மழை என்றாலே மனதுக்குப் பிடித்த ஒன்றுதான்.

திடீரென்று வானம் கருமை போர்த்தி மூடிக்கொண்டு, காற்றடிக்க காற்றடிக்ஆரம்பித்த கணம் மனசு முழுக்க சிறகடிக்க ஆரம்பித்துவிடும்.

 என்னவளும் மயிலைப்போல் மழையைக் கண்டு மகிழ்பவள். வானினிலிருந்து விழும் மழைத்துளிகளை உள்ளம் கைகளினால் பட்மிண்டன் விளையாடியது எல்லாம் ஒரு கனாக்காலம்!

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை’ என்று இந்த மழைக்குறளை திக்குமுக்காடி மனப்பாடம் செய்ததெல்லாம் பள்ளிக்காலத்து கவிதைகள்!

“வெயிலுக்கும், மழைக்கும் கல்யாணம்…” என்று ஒரு பாட்டு சிறுவயதில் பாடியது ஞாபகத்திற்கு வருகின்றது.

அப்படிப்பட்ட ஒரு கார்காலம்தான் இப்போது. இயற்கையையும், அதன் பங்குதாரரான மழையையும் ரசிப்பவர்களுக்கு இந்த பாடல் காட்சி!