உலகின் மிக உயரமான கட்டடமான ‘பூர்ஜ் டுபாய்’ இன்று துபாய் நகரில் கோலாகலமாகத் திறக்கப்படுகிறது. சுமார் 820 மீற்றரும் 160 மாடிகளும் கொண்ட இந்தக் கட்டடம் கொரியாவின் சம்சுங் எஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சனால் கடந்த 5 வருடங்களாகக் கட்டப்பட்டு வந்தது.

இந் நிர்மாணப் பணியில் சுமார் 12 000 தொழிலாளர்களும் 100 கிரேன்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன். மேலும் ‘பூர்ஜ் டுபாய்’ டவரினுள்ளே பல ஹோட்டல்களும் அங்காடிகளும் நீரிணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே 1000 லக்சரி அபார்ட்மெண்ட்டுகள் உள்ளன.

தரையில் பரந்த ஒரு சதுரம் போலவும் மேலே செல்ல் செல்ல கூராக எழும்பி ஒரு கோபுரம் போலவும் காணப்படும் இந்த டவர் இஸ்லாமிய ஆர்க்கிடெக்ட்ஸ் படி ஆறு இதழ் கொண்ட பாலைவனப் பூ எனப் பெயர் பெறுகிறது. அதிக எண்ணெய் வளமும் சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பும் கொண்ட துபாயில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள வங்கிக் கடன் பிரச்சனையை இந்த டுபாய் டவர் வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2004ம் ஆண்டில் டுபாய்க்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5.4 மில்லியன் எனவும் அந்த வருடத்திலிருந்து கூடி கொண்டே வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த உயரமான கட்டடம் திறக்கப்பட்ட பின்னர் 3 மடங்கு அதிகரிப்பர் எனக் கூறப்படுகிறது