இந்தபாடலை கேட்கும் போது பலருக்கு பழைய ஞாபகம் வரும். கடிதம் எழுதாத காதலர்களே இல்லை எனலாம்… கைக்குடையைக்கூட கைமாற்றிய கதைகூட உண்டு…

ஒரு நெயரின் மன நினைவலைகளுடன் நாமும் நீந்துவோம்!


கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பிச் செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

குருவே குருவே

இதிலென்ன அதிசயம் இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம் இவள் மனம் புரியலையா

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்

உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என் உள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா ஏது ஒன்றுபட்டபோது

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா..!

 

நேயரே நீங்கள் கேட்ட அடுத்த பாடல் ஏற்கனவே முன்னர் பதிவேற்றப்பட்டது அந்த பாடலை கேட்க இங்கு கிளிக் பண்ணவும் தேடும் கண் பார்வை