என்னைப்போல் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் தான் நீயும் பிறந்தாய்!

நான் நாளை நல்லா இருக்கவேண்டும், என் வீடு, என் குடும்பம், என் உறவுகள்… இப்படி அனைத்தையும் பாதுகாக்க  வேண்டும் என்பதற்காக நீ உன் உயிரைவிட்டாய்..

உயிரை விட்டாய் என்பதைவிட உயிரைக்கொடுத்தாய் என்பதே சரி. எல்லாம் நீயே பாதுகாப்பாய் என்றுவிட்டு நான்  காதலியை  கைபிடிக்க  ஓடிவந்துவிட்டேன். உன் காதலி என்னவானாள்…? உன்காதல்தான் என்னவாச்சு…?

மூன்றுக்கு ஐந்துதரம், உணவுண்டு – உறகுகின்றேன். நீ ஒரு வேளை உணவுக்கு இலையையும், தளையையும் உண்டாயாமே..? சிலவேலை அதுவும் இல்லையாமே உனக்கு…!

நீ இறந்தபின்பும் உன்னை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்தவர்களிடம் உயிருடன் பிடிபட்டபோது உன் கதி என்னவாகி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லையே…!

இறுதியாக உன் கண்னையும் கட்டி, கையையும் கட்டி உன் தலையில் சூடிவாங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன் நீ என்ன நினைத்திருப்பாய் சகோதரா…?

உன்னை ஒருதரம் உயிருடன் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்… … … ம்… கனவாகியே போய்விட்டது…!

எனக்காக உயிரை விட்ட உனக்கு சிலதுளி கண்ணீரை காணிக்கையாக கொடுத்துவிடுகின்றேன்…!

என் உயிர் பிரியும்வரை, வாழ்நாளில் மனதில் உள்ள ஒரு குற்ற உணர்வு நீதான்…!