வியாழன், ஜனவரி 7th, 2010


 

தோற்றம் 10.01.1924      மறைவு 06.01.2010

வல்வையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 அன்று காலமானார். இவர் மாவட்ட காணி அதிகாரியாக பணியாற்றிய வேளை, வன்னி மாவட்டத்தில் பல தமிழர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து காணிகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வுக்கு அத்திவாரம் இட்டவர்.

அரசாங்க அதிகாரியாக இருந்தவேளை மிகவும் கண்ணியத்துடனும், நேர்மையுடனும் கடமை புரிந்ததாக சிங்கள மேல் அதிகாரிகளே இவரை மெச்சினார்கள்.

காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்  நான்கு   பிள்ளைகளின்  தந்தையார் ஆவார். அவர்களில் இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் அடங்குவர். அவர்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் இளையவர் ஆவார். ஏனைய சகோதரர்கள் டென்மார்க்கிலும் கனடாவிலும் உள்ளார்கள்.

 அன்னாரின் துனைவியார் திருமதி.பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் தொடர்ந்தும் இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

கேட்டவுடனேயே கிலியை ஏற்படுத்தும் விடயம் இது.
எவருக்குத்தான் தனது உடலை மற்றவர் பார்க்க இஸ்டமாக இருக்கும்?(முன்பின் தெரியாத ஒருவரிடம்)
ஒரு ஆசாமி அமெரிக்க விமானம் ஒன்றை வெடிவைத்து தகர்க்க முற்பட்டு மாட்டிக்கொண்டதன் பின்னர் இந்த முறை நடைமுறையில் தொடங்கிவிட்டது.
ஸ்கேன் மூலம் நிர்வாண பரிசோதனை மேற்கொள்ளும் முறை சில விமான நிலையங்களில்  அறிமுகம் ஆகியுள்ளது. பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தையும், வெட்கத்தையும் ஏற்படுத்தியுள்ள இம்முறை வெற்றி அடைந்தால், உலகின் பல்வேறு விமான நிலையங்களில் அமல் செய்யப்படலாம்.
இதன்மூலம் ஆயுதங்கள் மறைத்து எடுத்துச் செல்வது எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்கேனர் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்றும், இந்தப் படம் பாதுகாத்து வைக்கப்படாது என்றும் இவை தவறாகப் பயன்படுத்த மாட்டா என்றும் விமான நிலைய வட்டாரங்கள்  தெளிவுபடுத்தியுள்ளது. பயணிகள் இந்த ஸ்கேனர் வழியாகச் செல்லும் போது கோட் போன்ற உடைகலைக் கழற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பயணிகள் விரைவாகப் பாதுகாப்புச் சோதனையைக் கடந்து செல்ல இயலும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெரும்பாலான பயணிகள், உடல் முழுவதையும் தடவி சோதனையிடுவதை விரும்பவில்லை. அது தங்களது அந்தரங்கத்தில் தலையிடும் செயலாக உணர்கிறார்கள். எனவே இந்த ஸ்கேனர் யாரையும் தொடாமல் அவர்களுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அறிய உதவும். யாரையும் இனிமேல் உடைகளை கழற்றச் சொல்லி சோதனை போடத் தேவையில்லை.

இந்த ஸ்கேனர் மூலம் கிடைக்கும் படங்கள் ஆபாசமானவையாக இருக்காது. மேலும் இவற்றை நாங்கள் எங்குமே ஸ்டோர் செய்து வைக்கப் போவதும் இல்லை. எனவே பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.

மற்றும் பயணிகளுக்கு அருகில் இருக்கும்   அதிகாரியால் நிர்வாண உடலை பார்க்கமுடியாது எனவும், நிர்வாண உடலை பார்வையிடும் அதிகாரியால் பயணிகளை நேரடியாக பார்க்க முடியாது என்றும், இவர்கள் வேறு வேறு இடத்தில் இருப்பார்கள் என்றும்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கேனர்கள் வெளியிடும் கதிரியக்கம் மனித உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது தான் என்றும்  விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் இந்த ஸ்கேனர் மூலம் கடந்து செல்ல மறுத்தால் அவர்கள் வழக்கமான உடலை தடவிப்பார்த்தோ, அல்லது நிர்வாணமாக்கியோ சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

எல்லாம் சரி… எந்தளவிற்கு எம் உடல் நிர்வாணமாக  தெரியும் என்று அறிய ஆவலாக உள்ளவர்கள் கீளே உள்ள படங்களைப் பார்க்கவும்!

 

millimetre wave machine மூலம் scan செய்யப்படும் ஒரு பெண்ணின் தோற்றம்.

millimeter wave scanner மூலம் scan செய்யும் ஆண்மகன்

 மேலும் விபரத்திற்கு இந்த வீடியோவையும் பாருங்கள்