செல்பேசியை charge பண்ணியபடி பலரும் கதைத்து இருக்கின்றோம். அப்படி ஒருவர் ஒய்யாரமாக கட்டிலில் படுத்தவண்ணம் தனது செல்போசியில் கதைத்துக்கொண்டு இருந்திருக்கின்றார். என்ன நடந்ததோ… திடீரென செல்பேசி ஒரு கைக்குண்டு போல் வெடித்திருக்கின்றது!

நபர் காது, தலை, முகம் போன்ற இடங்களில் பலத்த எரிகாயங்களுடன் மூர்ச்சையாகி போக, அவசரமாக அவரது பெற்றோர் அருகில் இருந்த வைத்தியசாலைக்கு எடுத்து சென்றூம், வழியில் அவரது உயிர் பிரிந்ததுவிட்டது.

மின்சாரத்தின் ஏற்றத்தாழ்வான மின் அழுத்தத்தால் பல மின் உபகரணங்கள் வெடித்த சம்பவம் பல நடைபெற்றுள்ளது. ஆனால் செல்பேசி வெடித்து உயிரிழந்த சம்பவம் தற்போது சிந்திக்கத்தூண்டுகின்றது. செல்பேசியில் உபயோகிக்கும் Lithium Ion Batteryகள் ஆபத்தாவைதான். இந்த வகை Batteryகள் கொஞ்சம் வெப்பம் ஆனாலும் வெடிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் இவ்வகை Batteryகளை “நெருப்பில் போடாதீர்கள்” என் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

எதற்கு வம்பு? நீங்கள்  யாராவது  இந்த பழக்கத்தை கொண்டிருந்தால் உடனே நிறுத்துங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுறுத்துங்கள்!

(நன்றி: படங்களையும் கருவையும் அனுப்பியவர் Toronro நேயர் திரு.ராஜூ சோமசுந்தரம்)