கனவில் தோன்றிய காட்சிகளை புகைப்படமாக பதிவுசெய்யும் தொழில்நுட்பம் – ஜப்பானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு.

ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் மனதை வாசித்தல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் திட்ட ஒழுங்கமைப்புக்கு ஏற்ப ஒப்பீடு செய்து புகைப்படமாக மாற்றும் வல்லமை கொண்டதாகும்.

எனினும், தற்போது கறுப்புவெள்ளை புகைப்பட பிரதிமையாக காட்சிப்படுத்தப்படும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான துல்லியத் தன்மையை மேம்படுத்த, மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அட வெச்சிட்டான்யா ஆப்பு!

சிம்ரன், சினேகா, தமணா என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்களுக்கு இனி விடிஞ்சதும் விடியாததுமாய்  தலையில் இடிதான்!