வியாழன், திசெம்பர் 24th, 2009


கிறிஸ்துமஸ் விழா ஒரு நாட்டின் கலை கலாச்சார உறவுகளை வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது என்றால் யாரும் அதை மறுத்துக் கூற முடியாது என்றே சொல்லலாம்!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட நிகழ்வாகத்தான் கிறிஸ்துமஸ் பெருவிழா திகழ்கின்றது! குடும்பம் என்ற ரீதியில் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுக் கிளைகளோடும் நட்புக்களோடும் நேசங்களைப் பகிர்ந்து கொள்கின்ற பரந்த, விசாலம் நிறைந்ததாக விலாசம் சொல்லுகின்ற விழாவாகப் பரிணமிக்கிறது கிறிஸ்துமஸ் பெருவிழா !

கிறிஸ்த்தவர்கள் மட்டுமின்றி, அவர்களின் மற்றய இன மதத்தவரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விழா இது!

பயணங்கள் முடிவதில்லை என்பதுபோல், இந்த பயணத்திற்கு உதவும் விஞ்ஞான கருவிகளின் கண்டுபிடிப்புக்களும் முடிவில்லைத்தான்!

நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் வைத்து திசையை அறிந்த காலத்தில் இருந்து, வரைபடம் வந்து, GPS வந்து, இப்போ இந்த MAPTOR வந்துள்ளது.

பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ் போன்று இருக்கும். இதில் எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதை உள்ளீடு செய்தால் அதுவே வழிகாட்டும். இதில் உள்ள  புரெஜெக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக் காட்டும். போகும் வழியை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும். இதன்  பின்னனியை கொஞ்சம்  ஆராய்ந்து பார்த்தால் GPS (Global Positioning System) மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து செயல்படுகிறது.

புரெஜெக்டர் மூலம் செல்ல வேண்டிய இடத்தின் மேப்-ஐ தரையில், சுவற்றில் அல்லது நம் கையில் எங்கு வேண்டுமானாலும் புரெஜெக்ட் செய்து பார்க்கலாம். அது மட்டுமின்றி மேப் -ஐ பெரிதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமோ அப்படி பார்க்கலாம்.

இதோ கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…