நேற்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை பூமியை பாதுகாக்க உலகமக்களால் நிகழ்த்தப்பட்ட இந்த Earth Hour நிகழ்வு இம்முறை மேலும் பல மக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

எங்கள் வீட்டு 5 வயது குட்டிகூட இருட்டியதில் இருந்ந்து பல தடவைகள் மின் விளக்குகளை அணைப்பதில் மும்முரமாக இருந்ததிலிருந்து இந்த விடயம், சின்னஞ்சிறார் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது.

ஒரு மணித்தியாலம் மெழுகுவர்த்தி விளக்கொளியில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வட்டமாக சுற்றியிருந்து, பாட்டிக்கதையிலிருந்து பக்கத்துவீட்டு “பார்ட்டி” கதைவரை கதைத்தது, ஒரு சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்தது!

நீண்ட நாட்களுக்குப்பின் இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்த இந்த Earth Hour நிகழ்வு, கட்டயம் தினமும் கொண்டாட வேண்டும் என்பது என் கட்டாயமான சிபாரிசு!

சரி ஒரு சின்ன கணக்கு, எங்கள் வீட்டின் மின்சார உபகரணங்கள் அனைத்தையும் கணக்குப்போட்டு, அவை நேற்றய Earth Hour நிகழ்வில் அணைக்கப்பட்டதின் விளைவாக எமது ஒருநாளைய மின்  கட்டணத்தில் 13% த்தை  குறைத்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது! ( கணிப்பில் ~2% நழுவல் இருக்கலாம்)

சரி, அது என்ன பக்கத்துவீட்டு “பார்ட்டி” கதை?

நேற்று நடைபெற்ற Earth Hour நிகழ்வுக்கு பக்கத்துவீட்டில் (வெள்ளையர்கள்)  ஒரு பெரிய பார்ட்டியே நடைபெற்றது. அதில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர்.   வந்திருந்த அனைவரும் தம் வீட்டில் மின்சாரத்தை அனைத்துவிட்டுத்தான் வந்தார்கள். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த அந்த பார்ட்டி 11 மணிவரை சென்றது. அதில் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவித மின்சாரமும் உபயோகிக்கவில்லை என்பதுதான் சிறப்பு! மெழுகுவர்த்தி ஒளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற அந்த நிகழ்வில் வைக்கப்பட்ட உணவைக்கூட சமைக்காத உணவாகவே வைத்திருந்தனர் என்பது இன்னுமொரு சிறப்பு!

உலகிற்கும் எமக்கும் நன்மை உள்ள விடயம். ஏன் நாமெல்லாம் இப்படி செய்யக்கூடாது?

சரி ஒரு கருத்துக்கணிப்பு.

அடுத்தவருடம் Earth Hour நிகழ்வு (March 27, 2011) ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகின்றது. அன்று நாமும் இப்படியொரு நிகழ்வை  எங்கள் குடுப்பத்தாருடன் நடத்த எத்தனைபேருக்கு விருப்பம்?

Earth Hour நிகழ்வு பற்றிய ஒரு வீடியோ