ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் மக்களும், சுற்றூலா பயணிகளும் ஆர்வமாக பங்கு பற்றும் ஒரு விளையாட்டு இந்த Tomatina என்றழைக்கப்படும் தக்காளி எறியும் திருவிழா!

சுமார் 110 தொன் எடையுள்ள தக்காளிகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி அதனை மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் வீசி எறிந்து கொண்டாடுவார்கள்.

 

ஒரு உணவுப்பொருளை இப்படி அனியாயமாக்குகின்றீர்களே என இவர்களைக் கேட்டால்,

“தக்காளிச்சாறு உடலுக்கு நல்லதொரு பொருள். அத்துடன் இப்படி ஒரு விளையாட்டு மனதுக்கும் குதூகலம் அளிக்கும் நிகழ்வு,  அதைவிட தக்காளியால் எறிந்தால் யாருக்கும் நோகவும் மாட்டுது….”

என்று தம் செயலை நியாயப் படுத்திக்கொண்டே செல்வார்கள்.

இந்த தக்காளி திருவிழாவின் ஒரு வீடியோ  காட்சியை கீழே காணலாம்.

இந்த ஸ்பெயின் காரர்கள் தக்காளியை இவ்வாறு நசுக்கி, மிதித்து நாசம் பண்ணுகின்றார்களே… அவேளை நாம் இந்த தக்காளியை எவ்வளவு கெளரவமாக நடத்துகின்றோம் என்று, தமிழ் மக்களின் தக்காளி விடயம் தெரியாது போலிருக்கின்றது.

தக்காளி என்றவுடன் சட்டினியும், சாம்பாறும் என்றிருந்த நிலைமாறி, கடைத்தெருவினில் தக்காளியைக் கண்டவுடன் ஒரு வெக்கச்சிரிப்பு சிரிக்குமளவுக்கு தக்காளியின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்கள் இந்த தமிழ் மக்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது.

அப்படி தெரியாத ஸ்பெயின் நாட்டவருக்காக மட்டும் இந்த வீடியோ! மற்றவர்கள் இன்று போய் நாளை வாருங்கள்!