செப்ரெம்பர் 2009


காதல் இனிமையானது.  ஆனால் அந்தக் காதலில் உள்ள வலியும், வேதனையும் காதல் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.

தொட்டதும் துளிர் விடுவதுபோல் எந்தக்காதலும் இருந்ததில்லை. காதல் கொண்டவர் முதலில் வாடி, பின்னர் கூடிய சம்பவங்கள்தன் இதன் அதிகாரம் முழுவதும்.

காதல் எமக்காக மலர்ந்தாலும், அதன் வாசணையின் மொழி தெரியாததால் எத்தனை ஏக்கங்கள்! எவ்வளவு தவிப்புக்கள்!!

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
(மாலை

காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா
(மாலை

காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதிலா தம்பி
மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்

பெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்

ஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே
(மாலை

8year

cooltext431994898

arumai

தோற்றம் 26.11.1947                      மறைவு 26.10.2001

(28.09.2009 ல் 8வது திவசம்)

நினைவில் நின்று கனவில் கலந்து

உயிர் மூச்சினில் நிறைந்த நீங்கள் இன்று

நிஜத்தினில் இல்லை.

நினைவுகளுடன் உங்கள் பிரிவால் தவிக்கும்

மனைவி, மக்கள்

 

sobitha

டென்மார்க்கில் வசித்துவரும்

திரு.வ.தெய்வேந்திரன் – திருமதி.அருந்தவராணி தம்பதிகளின்

செல்வப் புதல்வி ‘சோபிதா’ வுக்கு இன்று பிறந்தநாள்!

 

 இன்று பிறந்தநாளை கொண்டாடும் சோபிதாவை – பல் கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அப்பா, அம்மா, தம்பி கெளதம் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!
அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!

என்ன கிண்டலா’ என நினைக்க வேண்டாம். நிஜம் தான்! இது தான் மிக இலகுவான அழகுக்குறிப்பும். புரிந்தவர்கள் அழகியாகி விடுவீர்கள்!!!

சரி, ஏற்கனவே அழகியாக இருப்பவர்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்கள்:

உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.

கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும். கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம்.

தினசரி எட்டு மணி நேரத் தூக்கம்.போஷாக்கான ஆகாரம். அதாவது கால்ஷியம், வைட்டமின்கள் நிறைந்த உணவு. கண்களுக்கான பயிற்சிகள். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.

ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கல்லாம்.

தற்போதய காலகட்டத்தில் நம் குழந்தைகழுக்கு  தமிழ் கற்றுக் கொடுப்பதென்றால் மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கின்றது.

தமிழ் Class களுக்கு சென்றாலும், பின்னர் வீட்டில் இருந்து   Computerல் அவற்றை சொல்லிக்கொடுக்கும் போது பெற்றோருக்கும் இலகுவாக இருக்கும், குழந்தைகளுக்கும் ஆர்வமாக இருக்கும்.

இது சம்பந்தமாக  மேற்கொண்ட ஒரு ஆய்வில்  ஆரம்பகட்டமாக சில குழந்தைகளை உற்படுத்தி Computerல் இவற்றை கற்றுக்கொடுத்தும்  மற்றும் சாதாரண முறைகளில்  கற்பிப்பது  போல் கற்றுக் கொடுத்தும், பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கையில்  குழந்தைகள்  Computerல்  கற்பதில் ஆர்வமாக இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சபைக் கூச்சமின்மை, சக குழந்தைகளுடன் பழகுதல்,  தன் சமூகத்துடன்  ஈடுபாடு என்பன இந்த Computerல் மட்டும் கற்பதனால்  கிடைக்காது   போகும்  என்ற  விடயத்தையும்  கருத்தில்   கொள்ள வேண்டும். 

கணணியில் கற்கும் முறை என்பது,  தம் குழந்தைகளை தமிழ் வகுப்புகளுக்கு விடமுடியாமல் இருக்கும் பெற்றோருக்கும், தமிழ் வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளின் மேலும் மேம்பட்ட அறிவுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதோ கீழே உள்ள படத்தினூடக உங்கள் மழழைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள், தமிழை வளருங்கள்!

எம் அடுத்த சந்ததியினருக்கு தமிழை கற்பிக்கும் தார்மீக பொறுப்பு எங்களுக்கே!

cooltext434595169

எழுதியவர் திரு.ச.ச.முத்து 

அரிமாஸ்டர் காலமாகிவிட்டார். கூடுதலான தொலைபேசி அழைப்புகள் மரணச் செய்தியையே காவிவருவதைப் போலவே போனசனிக்கிழமை அவரின் மரணமும் வந்தது.

அறுபத்தி ஓராவது வயதில் மாரடைப்பில் காலமான அவர் கடைசி காலங்களில் எப்படி இருந்திருப்பார்?

எங்களுக்கு இன்னமும் அரிமாஸ்டர் எங்களுடைய 9ம் வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் விஞ்ஞான ஆசிரியராகவும் அறிமுகமான(1974ம்ஆண்டு) அந்தநாள்தான் நினைவில் நிற்குது.

