ஓகஸ்ட் 2009


இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான ‘இஸ்கெமிக் ஸ்ட்ரோக்’கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எல்லா அழகிகளையும் பார்க்க நேரம் எங்கே இருக்கு சும்மா ஒரு பத்து பதினைஞ்சு Top ல் உள்ளதுகளை பார்த்தால் போதும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.

அட இதைவிட வேறு என்ன வேலை போட்டியிட்ட 85 பேரையும் பார்க்க வேண்டும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.

அடடா அழகிப்போட்டி என்றால் நீச்சல் உடையில் எல்லாம் அங்கும் இங்கும் நடந்து திரிவார்களே அதெங்கே ஹி…ஹி… என்று ஜொல்லுவிடுபவர்களுக்கு இந்த வீடியோ.(தமிழ் சினிமாவில் பாட்டு காட்சிக்கு தம் அடித்துவிட்டு வருவது மாதிரி ஆரம்பத்தில் ஒருவன் மைக்கைப் பிடித்து பாடுவதை பார்த்துவிட்டு அங்க இங்க நகர்ந்துவிடாதீர்கள். அப்புறம் நங்கைகளை நழுவ விட்டுவிடுவீர்கள்.

இதுக்கு மேலேயும் ஜொல்லுவிடுபவர்கள் அழகிப்போட்டியில் வலைத்தளத்திற்கு சென்று வென்று வாருங்கள். இதொ அந்த தளம் Miss Universe

பஹாமஸில் நடந்து வரும் 2009ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகுப் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஏக்தா செளத்ரிக்கு கிரீடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள்  உள்ளனர்.

தனது மகள் பட்டம் வெல்ல வேண்டும் என்று வேண்டி அவரது தாயார் ரீத்தா செளத்ரி பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து ரீத்தா கூறுகையில், நான் ஏக்தாவுடன் நேற்று பேசினேன். சற்று சோர்வாக இருப்பதாக தெதரிவித்தார். இருப்பினும் இறுதிச் சுற்றுக்கு முதல் நாள் இரவில் நன்கு தூங்கப் போவதாகவும், புத்துணர்ச்சியோடு இறுதிச் சுற்றை சந்திக்கவிருப்பதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஏக்தாவுக்கு இது பெரிய தினம். நிச்சயம் அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏக்தாவுக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம். பதட்டப்பட மாட்டார். முடிவை அறிவிக்கும்போது காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கப் போவதாக கூறியுள்ளார். நானும் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளேன்.

இறுதிச் சுற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதட்டமே இல்லாமல் பதிலளிக்குமாறு ஏக்தாவை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், எப்போதும் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்குமாறும் அவரை அறிவுறுத்தியுள்ளேன். அது நமக்குப் பலத்தைக் கொடுக்கம் என்றார் ரீத்தா.

இன்னும் சில மணி நேரங்களில் அடுத்த மிஸ் யுனிவர்ஸ் யார் என்பது தெரிந்து விடும். அது ஏக்தாவாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில், இந்திய ரசிகர்களும் உள்ளனர்.

இதேவேளை உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பார்வதி ஓமணக்குட்டன் சொல்வதையும் கொஞ்சம் கேழுங்கள்.

பார்வதி ஓமணக்குட்டன்

என்னை வரவேற்காதது மட்டுமல்ல, போனில் வாழ்த்தக் கூட ஆளில்லையே, என்ற அழாத குறையாக குமுறுகிறார் பார்வதி ஓமணக்குட்டன்.

மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தவருமான பார்வதி ஓமனகுட்டனின் சொந்த ஊர் கேரளா. ஆனால் அவர் படித்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான்.

இந்த நிலையில் கேரள, மாரட்டிய அரசுகள் தன்னை அங்கீகரிக்கவில்லை என பார்வதி ஓமனகுட்டன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றும் கேரள அரசு என்னை அங்கீகரிக்கவில்லை. வேறு யாராவது உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பினால் அதை முக்கிய சம்பவமாக கருதி திருவிழா போல கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால் நான் ஊர் திரும்பிய பின்னரும் கூட கேரள அரசு சார்பில் யாரும் என்னிடம் போனில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. அது போலத்தான் நான் வளர்ந்த மாநிலமான மராட்டிய அரசும் என்னை புறக்கணித்துவிட்டது.

ஒருவேளை நான் மும்பையில் பிறந்திருந்தால் என்னை அங்கீகரித்திருப்பார்களோ என்னவோ… பொதுவாக அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. எங்களைப் போன்ற சாதனையாளர்களைக் கண்டு கொள்வதில்லை, என்றார் பார்வதி.

அழகிகளை இப்படி அழவைப்பது அழகா…?

pasupathi

தாயின் மடியில் 01.02.1922         இறைவன் தாளில் 19.08.2009

வல்வை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் பசுபதி (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற பதிவாளர்) அவர்கள் 19.08.2009 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் இராசரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சபாரத்தினம் செல்வப்பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்

காலஞ்சென்ற அன்னலெட்சுமியின் அன்புக்கணவரும், சிவப்பிரகாசம் (முன்னாள் இலங்கை மின்சாரசபை பொறியியல் உதவியாளர்), ஜெயப்பிரகாசம் ஆகியோரின் அன்புத் தந்தையும்

சுதாதேவி, ராஜகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்ற நாகமுத்து, குமாரசாமி, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், மகமாயிதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்

பிரசாத்-ரேகா, வித்யா-பிரேம்குமார், வசந்தன் ஆகியோரின் அன்பு பேரனும்

பிரணவி, ராகவ், சஞ்ஜித் ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வல்வை ஊறணி மயானத்தில் 20.08.2009 அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

சிவப்பிரகாசம் +1 905 970 0242

ஜெயப்பிரகாசம் +1 905 306 0897

இழு தேரை!!இறுகப்பிடி வடக்கயிற்றை…!!     

