இழு தேரை!!இறுகப்பிடி வடக்கயிற்றை…!!     

எழுதி அனுப்பியவர் நேயர் இளம் பறவை

இழு தேரை..                         

இறுகப்பிடி வடக்கயிற்றை.

பக்கத்துச் சுரிதார் பார்வைபட

இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்

உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்

காயவில்லை…பரவாயில்லை..புலத்து தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்

கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்…

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட

தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம்

அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து..-வழியில்

சிங்களவன் வந்தால் தலையை குனி.-அவன்

துப்பினாலும் துப்புவான்…

உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்

சிங்களவன் பந்தல்நாட்டுகிறான்- அதனாலென்ன

நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு

பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!

உன் பரம்பரைப+மியை லாலாதேசத்து

குரங்குகள் தலைமுறை கூறுபோடுது- பார்த்துக்கொண்டே

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்…..