அதற்குப் பின்னர் இரண்டு வருடங்கள் எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரின் கல்லூரியுள்ளும் கல்லூரிக்கு வெளியேயுமான எல்லா அசைவுகளிலும் அரிமாஸ்டர் பெரும் பங்குகொண்டிருந்தார்.

அரிமாஸ்டர் எங்கள் வகுப்புக்கு வந்த பொழுது  ஈழத் தமிழினத்தின்  வரலாற்றை இன்னொரு போராட்ட பரிமாணத்துக்கு  கொண்டுபோக அந்த 1974, 1975ம் ஆண்டுகள் முனைந்து நின்ற நேரமது.

அவர்பரீட்சைக்கு கற்பிக்கும் சம்பிரதாய ஆசிரியரின் வேலையுடன் அப்போது வடக்கு கிழக்கில் மேலெழுந்து வந்து கொண்டிருந்த தமிழீழ தாயகக்  கோட்பாட்டின் நியாயத் தன்மைகள் மற்றும் மிதவாதத் தலைமைகள் இயல்பாகவே இயற்கையாகவே செயலிழந்துபோகும் அன்றைய போக்குகள் பற்றியெல்லாம் எங்களுடன் அந்த வகுப்பறைக்குள் உரையாடியது இப்போதும் நினைவுகூரத் தக்கது.

அவருடைய துறையான ‘விஞ்ஞானம் கற்பித்தல்’ என்ற வரையறைக்குள் அவர் தன்னுடைய முழு ஆளுமையையும் எங்கள் வகுப்பின்மீது அக்கறையுடன் செலுத்தினார்.

எங்கள் வகுப்புக்கு பிரம்பில்லாமல் வந்துபோகும் ஒரே ஆசிரியராக அவர் இருந்திருக்கிறார்.

அரிமாஸ்டர் மிகவும் விருப்புடனேயே தன்னுடைய ஆசிரிய வேலையை முழுஈடுபாட்டுடன் செய்துவந்தவர். அவர் படித்து வளர்ந்த சிதம்பராக் கல்லூரியிலேயே ஆசிரியராக இடம் கிடைத்ததும் அவரின் முழு ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அறிவுஊட்டுதல் ஆற்றல்வளர்த்தல் போன்ற இரு தளங்களிலும் அவரின் கரிசனையும் செயல்பாடும் முழுதாக இருந்தது.

அரிமாஸ்டர் நிறைய சொல்லித்தந்தார்.தன்னால் முடிந்த வரையிலும்  அதற்கு  அப்பாலும்  மாணவர்களை வெற்றியாளர்களாக உருவாக்க முனைந்த அந்த நல்லாசிரியருக்கு  எங்களின்  நன்றியறிதலே  நல்ல அஞ்சலிகளாகும்.

அவரின் இழப்பால் பெரும்துயருடன் இருக்கும் அவரின் மனைவி மகள் மற்றும் உறவினர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த ஆறுதல்கள்.

எங்களின் மாணவப்பருவத்தையும் அந்த அற்புதமான சிதம்பராக் கல்லூரியையும்  நினைக்கும் போதெல்லாம் அரிமாஸ்டரின் நினைவும் அதனுடன் கட்டாயம் எம் நெஞ்சுள் எழும்…!

 நன்றியுடன்

 ச.ச.முத்து

 arimaster

தோற்றம் 12.12.1948                                             மறைவு 19.09.2009

வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் திரு. இரத்தினசிகாமணி சச்சிதானந்தம் (அரி மாஸ்டர்) அவர்கள் செப்டம்பர் மாதம் 19ம் திகதி அன்று சனிக்கிழமை திருச்சியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் – ராஜலட்சுமி ஆகியோரின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பாக்கியலட்சுமி ஆகியோரின் மருமகனும், ராஜலட்சுமியின் கணவரும், ரெளத்ரியின் தந்தையும், விமலனின் மாமனாரும், காலம்சென்ற தேவசிகாமணி, வடிவுடையம்மா (இந்தியா), புத்திரசிகாமணி (புத்திங் – இந்தியா) குணஈஸ்வரி (கனடா), சுகுமார் (கனடா) ஆகியோரின் சகோதரும்.

நிர்மலாதேவி (கொழும்பு), குகநாதன் (இந்தியா), பிரேமச்சந்திரன் (கண்ணன் – கனடா), ஷோபா (இந்தியா), தங்கத்திரவியம் (சாந்தி – கனடா), வள்ளிநாயகி (கிண்ணியம்மா – இந்தியா), நித்தியானந்தவேல், மகாலட்சுமி (இலங்கை), பாலசுப்பிரமணியம் (பாலி – லண்டன்), சதானந்தவேல் (அப்பி – ஜேர்மனி), சண்முகநாதன் (இலங்கை), நவலட்சுமி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

Kannan & Guneswarie – கனடா 1-416-944-3677
Sukumar கனடா 1-416-757-7666

Kuganathan- இந்தியா 91-984-043-0052

 

அடுத்த பக்கம் »