`உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழி பற்றி அறிந்து இருக்கலாம். அந்த அளவுக்கு நண்பனின் முக்கியத்துவம் இருப்பதை அறியலாம்.

உடுத்திய ஆடை நழுவிய போது பாய்ந்து சென்று மானம் காக்கும் கையைப் போன்றது நட்பு என் திருவள்ளுவர் தனது குறளில்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என அழகாகக் கூறியிருக்கின்றார். நல்ல நட்பை காசு கொடுத்துத் தனும் வாங்க வேண்டும் எனவும், தீய நட்பை காசு கொடுத்துத் தன்னும் விலக்க வேண்டும் எனவும் அதே வள்ளுவர்தான் கூறியும் உள்ளார்.

நட்புக்காக காதலை தியாகம் செய்தவன் முதல் நட்புக்காக உயிரைவிட்டவன் வரை நம் வாழ்வில் அங்குகொன்றும் இங்கொன்றுமாய் பார்த்திருக்கின்றோம்.

 

உங்களைச்சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

டாக்டர் ரிச்சர்டு டன்னி தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது உங்களுக்கு மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள 10 நண்பர்கள் இருந்தால் போதும், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல செயல்களுடன் இருப்பீர்கள் என்று தெரியவந்தது.

பல்வேறு வயதுள்ள 1760 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களிடம் இதுகுறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நல்ல நண்பர்கள் உள்ளவர்கள் திருப்தியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது தெரிந்தது.