கடந்த தைமாதம் 15ம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள தீப்பெருமநல்லூர் சிவன்கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு ஒரு நாக பாம்பு வில்வம் இலையினை மரத்தில் இருந்து பறித்து, அதனை வாயினால் கெளவிச் சென்று, மூலஸ்தானத்தில் வைத்து வளிபட்டது என்றும், அதனை ஆதாரத்துடன் வீடியோவில் பதிவாகியுள்ளதாகவும் எம் நேயர் திரு. புவனேந்திரராஜா அவர்கள் ஒரு தகவலை சொன்னார்!

கேட்கவே ஆச்சரியமாக இருந்த இந்த நிகழ்வை அதன் உண்மை நிலையை அறிய ஆசான் கூகிளின் துணையை நாடியபோது கிடைத்த வீடியோதான் கீளே உள்ளது.

இதில் முழுவதும் வீடியோ என்று சொல்லமுடியாத நிலையில், புகைப்படங்களை ஒரு வீடியோ கோப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதைவிட சரியான தகவலை பெற அந்த கோயிலுக்கு தொலைபேசிமூலம் பேச முயற்சி செய்தும் முடியாமல் இருக்கின்றது.  இதுவரை எந்த ஆதாரமும்  கிடைக்கவில்லை.

நேயர்கள் யாருக்காவது இதுபற்றி தெரிந்தால் தகவலை பரிமாரிக்கொள்ளுங்கள், அல்லது கும்பகோணத்தில் இருக்கும் நெயர்கள் யாராவது இதுபற்றி விளக்குவார்களா?