யாரும் வீட்டிலோ, வேலை இடத்திலோ Traffic Jam ஆகிப்போச்சு அதனாலேதான் லேட்டு என்று கதை அளக்கமுடியாது 😦 நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள் யாக்கிரதை!

பச்சை - வேகம், மஞ்சள் - மெதுவாக நகர்தல், சிவப்பு - மிக மெதுவாக நகர்தல், கறுப்பு - வேலைக்கு ஆகாது!

பச்சை - வேகம், மஞ்சள் - மெதுவாக நகர்தல், சிவப்பு - மிக மெதுவாக நகர்தல், கறுப்பு - வேலைக்கு ஆகாது!

 

thurairasa
 
துரைராசா கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய கிராம அலுவலர்)
 
வல்வெட்டித்துறை, தெணியம்பையைச் சேர்ந்த துரைராசா கணபதிப்பிள்ளை (இளைப் பாறிய கிராம அலுவலர்) கடந்த ஞாயிற்றுக் கிழமை 12.07.2009 அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் மகேஸ்வரியின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற பாரததேவி, காலஞ்சென்ற சுதந்திரதேவி மற்றும் மங்களதேவி, பாஸ்கர தேவி ஆகியோரின் சகோதரரும் திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி, நாகலிங்கம், குமாரவேல் ஆகியோரின் மைத்துனரு மாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் திங்கட் கிழமை 13.07.2009 அன்று ஊறணி மயானத்தில் நடைபெற்றன. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
மனைவி.
தெணியம்பை, வல்வெட்டித்துறை.