தோற்றம் 10.01.1924      மறைவு 06.01.2010

வல்வையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 அன்று காலமானார். இவர் மாவட்ட காணி அதிகாரியாக பணியாற்றிய வேளை, வன்னி மாவட்டத்தில் பல தமிழர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து காணிகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வுக்கு அத்திவாரம் இட்டவர்.

அரசாங்க அதிகாரியாக இருந்தவேளை மிகவும் கண்ணியத்துடனும், நேர்மையுடனும் கடமை புரிந்ததாக சிங்கள மேல் அதிகாரிகளே இவரை மெச்சினார்கள்.

காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்  நான்கு   பிள்ளைகளின்  தந்தையார் ஆவார். அவர்களில் இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் அடங்குவர். அவர்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் இளையவர் ஆவார். ஏனைய சகோதரர்கள் டென்மார்க்கிலும் கனடாவிலும் உள்ளார்கள்.

 அன்னாரின் துனைவியார் திருமதி.பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் தொடர்ந்தும் இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

Advertisements