நவம்பர் 2009


2012ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்ற தலைப்பில் முன்னர் ஒருசமயத்தில் இட்ட பதிவின்போது பல நேயர்களின் விமர்சனத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது அந்தப்பதிவு.

இப்போது அது எல்லாவற்றையும் நேரிலே பார்ப்பது போல் ஒரு திரைப்படம் அதுவும் இம்மாதம் 13ம் திகதி உலக திரையரங்குகளில்  வர இருக்கின்றது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.

அப்போதானே முன்னெச்சரிக்கையாக ஏதாவது செய்யலாம். அல்லது இதலிருந்து தப்பித்துக்கொள்ள என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்று ஒரு முடிவுசெய்யலாம். முடிந்தால் முயற்சிசெய்துவிட்டு, ஏதேனும் நல்ல யோசனை இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 🙂

இதோ அந்தப் படத்தில் இருந்து ஒரு காட்சி!

 முன்னர் இது சம்பந்தமாக இட்ட பதிவுகள்.

உலகம் எவ்வாறு அழியும்?  

உலகம் அழியும் நாள்!

ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !

இலையுதிர்காலத்தில் கனடாவில் இலைகள்  கொட்டிக்கிடக்கும்  வீதியில்  நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.

இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.

கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம்

வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…

P1

 

 இதன் தொழில் நுட்பம் இதோ…

P4

 

 

P2

 

P3

Thanks :  http://winarco.com/color-picker-pen-by-jinsun-park/ மற்றும் திரு.சேவியர்

அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே  பொய்ப் பிரச்சாரங்களை  நம்ப  வேண்டாம். அந்த  வீடியோவை  பார்க்காதவர்கள் இதோ  கீழே  பார்க்கவும். 

வல்வையில் பிறந்தவரும் தமிழ்நாடு திருச்சியில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் சந்திரலிங்கம் அவர்கள் 02.10.2009 திங்கட்கிழமை  அன்று காலமானார்.

santhira

மலர்வு : 25. 01 .1953 — உதிர்வு : 2 . 11 . 2009

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் பூரணலட்சுமி(சின்னக்கிளி) தம்பதியினரின் கனிஷ்டபுத்திரனும், சந்திரசேகரம் தவமணிதேவி(தவம்) தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுகிர்தாவின் அன்புக்கணவரும்,

கிமாலினி(லண்டன்), சுதர்சன்(கனடா), ஜெயமாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சுந்தரலிங்கம்(இலங்கை), ராசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற அன்னை கஸ்தூரிபாய்,   ஈஸ்வரலிங்கம்(கனடா), கதிர்காமலிங்கம்(இலங்கை), வனஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பாலச்சந்திரன், இளங்குமரன், யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சஞ்சய், ரசானி, சுஜித்தா, ரக்சனா, ரோசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்சுதர்சன் – கனடா  +16476687746
கிமாலினி – பிரித்தானியா  +442086822188
ஜெயமாலினி – பிரித்தானியா  +442082863055
இராசலிங்கம் – கனடா  +14167470495
ஈஸ்வரலிங்கம் – கனடா  +15145741342
வனஜா – கனடா  +15148927337

« முன்னைய பக்கம்