தேவையான பொருட்கள்
வேகவைத்த மேகரோனி – இரண்டு கோப்பை
வேகவைத்த கோழி – ஒரு கோப்பை
குடமிளகாய் – ஒன்று
பச்சைபட்டாணி – ஒரு கோப்பை
சிவப்புவெங்காயம் – இரண்டு
மயோனைஸ் – ஒரு கோப்பை
முட்டை – இரண்டு
உப்புத்தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
கடுகுத்தூள் – அரைதேக்கரண்டி
சாலட் இலை(lettuce) – இரண்டு
வெங்காயத்தால் – கால்கோப்பை
 
செய்முறை

  • முட்டையை வேகவைத்து வெள்ளைபகுதியை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயம்,குடமிளகாயை பொடியாக நறுக்கிவைக்கவும்.
  • சாலட் இலையை சிறிய துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.
  • ஒரு பெரிய கோப்பையை எடுத்துக் கொண்டு அதில் சாலட் இலையைத் தவிற மற்ற எல்லாப்பொருட்களையும் போட்டு நன்கு கலக்கிவிடவும்.
  • மயோனைஸ்ஸை தேவைக்கேற்ப மேலும் சேர்த்து கொள்ளலாம்.
  • இந்த கலவையை தயாரித்து குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடவும்.தேவைபடும் பொழுது வெளியே எடுத்து சாலட் இலையை போட்டு கலந்து பரிமாறவும்.
  • சுற்றுலாவிற்கு ஏற்ற பகல் உணவாக எடுத்து செல்லலாம்.