செப்ரெம்பர் 2009


பார்த்திபன் கலைவாணி தம்பதிகளின்

புதல்வன் பிரதாபனுக்கு

இன்று இனிய பிறந்தநாள்!

prathab

இவரை அப்பா, அம்மா, தங்கைகள் ‘நிவேதா’, ‘நிவ்யா’,

அப்பாச்சி ‘வேதநாயகி’, அம்மப்பா ‘Dr.பலகிருஷ்னன்’, அம்மம்மா ‘நிர்மலாதேவி’,

மாமாமார் ‘கேதீஸ்’, ‘கண்ணா’, மாமிமார் ‘மதுரா’, ‘கிருஜாந்தினி’,

சித்தி ‘கலைஅரசி’, மச்சாள் ‘அபிராமி’

மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

சிரிப்பாகவும், சிந்திக்கும் படியாகவும் கதைகள் சொல்லிவந்த ஒரு கலைஞர் தான் தென்கச்சி கோ. சுவாமிநாதன்

சன் தொலைக்காட்சி, சென்னை வானொலி போன்றவற்றில் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஒலிபரப்பான “இன்று ஒரு தகவல்” மூலம் லட்சோப லட்சம் நேயர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தென்கச்சி கோ. சுவாமிநாதன் (63) மாரடைப்பால் இன்று காலமானார்.

இந்தியாவில் இருந்த காலங்க்களில், வானொலியில் காலை 6.30 மணியளவில் தென்கச்சியின் குரலை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்.

அவருக்கு மனைவியும் மகளும் உண்டு.

வேளாண்மைப் பட்டதாரியான சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கினார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரைச் சுருக்கி “தென்கச்சி’ என்று அழைக்கப்படலானார்.

1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஆசிரியராகி சென்னைக்கு வந்தார். பிறகு உதவி இயக்குநராக பணி ஓய்வு பெற்றார்.

சிறந்த எழுத்தாளராகவும், நகைச்சுவைப் பேச்சாளராகவும் திகழ்ந்த அவர் நல்ல சிந்தனையாளர். அவருடைய ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவருக்கும் பொதுவான வல்லமைமிக்க இறைவனைப் பிராத்திக்கிறோம்

முன்நாள்  மிஸ் சிறிலங்காவும், சிங்களத் திரைப்பட நடிகையும், மாடல் அழகியும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமான அகர்சா அனார்க்கலி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி சென்றமாதம் வெளிவந்தது.

இவர் மங்கள சமரவீர எம்.பி. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளராகவும் நடிகை அனார்க்கலி கடமைப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியான, புகழ்மிக்க நடிகைகள் அரசியலில் அப்பப்ப வருவதும், வந்தவர்களில் சிலர் உச்சிக்கு சென்றதும் எமக்கு தெரியும். அழகுடன் கொஞ்சம் சாதுரியமும் இருந்துவிட்டால் இவர்களின் வளர்ச்சி சொல்லத்தேவையில்லை. நடிகை ஜெயலலிதா நல்ல ஒரு உதாரணம்.

இந்த நிலை தற்போது இலங்கை அரசியலிலும் தொற்றிக் கொண்டுள்ளது என்று சொல்வதை விட, இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  தென் மாகாண சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் களமிறக்கப்பட்டுள்ள கவர்ச்சி நடிகை தான் இந்த அனார்கலி.

வெற்றிக்காக எந்தெந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் கையாளுபவர்தான் மஹிந்த ராஜபக்சா. அவர் தனது அரசியல் வெற்றிபெற இப்படியுமா நடிகைகளை பயன்படுத்துவது என் குறை சொல்லுவீர்கள் என்றால்... நீங்கள் வேலைக்கு ஆகாத ஆள்!

வெற்றிக்காக எந்தெந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் கையாளுபவர்தான் மஹிந்த ராஜபக்சா. அவர் தனது அரசியல் வெற்றிபெற இப்படியுமா நடிகைகளை பயன்படுத்துவது என் குறை சொல்லுவீர்கள் என்றால்... நீங்கள் வேலைக்கு ஆகாத ஆள்!"

அனார்கலியின்   நிகழ்ச்சிகள்  தற்போது தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், வர்த்தக விளம்பரங்கள், விசேட பிரசார நிகழ்ச்சிகள் ஆகியன தொடர்ந்தும் ஒளிபரப்பாகி வருகின்றன.

கடந்த வார இறுதியில் அனார்கலியின் நேரலை விசேட நிகழ்ச்சியொன்றை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் அனார்கலி குறித்த ஒளிபரப்புக்கள் அரச சார்பு ஊடகங்களில் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த விடயத்தில் அரண்டுபோன சப்ரகமுவ மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரஞ்சன் ராமநாயக்க தேர்தல் ஆணையாளரிடம் கடிதமூலம் இவற்றை நிறுத்துமாறு கோரிக்கக விடுத்துள்ளார்.

