திசெம்பர் 2009


பல முக்கிய மாற்றங்களையும், நிகழ்வுகளையும் ஏற்படுத்திய 2009ம் ஆண்டின் ஒரு மொத்த செய்தி கண்ணோட்டம்!
2009sdysj @ Yahoo! Video

Largest Hindu temple in the world

உலகில் பெரிய இந்துக்கோயில்

மேலும் விபரம் அறிய http://www.bbc.co.uk/religion/galleries/hindutemple/

நன்றி: திரு.துரை-Toronto(e-mailல் தகவல் பரிமாரிக்கொண்டவர்)

 வல்வெட்டித்துறை, நடராஜா வீதியைச் சேர்ந்த  திருமதி.சீவரட்சகம் பாலசுப்பிரமணியம் அவர்கள்  28.12.2009 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற பாலசுப்பிரமணியம்  (நீதிமன்ற முதலியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினவடிவேல் – மனோன்மணி ஆகியோரின் மகளும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் – மகேஸ்வரி ஆகியோரின் மருமகளும், சோதிப்பிரமானந்தரின் (கனடா) சகோதரியும்,

 நவரெத்தினம் (யாழ் கச்சேரி), தர்மரெத்தினம் (கொழும்பு), தங்கரெத்தினம்(கனடா), துரைரெத்தினம் (கனடா), ஜெயரெத்தினம்(வல்வை), பத்மினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 சுலோசனா, பவானி, இந்திரசிகாமணி, நளாயினி, கெளரி, யோகானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 பிரகலாதன்(Duke), பிருந்தா, கார்த்திகா, தமயந்தி, திருக்குமரன், பிரசன்னவதனன், காயத்திரி, அனோயன், சுலக்சன், துளசி, வித்தியா, ஆர்த்திகா, பிரசாந்தி,பிரகதீஸ்வரன், திவாகர், சங்கர், ரேகா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,

   காலஞ்சென்ற சரோஜினிதேவியின் மைத்துணியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 29.12.2009ல் நடைபெற்று வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

 தொடர்புகளுக்கு:

1 416 953 1319

1 416 286 7462

ி ி !

நேய்களே, Google Street viewவில்  இடங்களை நோட்டம் விட்டுப்பார்க்கும் போது பலதடவைகள் சில அதிசய  படங்களும்,  சில  சுவார்சியமான  காட்சிகளும் இடம் பெறுவதுண்டு.

அபடிப்பட்ட ஒரு சுவார்சியமான  காட்சி  கீழே உள்ளது.   கனடிய  குடிமக்களின்  வாழ்க்கையை  என்னவென்று சொல்வது…..! 

இங்கு கிளிக்பண்ணுங்கள்

கிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது! குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புக்களோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா !

கிறிஸ்த்தவர்கள் மட்டுமின்றி, அவர்களின் மற்றய இன மதத்தவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விழா இது!

அடுத்த பக்கம் »