சனி, ஓகஸ்ட் 29th, 2009


நீ சுருட்டிப் போட்ட முடி… மோதிரமாய் ஆக்கி,

குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளந்து,

சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆகி…

அடடா… காதலிக்கும் போது என்னென்ன கற்பனைகள்… ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பனையில் போட்டி வரும் நேரம் இந்த காதலிக்கும் நேரம் தான்.

ஆனால் பிற்காலத்தில் தங்கள் துணையுடன் இதில் ஒரு வரியாவது சரிவர நடக்கின்றார்கள்?

பல காதலர்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்கும் போது மனங்களில் பாறாங்கல் தான் உடையும்…

இதையும் மீறி இன்பமாய் ரசிக்கும் சிறு கும்பலும் நமக்குள் இருக்கத்தான் செய்கின்றது.

அவர்கள் மன்மதனால் ரட்சிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படி ரட்சிக்கப்பட்ட ஒரு நேயரின் விருப்பப் பாடல்…

அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மலையூரில் சாரலிலே..
என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே….

நீயுடுத்தி போட்ட உடை… என் மனதை மேயுதடா

நீ சுருட்டி போட்ட முடி… மோதிரமாய் ஆகுமடி

இமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க… இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை திரியாக்கி… உன்னில் விளக்கேற்றி
என்னாளும் பார்த்திருப்போம்

ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…

நீ முறிக்கும் சோம்பலிலே… நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்

குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி

அறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூறுமடா

என்னை மறந்தாலும்… உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்

ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே

உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்

உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்.

நேற்று இட்ட பதிவில் (தமிழ் தக்காளிக்கும், ஸ்பெயின் தக்காளிக்கும் உள்ள அந்தஸ்த்து) தக்காளி பற்றி சுவையான விடயங்களை பார்த்திருந்திருப்பீர்கள்.

அதில் ஒரு செய்தியும் இருக்கின்றது. அதாவது இலங்கைத் தமிழன் தற்போது தக்காளி மாதிரித்தான்!

காரணம்

நசுக்க நசுங்குவதும், பிசைய பிதுங்குவதும், தூக்கிப்போட்டு மிதித்தலும்-தூக்கி வீசி எறிந்தாலும் பாவம் தக்காளியின் நிலமைதான் அவனுக்கும். யாருக்கும் எந்த நேவும் இல்லாமல் நீதான் அளிந்து போகின்றாய்…

இதுவே ஒரு பலாப் பழமாய் இருந்திருந்தால்…!

ஸ்பெயின் காரர்களின் நிலை என்னவாகும் அல்லது கார்த்திக்கின் மூஞ்சிதான் என்னவாகும் அல்லது வினிதாவின் உடல் தான் என்னவாகும்!!!

என்னதான் நீ இனிமையாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் உன்னை காத்துக்கொள்ள ஆகக்குறைந்தது ஒரு பலாப்பழத்து முள் கூட இல்லாவிடில் உன் நிலை தக்காளிதான்!

காலத்தின் கோலம், பலாப்பழமாக இருந்த நீ இன்று தக்காளி ஆனாய் தமிழா!