மெலே உள்ள  படத்தைப் பார்த்து சுளுக்கிய கழுத்துக்கு நிவாரணமாக அனார்கலியின் இந்தப் வீடியோ காட்சி.

 

 

 

selvarethinam

பிறப்பு : 19 06 1930            இறப்பு : 13 09 2009

வல்வையை பிறப்பிடமாகவும் இந்தியாவில் திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வரெத்தினம் அவர்கள் 13.09.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை பார்வதம் தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்ற வடிவேலு சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுவீப் பொன்னுத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முத்துலட்சுமியின்(இன்பருட்டி) சகோதரியும்,

செல்வமலர்(இந்தியா), வசந்தமலர்(டென்மார்க்), நிர்மலாதேவி(இந்தியா), சாந்தகுமாரி(இந்தியா), யோகேந்திரன்(இந்தியா), காலஞ்சென்ற சந்திரகுமாரி, சிவகுமார்(UK ), பாலகுமார்(UK ), செல்வகுமாரி(நோர்வே), ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற அழகுசுந்தரம், செல்வக்கதிரமலை(டென்மார்க்), இலட்சுமிகாந்தன்(இந்தியா), சூரியலிங்கம்(இந்தியா), வரலட்சுமி(இந்தியா), காலஞ்சென்ற அருட்சிவம், சுபோஜினி(UK ), ஜெயவாணி(UK ), கருணாகரன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற சுதாகரன், காலஞ்சென்ற ரஜனி, மாலினி, பிரபாகரன், உமாகரன், தவச்செல்வம், ரூபறாணி, சத்தியப்பிரியா, காலஞ்சென்ற வான்மதி, சந்திரமதி, பிறேமலதா, காலஞ்சென்ற ராஜ்மோகன், ராதிகா, பிரகாஷ், ரமேஷ், நிஷா, மயூரன், கமலதாசன், சந்திரதாசன், ஜீவிதா, அசோகதாசன், கஜந்தன், ப்ரீத்தா, தினேஷ்குமார், சதீஷ்குமார், திலீபன், லகஷன், விதுஷன், சந்தோஷ், சாருகன், சரண், ஜெயகாந், ஜெயதீபன் ஆகியோரின் பேத்தியும்,

ஓவியா,நித்தியா, இனியா, சினேகா, தூயவன், பிரித்திகா, மதுமிதா, சயன், கீர்த்தன், ரிதன், கிஷோக், மணிகண்டன், சந்தியா, விஜயபாஸ்கர், பிருந்தவன், துஷிதா, சஞ்சயன், சைரா, சரிஸ், தருண், குறிஞ்சிகன், ஆருகன், நிலானி, சஞ்ஜீவன், ஆரியன், ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14.09.2009 திங்கட்கிழமை அன்று திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
 
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

யோகேந்திரன் – இந்தியா
தொலைபேசி: +914312455558
சிவகுமார் – பிரித்தானியா
தொலைபேசி: +442476726843
பாலகுமார் – பிரித்தானியா
தொலைபேசி: +442081492487

 

senthilmani

பிறப்பு : 25 -10-1948 — இறப்பு : 12- 09-2009

வல்வையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செந்தில்மணி என அழைக்கப்படும், பகவதியம்மா சத்தியமூர்த்தி அவர்கள் 12.09.2009 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், முன்னாள் அமுதா ஹோட்டல் உரிமையாளர்  திரு.சந்தியமூர்த்தியின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவரான ஸ்ரீஸ்கந்தராஜா மல்லிகைக்கண்டு அவர்களின் மூத்தமகளும், காலஞ்சென்ற பேரம்பலம் தங்கரத்தினம் அவர்களின் அன்புமருமகளும்,

ஜெகநாதன், மேனகா ஆகியோரின் அன்புத்தாயாரும், மஞ்சுவின் அன்புமாமியாரும், டிலக்சனின் அன்புப்பேத்தியாரும்,

யோகராசா, ஆனந்தராசா, தவராசா, காலஞ்சென்ற துரைராசா, திருமதி லட்சுமிதேவி முருகையா அவர்களின் அன்புச்சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
அருண்

+447825133095

mathusanth2

mathusanth1

சுரேஸ்குமார் + செல்வம் தம்பதிகளின்

செல்வப் புதல்வன் மதுஷாந்த்

தனது முதலாவது பிறந்ததினத்தை அம்மா, அப்பா,

பேரன் திரு.இ.ஈஸ்வரபாதம் + பேத்தி திருமதி ஈ.சின்னமாமயில்

 மற்றும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார்.

செல்வன் மதுஷாந்தை சகல கலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்!

sakthiyaa2

sakthiyaa2

பிரேம்குமார் + சுஜாதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சக்கியா தனது பிறந்ததினத்தை அண்மையில் கொண்டாடினார்.

இவரை அம்மா, அப்பா, பேரன் திரு.இ.ஈஸ்வரபாதம் + பேத்தி திருமதி ஈ.சின்னமாமயில் மற்றும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார்.

‘சக்தியா’வை சகல கலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்!

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »