2009ஆம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரைடர், ஜாக் சோஸ்டாக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Australian-born Elizabeth Blackburn, British-born Jack Szostak and Carol Greider

மரபியல் விஞ்ஞானிகளான அவர்கள் மூவரும் செல் பிரிவின் போது குரோமோசோம்கள் எப்படி அழியாமல் தொடர்ந்து டிஎன்ஏ மூலக்கூறுகளை கொண்டு செல்கிறது என்பதை கண்டுபிடித்ததன் காரணத்துக்காக அவர்களுக்கு இந்த விருது விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

60 வயதான எலிசபெத் பிளாக்பர்ன், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் உயிரியியல் பிரிவில் பேராசிரியராக இருக்கிறார். 48 வயதான கரோல் கிரைடர், பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியியல் பேராசிரியராக உள்ளார்.

லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜாக் சோஸ்டாக் தற்போது பாஸ்டனில் உள்ள மாசாசூட்ஸ் பொது மருத்துவமனையில் மரபியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

மேலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கப்படும்