ஒக்ரோபர் 2009


நம் வீட்டில் எப்போது பிரியாணி செய்தாலும் நமது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்வது போல் இருப்பது இல்லை என்ற குறை இருந்து வந்தது.  அதனால் என் இஸ்லாமிய  தோழியிடம் அவர்களின்  பிரியாணி  செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணி செய்முறை உங்களுக்காகவும்  என் எழுதியுள்ளார் கல்ப்பனா.

 

தேவையான பொருட்கள்

 • அரிசி              –   1 கிலோ
 • மட்டன்           –   1 கிலோ
 • இஞ்சி             –  100 கிராம்
 • பூண்டு            –   100 கிராம்
 • தக்காளி        –  1/4 கிலோ
 • வொங்காயம்        –  1/4 கிலோ
 • பச்சைமிளகாய்   –  10
 • பட்டை               –   10
 • லவங்கம்         –   10
 • ஏலக்காய்         –   10
 • மிளகாய் தூள்     –   1 1/2 ஸ்பூன்
 • மல்லித்தூள்        –   2 ஸ்பூன்
 • தயிர்                  –   250 கிராம்
 • எலும்மிச்சை       – 1
 • புதினா                      –    1/2     கட்டு
 • கொத்தமல்லி      –  1/2     கட்டு
 • எண்ணெய்        –   50 கிராம் (தேவைக்கு)
 • நெய்              –     50 கிராம் (தேவைக்கு)
 • உப்பு              –    தேவைக்கு
 • கேசரிப்பவுடர்      –  தேவைக்கு

அரைக்க வேண்டியவை

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.   (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்     

(நன்றி: கல்பனா)

Twinkle Twinkle little star… என்னும் அரிவரிப் பாடலை நாம் எல்லோரும் அறிவோம். அந்தப்பாடலை ‘ரேவதி சங்கரன்’ என்னும் தமிழ் நடிகைஒருவர் நகைச்சுவையாக பாடியுள்ளார். அந்தவீடியோவை ஏற்கனவே பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் பார்த்து மகிழுங்கள்!

(இந்த வீடியோவை அனுப்பிய நேயர் Kirujanthini Keatheeswaranக்கு நன்றி)

 

ஜப்பானியப் பெண்கள் உடுத்தும் ஆடைகளைப் பொருத்தவரை, பேஷனுக்கு பெயரெடுத்த பாரீஸ் நகரைப் பின்னுக்கு தள்ளிவிடும் போலிருக்கிறது டோக்கியோ. ஜப்பான் தன்னுடையப் பாரம்பரியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவி, நவீனத்துவத்தைப் போற்ற துவங்கிவிட்டது.

பெண்களுக்குப் பிடித்த ஜீன்ஸ் பேண்டில் கூட கிளாமரை கொண்டுவந்துவிட்டார்கள் அங்கே.

ஜீன்ஸில், பிகினி ஜீன்ஸ் (லோ கட்) என்கிற நவீன வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஜீன்ஸில் துவங்கிய இந்த ஆடை புரட்சி சகல துணிவகைகளிலும் வரத் துவங்கிவிட்டது. இதன் விலை சுமார் 100$ தான்.

இந்த பிகினி ஜீன்ஸை சாண்ட்ரா தனிமுரா என்ற பெண்தான் டிசைன் செய்திருக்கிறார். பாம்பின் கால் பாம்பறியுமா? அல்லது பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்று சொல்வதா?

பல நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய  நூலின் ஒலி வடிவம் அனைத்தையும் MP3 வடிவில் இங்கு பதிவேற்றப் பட்டுள்ளது. கேட்டு பயன் பெறுங்கள். 

இதனை டவுன்லோட் செய்து உங்கள் MP3 Playerல் கேட்டும் மகிழலாம்.

2009ஆம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரைடர், ஜாக் சோஸ்டாக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Australian-born Elizabeth Blackburn, British-born Jack Szostak and Carol Greider

மரபியல் விஞ்ஞானிகளான அவர்கள் மூவரும் செல் பிரிவின் போது குரோமோசோம்கள் எப்படி அழியாமல் தொடர்ந்து டிஎன்ஏ மூலக்கூறுகளை கொண்டு செல்கிறது என்பதை கண்டுபிடித்ததன் காரணத்துக்காக அவர்களுக்கு இந்த விருது விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

60 வயதான எலிசபெத் பிளாக்பர்ன், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் உயிரியியல் பிரிவில் பேராசிரியராக இருக்கிறார். 48 வயதான கரோல் கிரைடர், பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியியல் பேராசிரியராக உள்ளார்.

லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜாக் சோஸ்டாக் தற்போது பாஸ்டனில் உள்ள மாசாசூட்ஸ் பொது மருத்துவமனையில் மரபியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

மேலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கப்படும்

நேயர் S.Puni அவர்களே நீங்கள் அர்த்தமுள்ள இந்து மதம் – MP3 ஒலியில்  கேட்ட கேள்விக்கு, இந்த பகுதி உங்கள் கேள்விக்கான பதில்.

நேயர் ‘JooJoo’ எவ்வாறு MP3 கோப்புகளை  சேமிப்பது என்  வைரமுத்துவின் கவிதைகள் MP3 வடிவில் என்னும் பதிவில் மறுமொழி இட்டிருந்தார்.

உங்களுக்கும் மற்றய நேயர்களுக்கும் இந்த கேள்வி பயனுள்ளதாக இருக்கும்  (தெரிந்த புலிகளுக்கு இல்லை)

www.barthee.com அல்லது www.tamilnavigation.net மூலம் வருபவர்கள் திரையின் இடது பக்கத்தில் –  அருகே உள்ளவாறு  ஒரு பெயர்ப் பலகை சுற்றுவதைப் பார்ப்பீர்கள். அதனை கிளிக் பண்ணுவதன் மூலம், அல்லது இங்கு அந்த பலகையை கிளிக் பண்ணுவதன் மூலம் – பல MP3 பாடல் தளங்களுக்கு செல்வதற்கும், அதனை எவ்வாறு சேமிக்கல்லாம் என்பது பற்றியும் மிகவு இலகுவாக எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நேயரே.

மழை என்றாலே மனதுக்குப் பிடித்த ஒன்றுதான்.

திடீரென்று வானம் கருமை போர்த்தி மூடிக்கொண்டு, காற்றடிக்க காற்றடிக்ஆரம்பித்த கணம் மனசு முழுக்க சிறகடிக்க ஆரம்பித்துவிடும்.

 என்னவளும் மயிலைப்போல் மழையைக் கண்டு மகிழ்பவள். வானினிலிருந்து விழும் மழைத்துளிகளை உள்ளம் கைகளினால் பட்மிண்டன் விளையாடியது எல்லாம் ஒரு கனாக்காலம்!

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை’ என்று இந்த மழைக்குறளை திக்குமுக்காடி மனப்பாடம் செய்ததெல்லாம் பள்ளிக்காலத்து கவிதைகள்!

“வெயிலுக்கும், மழைக்கும் கல்யாணம்…” என்று ஒரு பாட்டு சிறுவயதில் பாடியது ஞாபகத்திற்கு வருகின்றது.

அப்படிப்பட்ட ஒரு கார்காலம்தான் இப்போது. இயற்கையையும், அதன் பங்குதாரரான மழையையும் ரசிப்பவர்களுக்கு இந்த பாடல் காட்சி!

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »