தேவையான பொருட்கள்:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1/4 கப்
பால் பவுடர் – 1 கப்
மைதாமாவு – 3/4 கப்
பால் – சிறிதளாவு
எண்ணெய் – பொரிக்க
புட் கலர் – 1 சிட்டிகை
நெய் – 1 1/2 டீஸ்பூன்

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

*3/4 கப் பால் பவுடர்+ 1/4 கப் மைதா+மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளைக்கலரில் இருக்கனும்.

*மீதமிருக்கும் பால் பவுடர்+மைதா+கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசையவும்.

*வெள்ளைக் கலரில் இருக்கும் மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி,அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து ஸ்டப் செய்யவும்.

*இப்படியாக உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

*திரும்பவும் ஒருமுறை உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கவும்.அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.

*சர்க்கரை நீர் விட்டு காய்ச்சி பிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+நெய்++பொரித்த் உருண்டைகள் சேர்க்கவும்.

*3 அல்லது 4 மணிநேரம் கழித்து பரிமாறலாம். //