மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் Office 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது.

வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான Office தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் Office தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. Office 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

Office 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு Office 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் Office 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. 

– Microsoft Word 2010
– Microsoft Excel 2010
– Microsoft Outlook 2010
– Microsoft PowerPoint 2010
– Microsoft OneNote 2010
– Microsoft Access 2010
– Microsoft InfoPath 2010
– Microsoft Publisher 2010
– Microsoft Project 2010
– Microsoft SharePoint Designer 2010
– Microsoft SharePoint Workspace 2010
– Microsoft Visio 2010

WERSJA x86 (32 bit)

ஏன் Office 13 என்று வைக்கவில்லை என தெரியவில்லை. 13 என்பது அதிஸ்டமில்லாத எண் என மைக்ரோசாப்ட்டும் நினைக்கின்றதோ…!?

உங்களுக்கு Office 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.

இங்கு சென்று( Technical Preview Program Waitlist Registration) உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் Office 2010வைப்பற்றி அறிந்துகொள்ள இங்கு செல்லவும்

http://www.microsoft.com/office/2010/

இவை ஒருபுறம் இருக்க Office 2010 என்றொரு சினிமா படமும் வெளிவர  இருக்கின்றது. அந்த  படத்தின் காட்சியை கீழே பார்க்கலாம்.