எழுதி அனுப்பியவர் நேயர் இளம் பறவை

இழு தேரை..                         

இறுகப்பிடி வடக்கயிற்றை.

பக்கத்துச் சுரிதார் பார்வைபட

இன்னும் செய்! பார்த்து இளி!!

முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்

உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்

காயவில்லை…பரவாயில்லை..புலத்து தெருக்களில் தேர் இழு!

உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்

கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன்

அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்…

ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட

தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!

இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம்

அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து..-வழியில்

சிங்களவன் வந்தால் தலையை குனி.-அவன்

துப்பினாலும் துப்புவான்…

உன் பக்கத்துவளவில் வந்திறங்கிச்

சிங்களவன் பந்தல்நாட்டுகிறான்- அதனாலென்ன

நீ இங்கு தேருக்குவரும் பெருமக்களுக்கு

பந்தலிட்டு மோர் ஊற்றி உவகையுறு!

உன் பரம்பரைப+மியை லாலாதேசத்து

குரங்குகள் தலைமுறை கூறுபோடுது- பார்த்துக்கொண்டே

நீ இங்கு வெள்ளையனின் வீதியிலே தேர்இழுத்து

வேர்க்க வியர்க்க அன்னதானம் போடுகிறாய்.

நல்ல களப்பணிதான்.போ இன்னும் செய்.

உனக்காகச் செத்த மடையர்களை இன்னுமொருமுறை

போட்டுத் தள்ளவேணும்.- உன்னைப்போல்

தேர்இழுக்கத் தெரியாமல்

பேரினத்து படைகளுடன் சமராடிப் போய்

இறந்ததற்காய்…..

எம் நேயர் ஒருவர் Piano ஒன்று வாங்க ஆர்வமாக உள்ளார். அதற்கு முன்னர் உங்களில் யாராவது  அனுபவப் பட்டவர்களின் யோசனையை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.

Pianoவைப் பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து…

 பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் எப்படி பணமுதலைகளைப் பந்தாடுகிறார் என்பதே கந்தசாமி.

ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன் பட வரிசையில் மற்றுமொரு படம்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததே படத்தின் ப்ளஸும், மைனஸுமாகிவிட்டது. ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானை சேவலாய்ப் பறந்து வந்து பந்தாடும்போதிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை விக்ரம் உழைத்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு முறை சேவல் கெட்டப் போடும்போதும் நடை, கண்கள், முகத்தை ஆட்டுவது என்று துவங்கி கொக் கொக் கொக் கொக் என்று குரல் குடுத்து, க-ந்-த-சா-மி என்று எதிரிகளை துவம்சம் செய்யும்போதும், சி.பி.ஐ. ஆஃபீஸராக மிடுக்குடன் நடமாடும்போதும் விக்ரம் ஜொலிக்கிறார்.

ஸ்ரேயா – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரேயா! அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது! அதுவும் அலேக்ரா பாடலில் கிட்டத்தட்ட ஷில்பா ஷெட்டிக்கு போட்டிபோடுகிறது அவரது ஹிப் மூவ்மெண்ட்ஸ்!

 

பாடல் காட்சிகளில் ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் போகும் உதடு, விக்ரமை கிறங்கடிக்க கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கிறது! ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை! ஸ்ரேயாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்!

வடிவேலு கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதுதான் படத்தின் ஒரு சில நித்திரை நிமிடங்களைக் கடக்க உதவுகிறது என்பது நிஜம்! குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி! மற்றவை சுமார்.

டைட்டில் போடும்போது கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் என்று ஒட்டு மொத்தமாகப் போடாமல் கதை – சுசி கணேசன், இசை – தேவி ஸ்ரீபிரசாத், திரைக்கதை –சுசி கணேசன்.. இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார். படத்திலும் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்து சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஏதோ செய்கிறார். வேறு இடங்களில் இயக்குனர் ஒன்றும் ஸ்பெஷலாகத் தெரிவதில்லை.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது திரையில் பார்க்கும்போது மைனஸாகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாச்சு என்பது போன்றவொரு சலிப்பு வருகிறது.

கிராபிக்ஸ் வேலைகள் பிரமாதம். படத்தின் பல இடங்களில் ஒருவித யெல்லோ டோனிலேயே எடுத்திருப்பது சில நேரங்களில் கண்ணுக்கு எரிச்சலைத் தருகிறது.

க்ளைமாக்ஸ் – மிகப் புதுமையான இதுவரை யாருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி……

என்று சொல்லலாமென்று ஆசைதான். ம்ஹ்ம்! அதே ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன்……

கந்தசாமி – ஒருதடவை பார்க்கலாம்..

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »