ஏப்ரல் 2010


அமரர் ச.சிவசுந்தரமூர்த்தி
(மூர்த்தி மாஸ்டர் , கப்டன்)
தோற்றம் : 26 மே 1929 — மறைவு : 7 ஏப்ரல் 2009

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு துறைமுகத்திலும், வெளிநாட்டுக் கப்பல்களிலும் சேவையாற்றி இளைப்பாறி திருச்சி சுந்தர் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ச.சிவசுந்தரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.

என்ற தெய்வப்புலவரின் பொய்யா மொழிக்கமைய வாழ்ந்த உழைப்பின் சிகரமாய் பலரின் உயர்வுக்கு ஏணிப்படியாய் உதவிய மாஸ்டர் என்ற மூர்த்தி மாஸ்டர் விண்ணுலகை அடைந்து ஒரு வருடம் அடைந்துவிட்டது. விண்ணுலகை அடைந்தாலும் இன்னும் எங்கள் மனங்களின் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.
 
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — இந்தியா
தொலைபேசி: +919865259914

எழுபதுகளில் மிகப்பிரபலமாக இருந்த பொப்பிசை BonyM. கொஞ்சம் நாங்கள் நாகரீகமானவர் என காட்டிக்கொள்ள இந்த BonyM பாடல்கள் அன்றைய மக்களிடத்தில் முனு முனுக்கப் பட்டதுடன், பிறந்தநாள்வீடுகள், கல்யாணவீடுகள், தேனீர் கடை… இப்படி பல இடங்களில் இப்பாடல்கள் சக்கை போடு போட்டது.

ஒருவர் தம் ரேடியோவில் எவ்வளவு சத்தம் வரும் என சோதிக்கும் அளவிற்கு இப்பாடல்கள் அலற அலற பாடியது இத்தனை  வருடம்  கழித்தும்  இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றது.

தமிழ் சினிமா பாடல் உட்பட பல வேற்று மொழி சினிமாக்களும் இந்த BonyM பாடல்களை அனியாயத்துக்கு காப்பி அடித்து தம்மை பிரபலப்படுத்திக் கொண்டனர். இப்படி தம்பாடலை காப்பி அடிப்பது பற்றி MonyM கண்டுகொள்ளவே இல்லை என்பது இன்னமும் அதிசயந்தான்.

மேற்கத்திய இசையை பட்டி தொட்டிவரை கொண்டுசென்ற இந்த BonyM பாடல் தற்போது இந்தியர் எப்படி பாடி அசத்தியுள்ளனர் என் இங்கு பாருங்கள்!

இதோ அந்த நாள் ஞாபகங்களை மீட்க நிஜ BonyM பாடல்கள் சில

கனடா தமிழ் பொண்ணு… கனடா தமிழ் பையன்கள்… கனடா தமிழ் இயக்குனர்… கனடா தமிழ் பாடலாசிரியர்… கனடா தமிழ் சினிமா… எல்லாமே இங்கு பார்க்கலாம்!!??!

இந்தியாவில் புதிதாக அமைந்துள்ள இந்த சிவன் ஆலயம், அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு சிவாலயம்.

அரபுக்கடலில் ஒரு குடாநாடு போன்ற நிலப்பரப்பில் அழகாகவும், கம்பீரமாகவும் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய இடத்தை அறிமுகம் செய்து வைக்கின்றார் எம் நேயர் திரு. Sivacantharasa Thurairatnam அவர்கள்.

உலகிலே உயரமான சிவன் சிலை இங்குதான் உள்ளது. உரயம் 123 அடிகள்! எப்பவும் சூரிய ஒளியைகொண்டு மினுமினுப்பாக இருக்கும் படி இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது!

அத்துடன் உலகில் உள்ள ராஜகோபுரங்களில் உயரமான ராஜகோபுரமாக இக்கோயிலில் கோபுரம் விளங்குகின்றது. இது 20 அடுக்கு மாடிகளைக்கொண்டதும் உயரம் 249 அடியையும் கொண்டது!

நூற்றுக்கணக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புக்களையும், அழகிய கடற்கரையையும் சூழவுள்ள இந்த ஆலயம் ஒரு இனிய சுற்றுலா ஸ்தலம் என்பதையும் சொல்லத்தேவையில்லை.

This slideshow requires JavaScript.

பூனாவிலிருந்து சுமார் 150கி.மீ தூரத்திலும், பொங்கலூரில் இருந்து 500கி.மீ தூரத்திலும் இக்கோயில் இருக்கின்றது.

Airport

Mangalore International விமான நிலையம் 165 km தூரத்தில் இருக்கின்றது. Hubli Airport and Goa Airport 220கி.மீ தூரத்தில் இருக்கின்றது.

Guelphல் வசிக்கும் தமிழ் மாணவி ஒருவர், தமிழ்  சமூகத்திற்கே பெருமை சேர்க்கும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்!

Sacred Heart Catholic School(Guelph)ல் கல்விகற்கும் ஹாருன்யா சற்குணராஜா என்னும் இம் மாணவி பெற்றுக்கொண்ட VIP Award உம், March 30ம் திகதி Guelph Tribune செய்தித்தாளில்  இதுபற்றி  வந்த செய்தியும் கீழே.

ஹாருன்யா, இது  போல்  பல  சாதனைகளை எதிர்காலத்தில் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்!

 பெரிதாக்கிப்பார்க்க கிளிக் பண்ணவும்.

  

 

 

« முன்னைய பக்கம்