முன்நாள்  மிஸ் சிறிலங்காவும், சிங்களத் திரைப்பட நடிகையும், மாடல் அழகியும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமான அகர்சா அனார்க்கலி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி சென்றமாதம் வெளிவந்தது.

இவர் மங்கள சமரவீர எம்.பி. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளராகவும் நடிகை அனார்க்கலி கடமைப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான, புகழ்மிக்க நடிகைகள் அரசியலில் அப்பப்ப வருவதும், வந்தவர்களில் சிலர் உச்சிக்கு சென்றதும் எமக்கு தெரியும். அழகுடன் கொஞ்சம் சாதுரியமும் இருந்துவிட்டால் இவர்களின் வளர்ச்சி சொல்லத்தேவையில்லை. நடிகை ஜெயலலிதா நல்ல ஒரு உதாரணம்.

இந்த நிலை தற்போது இலங்கை அரசியலிலும் தொற்றிக் கொண்டுள்ளது என்று சொல்வதை விட, இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  தென் மாகாண சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் களமிறக்கப்பட்டுள்ள கவர்ச்சி நடிகை தான் இந்த அனார்கலி.

வெற்றிக்காக எந்தெந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் கையாளுபவர்தான் மஹிந்த ராஜபக்சா. அவர் தனது அரசியல் வெற்றிபெற இப்படியுமா நடிகைகளை பயன்படுத்துவது என் குறை சொல்லுவீர்கள் என்றால்... நீங்கள் வேலைக்கு ஆகாத ஆள்!

வெற்றிக்காக எந்தெந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் கையாளுபவர்தான் மஹிந்த ராஜபக்சா. அவர் தனது அரசியல் வெற்றிபெற இப்படியுமா நடிகைகளை பயன்படுத்துவது என் குறை சொல்லுவீர்கள் என்றால்... நீங்கள் வேலைக்கு ஆகாத ஆள்!"

அனார்கலியின்   நிகழ்ச்சிகள்  தற்போது தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், வர்த்தக விளம்பரங்கள், விசேட பிரசார நிகழ்ச்சிகள் ஆகியன தொடர்ந்தும் ஒளிபரப்பாகி வருகின்றன.

கடந்த வார இறுதியில் அனார்கலியின் நேரலை விசேட நிகழ்ச்சியொன்றை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் அனார்கலி குறித்த ஒளிபரப்புக்கள் அரச சார்பு ஊடகங்களில் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த விடயத்தில் அரண்டுபோன சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரஞ்சன் ராமநாயக்க தேர்தல் ஆணையாளரிடம் கடிதமூலம் இவற்றை நிறுத்துமாறு கோரிக்கக விடுத்துள்ளார்.

மெலே உள்ள  படத்தைப் பார்த்து சுளுக்கிய கழுத்துக்கு நிவாரணமாக அனார்கலியின் இந்தப் வீடியோ காட்சி.